414திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  திறம் - இருவர்பாலும் தனித்தனி சென்றது இருவரையும் கூட்டும் ஒரே நிலை பற்றியாகலின் திறம் - என ஒருமையாற் கூறினார்.
  போற்றி - கூடல் நீங்கிச் சேர்ந்த நிலையில் முதற்கண் நிகழ்ந்தது இறைவர் அருளைப் போற்றுதலேயாம்; இஃது அடிமைத்திறம் பூண்ட அன்பினில் ஊறித் தம் வசமற்ற வாழ்க்கையுடையாரிடமே யன்றிப் பிறர்பாலியலாதென்க.
  சிந்தை....வாய்ப்ப - இன்பவெள்ளத் தழுந்திய - மனநிலையே தாமாக அதனுள் மூழ்கிய; புணர்ச்சி - உள்ளக் கலப்பு.
  அழுந்திய - மூழ்கும்படி என்பர் முன் உரைகாரர்.
  வாய்ப்ப - வாய்த்தலால்.
  ஒருவருள்....உயிர் ஒன்றானார் - இவர் நிலையினுள் அவரும் அவர் நிலையினுள் இவருமாக ஒன்றுதல்; ஒன்றுதல் - இரண்டறுதல்; "ஒன்றி யிருந்து நினைமின்கள்" (தேவா); உயிர் ஒன்றாதல் - ஆன்மநேயக் கலப்பு; "ஒருவரொருவரிற் கலந்த வுணர்வால்" (3414) "அன்பு பெருகத் தழுவவிரைந் தவரு மார்வத் தொடுதழுவ, வின்ப வெள்ளத் திடைநீந்தி யேற மாட்டா தலைவார்போல், என்பு முருகி யுயிரொன்றி யுடம்பு மொன்றா மெனவிசைந்தார்" (3812-கழறிற்-65); "சேரர் பெருமா னெதிர்சென்று, தலைநாட் கமலப் போதனைய சரணம் பணியத் தாவில் பல, கலைநாட் டமுத வாரூர் தாமுந் தொழுது கலந்தனரால்" (4247- வெள்.சருக்.19); "சிந்தை மகிழுஞ் சேரலனார் திருவா ரூர ரெனுமிவர்கள், தந்த மணி மேனிகள்வேறா மெனினு மொன்றாந் தன்மையராய், முந்த வெழுங்கா தலிற்றொழுது முயங்கி" (4248 - வெள்.சருக். 20) என்ற நிலைகளில் இக்கருத்தை ஆசிரியர் நன்கு விளக்குதல் காண்க. ஈண்டு இவ்வாற்றான் ஒருமைப் படுத்திக் கூறிய தன்மை தெய்வ அருட் கவியின் பெருமித மாட்சி என்க. "பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்" (327) "சரணார விந்தமலர், சென்னியிலுஞ் சிந்தையிலு மலர்வித்து...மின்னிடையா ளுடன்கூடி விளையாடிச் செல்கின்றார்" (328) என்ற அளவில் முன்னருங் கூறி யமைந்த அருட்கவி மாட்சிமையும் ஈண்டு வைத்துக் கண்டுகொள்க. "காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவ, ராகத்து ளோருயிர் கண்டனம்" (திருக்கோவை-71) என்ற கருத்து ஈண்டு வைத்து சிந்திக்கத்தக்கது.
 

381

3536
ஆரணக் கமலக் கோயின் மேவிப்புற் றிடங்கொண் டாண்ட
நீரணி வேணி யாரை நிரந்தரம் பணிந்து போற்றிப்
பாரணி விளக்குஞ் செஞ்சொற் பதிகமா லைகளுஞ் சாத்தித்
தாரணி மணிப்பூண் மார்பர் தாமகிழ்ந் திருந்த நாளில்,
 

382

3537
நம்பியா ரூரர் நெஞ்சி னடுக்கமொன் றின்றி நின்று
தம்பிரா னாரைத் தூது தையல்பால் விட்டா" ரென்னும்
இம்பரின் மிக்க வார்த்தை யேயர்கோ னார்தாங் கேட்டு
வெம்பினா; ரதிச யித்தார்; வெருவினார்! விளம்ப லுற்றார்,
 

383

3538
"நாயனை யடியா னேவுங் காரிய நன்று! சால
ஏயுமென் றிதனைச் செய்தான் றொண்டனா! மென்னே? பாவம்!
பேயனேன் பொறுக்க வொண்ணாப் பிழையினைச் செவியாற் கேட்ப
தாயின பின்னு மாயா திருந்ததென் னாவி!" யென்பார்,
 

384