[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்415

3539
"காரிகை தன்பாற் செல்லுங் காதலா லொருவ னேவப்
பாரிடை நடந்து செய்ய பாததா மரைக ணோவத்
தேரணி வீதி யூடு செல்வது வருவ தாகி
ஓரிர வெல்லாந் தூதுக் குழல்வரா மொருவ!" ரென்று,
 

385

3540
"நம்பர்தா மடிமை யாற்றா ராகியே நண்ணி னாரேல்
உம்பரார் கோனு மாலு மயனுநே ருணர வொண்ணா
எம்பிரா னிசைந்தா லேவப் பெறுவதே! யிதனுக் குள்ளங்
கம்பியா தவனை யான்முன் காணுநா ளெந்நா?" ளென்று,
 

386

3541
"அரிவைகா ரணத்தி னாலே யாளுடைப் பரமர் தம்மை
இரவினிற் றூது போக வேவியங் கிருந்தான் றன்னை
வரவெதிர் காண்பே னாகில் வருவதென் னாங்கொ?" லென்று
விரவிய செற்றம் பற்றி விள்ளுமுள் ளத்த ராகி,
 

387

3542
றிலாப் புகழி னோங்கு மேயர்கோ னார்த மெண்ணப்
பேறிது பெற்றார் கேட்டுப் பிழையுடன் படுவா ராகி
வேறினி யிதற்குத் தீர்வு வேண்டுவார் விரிபூங் கொன்றை
ஆறிடு சடைய னாருக் கதனைவிண் ணப்பஞ் செய்து,
 

388

3543
நாடொறும் பணிந்து போற்ற நாதரு மதனை நோக்கி
நீடிய தொண்டர் தம்மு ளிருவரு மேவு நீர்மை
கூடுதல் புரிவா ரேயர் குரிசிலார் தம்பான் மேனி
வாடுறு சூலை தன்னை யருளினார் வருந்து மாற்றால்.
 

389

  3536. (இ-ள்) ஆரண....போற்றி - வேதமூலம் வெளிப்படும் பூங்கோயிலின் கண்ணே பொருந்திப் புற்றினை இடமாகக்கொண்டு ஆட்சிபுரியும், கங்கையை அணிந்த சடையாரை இடைவிடாது வணங்கித் துதித்து; பார்...சாத்தி - உலகத்தை அழகு விளங்கச் செய்யும் திருப்பதிகங்களாகிய மாலைகளையும் சாத்தி; தாரணி...நாளில் - தாமரை மலர் மாலையினை அணிந்த மணியாரங்களைப் பூண்ட மார்பினையுடைய நம்பிகள் தாம் மகிழ்ச்சியுடனே அங்கு வீற்றிருந்த நாட்களில்,
 

382

  3537. (இ-ள்) நம்பியாரூரர்...விட்டார் என்னும் - ஆரூராகிய நம்பிகள் சிறிதும் மனநடுங்காமல் அச்சமின்றி நின்று தமது பெருமானாரை ஒரு பெண்ணிடத்துத் தூது விட்டார் என்கின்ற; இம்பரின் மிக்க வார்த்தை - இவ்வுலகிலே பரந்த பழிச் சொல்லை; ஏயர்கோனார் தாம்....விளம்பலுற்றார் - ஏயர்கோன் கலிக் காமனார் தாம் கேட்டு மனம் புழுங்கினார்; அதிசயப்பட்டார்; அச்சங்கொண்டார்; மேல் வருமாறு சொல்லத் தொடங்கினார்,
 

383

  3538. (இ-ள்) நாயனை...நன்று - தலைவரை அடியவன் ஏவுதல் செய்யும் தொழில் மிக நன்று!; சால....தொண்டனாம் - மிகப் பொருத்தமாவதென்று இக்காரியத்தைத் துணிந்து செய்பவனும் ஒரு தொண்டன் எனப்படுவானாம்!; என்னே பாவம் - இது என்ன பாவம்; பேயனேன்....ஆவி என்பார் - நான் பேயேனாதலின் பொறுக்க வொண்ணாததாகிய இப்பெரும் பிழையினைக் காதினாற் கேட்க நேர்ந்த பின்பும் எனது உயிர் நீங்காது இருந்தது என்பாராகி,
 

384