| 3537. (வி-ரை) நெஞ்சில் நடுக்கம் ஒன்று இன்றி - நெஞ்சில் நடுக்கமாவது செய்யத் தகாத செயல் செய்தலில் மனம் துணியாது நடுங்குதல். தீவினையஞ்சுதலால் வருவது; ஒன்று - ஒன்றும் - ஒரு சிறிதும் என்னும் பொருளில் வந்தது. முற்றும்மை தொக்கது. |
| தம்பிரானாரைத் தூது தையல்பால் விட்டார் என்னும் இம்பரின் மிக்க வார்த்தை - தம்பிரானாரை அடியார் தூது விட்டமை ஒரு பிழை; அதுவும் தையல்பால் விட்டார் என்பது மற்றொரு பெரும்பிழை என்பார், தூது தையல்பால் என மாற்றி உரைத்தார்; இதனை மேல் இரண்டு பாட்டுக்களிற் பிரித்து விரித்தல் காண்க. இம்பரின் மிக்க வார்த்தை - இவ்வுலகில் மிகுந்த பழிச்சொல். மிக்க - பழிப்பால் மிகுந்த; "பழியும் புகழும் பெருக்கில் பெருகும்" (கோவை) என்றபடி பழிச்சொல் இவ்வுலகில் விரைவிற் பரவும் தன்மையுடையது என்பது குறிப்பு. |
| வெம்பினார்...அதிசயித்தார் - வெருவினார் - வெம்புதல் - இத்தகைய தகாத செயலும் செய்யலாமோ என மனம் வெதும்புதல் - புழுங்குதல் - மிக்க சினங்கொள்ளுதல்; அதிசயித்தல் - இன்றளவும் கேட்டுமறியாததென்று வியப்பு அடைதல்; வெருவுதல் - இது நினைத்தற்கும் கேட்டற்கும் ஒண்ணாத தென அஞ்சுதல்; வெரு - சடுதியில் நேரும் அச்சம். "வெருக் கொண்டாற் போலழுவர் குறிப்பயலாய்" (1953). (1) தையல்பால் தூது விட்டமை பற்றி அச்சமும், (2) அடியான் சொற்படி ஆண்டான் சென்றமை பற்றி அதிசயமும், (3) ஆண்டானை அடியான் ஏவியது பற்றி அச்சமும் கொண்டார். |
| விளம்பலுற்றார் - மேல் வருமாறு சொல்லத் தொடங்கினாராகி, |
| 383 |
| 3538. (வி-ரை) நாயன் தலைவர்; எசமானர். |
| நன்று - இழிவுக் குறிப்புத் தந்து நின்ற பழிச்சொல்; நன்று - தீது என மறுதலைப் பொருள் தந்து நின்றது; காரியம் - செயல் என்ற பொருளில் வந்தது. |
| சால ஏயும் என்று - மிகவும் பொருத்தமுடையதென்று கொண்டு; எண்ணி; ஏய்தல் - பொருந்துதல். சால நன்று - மிக நன்று என்பதுமொன்று. |
| தொண்டனாம் - ஆம் - சினத்தினால் எதிர்மறைப்பொருளில் வரும் வியப்புக் குறிக்கும் இடைச்சொல்; "விறலில் மேதகு மவுணராம் வலியிலார் மிகவும், வறியராகிய தேவரா மேலவர்" என்ற கந்தபுராணம் காண்க; ஆம் - தகுதியின்மைப் பொருள் தரும் இடைச் சொல்லுமாம். |
| என்னே பாவம் - இஃது எத்தனை பெரும் பாவச் செயல். |
| பேய்னேன்...ஆவி - பேய்னேன் - பேய்த் தன்மையுடையேன்; பேய்த் தன்மையாவது மெய்யுணர்ச்சியின்றி வெறுவியதாத் திரிதல்; "பித்தனேன்பேதையேன் பேயே னாயேன் பிழைத்தனகள்" (தேவா); கேட்கவுந் தகாத பெரும் பிழையாகிய சிவாபராதத்தைக் கேட்ட பின்னும் உயிர் போகாது உடல் தாங்கி நிற்றல் இங்குப் பேய்த்தன்மையாகிய மெய்யுணர்ச்சியின்மை எனப்பட்டது. இதனைப் பொறுக்கவொண்ணா....ஆவி ஆதலின் பேயனேன் எனக் காரணப் பொருள்பட மேற்றொடர்ந்து கூறுதல் காண்க. |
| பொறுக்க வொண்ணா - தீர்வு தேடாது உடல் தாங்கலாகாத; பொறுத்தல் - உடல் தாங்குதல். |
| பின்னும் - உம்மை இழிவு சிறப்பு. |
| கேட்பதாயின் பின்னும் என் ஆவி மாயாதிருந்தது - என்க. தகாத கேள்வி கேட்ட மாத்திரையில் உயிர் போதல் தலையன்பின் றிறம்; இதனால் தலையன் |