420திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  எண்ணப்பேறு - எண்ண வருவதாகிய பேறு; செற்றம் பற்றிய நிலையே பேறாகும் என்பதாம். பெரியோர்களது திருவுள்ளத்தினுள் எவ்வாறேயாயினும் எண்ணம் வரப் பெறுதலே ஒருவருக்குச் சிறந்த பாக்கியம் என்பதும், அதுவே அவனுக்குத் திருந்தும் வழி தருவதாகும் என்பதும் மூதறிஞர் துணிபு; "கூறிப் பணிகொள்ளாது ஒறுத்தா லொன்றும் போதுமே" (திருவா);
  பேறிது பெற்றார் - நம்பிகள்; கலிக்காமனார் செற்றம் பற்றி எண்ணியதனைப் பேறெனக் கொண்ட பெருமை வாய்ந்தவராதலின் அவ்வாற்றாற் கூறினார்.
  பிழை உடன் படுவாராகி - தாம் செய்தது பிழை என்பதனை உடன்பட்டு ஒப்புக்கொள்வாராகி; நம்பிகளது இப்பெருந்தன்மை உலகுக்கு வழிகாட்டி நிற்பதாம். இது கண்டு தக ஒழுகினால் மக்கள் நலம் பெறுவர் என்பது துணிபு.
  இனி இதற்கு வேறு தீர்வு - என்க; தீர்வு - கழுவாய்; பிராயச்சித்தம் என்பது வடமொழி வழக்கு; இனி - தீங்கு நிகழ்ந்து விட்டமையான் மேற்செய்யக் கடவது என்பதாம். வேறு தீர்வு - சிவாபராத மாதலின் ஏனைய பழிகள் போலன்றித் தனித்திறம் படைத்த பெருங் கழுவாய் வேண்டப்படுவதென்றபடி. இதுற்கு - சிவாபராதத்துக்கு - கலிக்காமனாரது; செற்றத்துக்கு என்றலுமாம்.
  வேண்டுவார் - வேண்டுவாராகி; முற்றெச்சம்.
  விரிபூ....விண்ணப்பஞ் செய்து இறைவரால் ஆளாகக் கொள்ளப்பட்டாராதலின் தாம் வேண்டுவனவற்றை யெல்லாம் அவர்பால் விண்ணப்பித்தே பெறும் நியமம் குறித்தது; அன்றியும் சிவாபராதத்துக்கு அவனருளே யன்றி வேறு கழுவாய் நூல்களுள் வகுக்கப்படாமையின் சடையார்பால் விண்ணப்பித்தனர் என்றலுமாம்; சடையார் - பிழைத்தாரையும் பொறுத்தற்கிடமாகிய சடை என்றது குறிப்பு.
  விண்ணப்பஞ் செய்து போற்ற - என வரும்பாட்டுடன் முடிக்க.
 

388

  3543, (வி-ரை) நாடொறும் பணிந்து போற்ற - முன் கூறியவாறு விண்ணப்பித்துத் துதிக்க; ஆன்மார்த்த பூசையில் ஆளுடையார்பால் வேண்டுவனவற்றை விண்ணப்பிக்கலாமென்றும், ஒன்றும்வேண்டாது பூசித்துப்பூசையின் பலனையும் அவர் பாலே அர்ப்பணம் செய்தல் வேண்டுமென்றும் இவ்வாறு இரண்டு மரபுகளுண்டு. இவை காமியம், நிட்காமியம் எனப்படுவன. சிவபூசையில் இலயாங்கம் போகாங்கம் என்றவற்றுள், இலயாங்க பூசை என்ற பகுதியின் இறுதியில், "வேண்டுவனவற்றை விண்ணப்பிக்க" என்று சிவாகமங்கள் விதிக்கின்றன. அம்முறை பற்றி நாள்தோறும் நம்பிகள் தம் ஆளுடையாராகிய ஆரூர்ப்பெருமானிடம் விண்ணப்பித்துப் போற்றினர் என்க. திலகவதியம்மையார் தமது தம்பியாராகிய மருணீக்கியார் பொருட்டுச் "சுடரொளியைத் தொழுதென்னை, ஆண்டருளி நீராகி லடியேன்பின் வந்தவனை, ஈண்டுவினைப் பரசமயக் குழிநின்று மெடுத்தருள, வேண்டுமெனப் பலமுறையும் விண்ணப்பஞ் செய்தனர்" (1311) என்ற வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது.
  நாடொறும் - இவ்வாறு ஒரு நாளன்றிப் பல நாளும் இடை விடாது என்க.
  நாதரும் - அதனை நோக்கி - நோக்கி - திரு உள்ளத்திற் கொண்டு ஆளும் கருணை கூர்ந்து; நோக்குதல் - அதனுள் ஊன்றிக் கருதுதல்.
  நீடிய - அன்பினால் நீடிய; பழமையால் நீடிய என்றலுமாம்; அன்பினால் நீடுதலாவது இறைவர்பால் வைத்த அன்பின் பெருக்கமொன்றே காரணமாகப் பெருகுதல்; ஈண்டு, உயர் குடியிற் பிறந்து விளங்கும் கலிக்காமனார் நம்பிகள்பாற் செற்றங் கொண்டு பிணங்கியதும், நம்பிகள் அதனை உடன்பட்டதும் ஆளுடைய இறைவர்பால்