| ளிய சூலையானது அனலிற் காய்ச்சிய வேல் குடைவது போல மேன்மேலும் வேதனையைச் செய்ய; மிக அதற்கு....போற்றுகின்றார். அதற்கு மிகவும் உள்ளுடைந்து வருந்தி விழுந்து பூதநாயகராகிய சிவபெருமானுடைய பொன்னடிகளைப் பற்றிக் கொண்டு துதிப்பாராகி, |
| 390 |
| 3545. (இ-ள்) சிந்தையால்....செய்ய - அன்புடைய அந்த வேயர் பெருமானார் மனத்தாலும் வாக்கினாலும் இறைவரது சீர்செய்யும் திருவடிகளைப் போற்ற; எந்தமை.....ஈசர் - எமது தலைவராகிய ஏயர்கோனார் பக்கம் இறைவர் எழுந்தருளி; வந்து உன்னை.....அருள் செய்ய - வந்து உன்னை வருத்துகின்ற சூலை நோய் வன்றொண்டன் தீர்த்தாலன்றி வேறு வழியால் முன்னால் நீங்காது என்று மொழிந்து அருளிச் செய்ய; கேட்டு - அதனைக் கேட்டு, |
| 391 |
| 3546. (இ-ள்) எம்பிரான்! - எமது பெருமானே!; எந்தை தந்தை.... என்னை - எனது தந்தையும் அவர் தந்தையும் மேலும் அவர் தந்தையும் எமது கூட்ட முழுவதும் எங்களைக் காக்கும் பெருமானார் தேவரீரே என்று வழிவழியாகத் தேவரீரது திருவடிச் சார்புபற்றியே வாழ்ந்து வருகின்ற இவ்வுலகிற் பெருகிய வாழ்க்கையினையுடைய இத்தன்மையனாகிய என்னை; நின்று.....வந்து - பெருகி நின்று வருத்தும் சூலையினை வம்பாகத் தேவரீரால் ஆண்டுகொள்ளப்பட்ட ஒருவனே வந்து தீர்ப்பவன்? |
| 390 |
| 3547. (இ-ள்) மற்றவன்.....நன்றால் மற்று அந்த வன்றொண்டன் தீர்ப்பதினும் அந்நோய் தீராமல் என்னை வருத்தலே நன்றாகும்; பெற்றமேல்....யாரே - இடபக் கொடியினை உயர்த்த பெருமானே! தேவரீர் செய்யும் அருளிப்பாடுகளின் பெருமையினை யாவரே அறிந்தவர்?; உற்ற.... செய்தீர் என்ன - புதிதாகப் பொருந்திய வன்றொண்டனுக்கே ஆகின்ற உறுதியினையே செய்தீர் என்று கூறி வருந்த; கற்றை....அன்றே - கற்றையாக நீண்ட சடையினையுடைய பெருமானாரும் அவர் முன்பு நின்றும் அப்பொழுதே மறைந்தருளினர். |
| 391 |
| இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன, |
| 3544. (வி-ரை) ஏதமில் பெருமை செய்கை - இறைவர்பாலே தமது உயிரினும் சிறந்த அன்பு பூண்டு அதன்வழியே ஒழுகிய தொண்டின் உறைப்புடையாராதல் குறிப்பு. சரித நிகழ்ச்சியின் பல பகுதிகளிலும் வைத்து இத்தன்மை விளங்கக் கண்டு கொள்க, பக்கல் - பக்கம்; மொழியிறுதிப் போலி; |
| அருளும் சூலை - அருளுருவாகி வந்ததென்பது குறிப்பு. முன்பாட்டில் அருளினார் (3543) என்றதும், ஆண்டுரைத்த குறிப்புக்களும் காண்க; ஆளுடைய அரசுகள் பக்கல் இறைவன் சூலை நோய் அருளிய வரலாறுகள் ஈண்டு நினைவு கூர்தற்பாலன; "மலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்தடையு, மிவ்வாழ்வு மிவ்வாழ்வு பெறத்தரு சூலையினுக் கெதிர்செய் குறை யென்கொல்?" (1338) என்று அரசுகள் சூலையினைப் போற்றிய தன்மையும் கருதுக. அருளும் - "சூலை வேதனை தன்னைக் கண்டரு நெற்றிய ரருள" (1314) |
| அனல் செய் வேல் குடைவ தென்ன - அனல் செய் - அனலிற் காய்ச்சுதலைச் செய்யப்பட்ட; செய் என்பது காய்ச்சுதலைச் செய்யப்பட்ட என்ற பொருளில் வந்தது; காய்ச்சுதல் இடநோக்கி அவாய் நிலையான் வந்தது; செய் - செயப்பாட்டுவினை; அனல் - ஏழனுருபு தொக்கது; அனல்செய் - அனலின் தன்மை செய்யப்பட்ட என்றலுமாம்; |