| குறியாகக் கழல் என்றார். கழல் - ஈண்டு வெற்றிக்குறி என்ற பொதுமையை உணர்த்திய குறிப்புமாம். நம்பிகள் அரசர் திருவுடையாராதலின் அணிந்த கழல் என்பதுமாம். ஏயர்கோனார் வணங்கி வீழ்ந்தபோது நம்பிகள் திருவடி பெயர்க்கக் கழல் ஒலித்த குறிப்புமாம். |
| வீழ்ந்தார் - தன் வயமிழந்து வீழ்ந்தனர் என்பது; தமது முன்னை நினைவுகளையும், தாமே பிழைபட்டதனையும் நினைந்து மனமுருகிய நிலையினால் அவசமாயினர்; இரண்டிடத்தும் வீழ்ந்தார் என்றது அவர் வீழ்ந்த கருத்துப் பற்றியே இவரும் வீழ்ந்தார் என்ற குறிப்பும் தருவது காண்க. |
| புவனம் போற்ற வானோர் மலரின்மாரி பொழிந்தனர் என்க; புவனம் - நில வுலகத்துள்ளோர்; வானோர் சிவனருள் வெளிப்பாடு கண்டு பொழிந்தனர்; உலகரும் அது கண்டு போற்றினர் என்க. புவனம் - இடவாகு பெயர். |
| 405 |
3560 | இருவரு மெழுந்து புல்லி யிடைவிடா நண்பி னாலே பொருவரு மகிழ்ச்சி பொங்கத் திருப்புன்கூர்ப் புனிதர் பாதம் மருவினர் போற்றி நின்று, வன்றொண்டர் தம்பி ரானார் அருளினை நினைந்தே "யந்த ணாள"னென் றெடுத்துப் பாடி, | |
| 406 |
3561 | சிலபகல் கழிந்த பின்பு திருமுனைப் பாடி நாடர் மலர்புகழ்த் திருவா ரூரின் மகிழ்ந்துடன் வந்த வேயர் குலமுதற் றலைவ னாருங் கூடவே குளிர்பூங் கோயில் நிலவினார் தம்மைக் கும்பிட் டுறைந்தனர் நிறைந்த வன்பால். | |
| 407 |
| 3560. (இ-ள்) இருவரும் எழுந்து புல்லி இருவர்களும் (வீழ்ந்து வணங்கிய நிலையினின்றும்) எழுந்து தழுவிக்கொண்டு; இடைவிடா....பொங்க - இடையறாத நண்பினுடனே ஒப்பற்ற மகிழ்ச்சி மேன்மேலும் பொங்க; திருப்புன்கூர்....நின்று - திருப்புன்கூரிற் சென்று அங்கு விளங்க வீற்றிருந்தருளிய இறைவரது திருவடிகளிற் பொருந்த வணங்கித் துதித்து நின்று; வன்றொண்டர்....பாடி - வன்றொண்டராகிய நம்பிகள் தமது பெருமானாரது திருவருளினை நினைந்து "அந்தணாளன்" என்று தொடங்கிப் பாடியருளி, |
| 406 |
| 3561. (இ-ள்) சிலபகல் கழிந்தபின்பு - சில நாட்கள் இவ்வாறு செல்ல; திருமுனைப்பாடி நாடர் - திருமுனைப்பாடி நாடராகிய நம்பிகள்; மலர்புகழ்....வந்த - விரிந்த புகழினையுடைய திருவாரூரிலே மகிழ்ச்சியுடன் தம்முடன் கூடத் தொடர்ந்து வந்த; ஏயர்....கூடவே - ஏயர் மரபில் வந்த தலைவராகிய கலிக்காமனாருடன் கூடவே; குளிர் பூங்கோயில்....அன்பால் - குளிர்ந்த பூங்கோயிலின்கண் நிலைபெற எழுந்தருளிய இறைவரை கும்பிட்டு நிறைந்த அன்பினாலே அங்குத் தங்கியருளினார். |
| 407 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன. |
| 3560. (வி-ரை) இருவரும் எழுந்து புல்லி - எழுந்து - "வன்றொண்டர் வணங்கி வீழ்ந்தார்" (3558); "ஏயர் கொற்றவனாரும் நம்பி குரைகழல் பணிந்து வீழ்ந்தார்" (3559) என்றபடி இருவரும் வீழ்ந்த நிலையிற் கிடந்தார்களாதலின் அந்நிலையினின்றும் எழுந்து; புல்லுதல் - தழுவிக்கொள்ளுதல்; இஃது அன்புடையார் தலைப்பெய்யும் கூட்டத்தின் நிகழும் மெய்ப்பாட்டுவகை. |
| இடைவிடா நண்பு - முன்போலன்றி, இடையறாத தொடர்புடைய நட்பு. |