46திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

மைந்தன் - ஈகையின் வல்லமை; புள்எலாம் சென்று சேரும் - பறவைகள் எல்லாம் தத்தம் இருக்கைகளுக்குச் சென்று சேரும் இடமாகிய; புட்கள் பிறரால் வரும் அபாயமின்றி வாழும் நல்லிருக்கை என்பது; உயிர்கள் மலவர்தனை தாக்காது அபயம் புக்கு நல்வாழ்வு பெற இறைவரது இடம் சாரும் என்பது குறிப்பு. புகலூர் என்ற பெயர்ப் பொருளும் குறிப்பு; அள்ளல் - சேறு. இங்கு உலக வாழ்வின் துன்பங்கள் என்ற பொருளில் நின்றது; -(9) முற்று - நற்குணங்களின் தொகுதி; பொத்தில் ஆந்தைகள் பாட்டறா - நெய்தற் கரு: புகலூர் நெய்தற்றிணைச் சார்புடைமை காண்க. திருப்புனவாயிற் பதிகமும் பார்க்க;-(10) வேலன் - குமரன் போன்ற இளையோன்; அழகன்; "முருகனோ - மாரனோ - விஞ்சையனோ" (290 பார்க்க). பொய்கை வாவி - திருக்கோயிலினைச் சூழ்ந்துள்ள பூம்பொய்கை; மேதிபாய்தல் - வாவியிலுள்ள நீர்ப் பூக்களை மேய்வதன் பொருட்டு: (1273 - 1423 பார்க்க); ஐயன் - பெருமையுடையவன்;-(11) செறு - வயல்கள்; நாவலூரன்...ஊரன் - நம்பிகள் இங்குத் தம்மை ஊராலும் வரலாற்றானும் பருவத்தானும் பெயரானும் அறிவித்துப் பொறித்து வைத்துக் குறித்தமை பேரன்பின் எழுந்த மகிழ்ச்சிக் குறிப்பு. (3205).
தலவிசேடம் :- திருப்புகலூர் (16) முருக நாயனார் புராணத்திறுதியி லுரைக்கப்பட்டது.
3206
திகம் பாடித் திருக்கடைக்காப் பணிந்து பரவிப் புறம்போந்தே
எதிரி லின்ப மிம்மையே தருவா ரருள்பெற் றெழுந்தருளி
நிதியின் குவையு முடன்கொண்டு நிறையு நதியுங் குறைமதியும்
பொதியுஞ் சடையார் திருப்பனையூர் புகுவார் புரிநூன்மணிமார்பர்,

52

3207
செய்யசடையார் திருப்பனையூர்ப் புறத்துத்திருக்கூத்தொடுங்காட்சி
எய்த வருள வெதிர்சென்றங் கெழுந்த விருப்பால் விழுந்திறைஞ்சி
ஐயர் தம்மை "யரங்காட வல்லா ரவரே யழகிய"ரென்
றுய்ய வுலகு பெறும்பதிகம் பாடி யருள்பெற் றுடன் போந்தார்.

53

3206. (இ-ள்) பதிகம்....போந்தே - திருப்பதிகத்தினைப் பாடித் திருக்கடைக் காப்பும் சாத்தித் துதித்துப் புறத்திற்போந்து; எதிரில்...எழுந்தருளி - ஒப்பில்லாத இன்பத்தினை இம்மையிலேயே தருவாராகிய திருப்புகலூர் இறைவரது அருள்விடை பெற்று எழுந்தருளிச் சென்று; நிதியின் குவையும் உடன்கொண்டு - திருப்புகலூரிற் பெற்ற செம்பொற் கட்டிகளையும் உடனே கொண்டு; நிறையு நதியும்...மணிமார்பர் - நிறையும் நீரினை யுடைய கங்கையினையும் கலைகுறைந்து வந்தடைந்த மதியினையும் சேர உட்பொதிந்து வைத்த சடையினையுடைய சிவபெருமானது திருப்பனையூரினுட் புகுவாராகிய முப்புரி நூலினையும் மணி வடங்களையுமணிந்த மார்பினையுடைய நம்பிகள்,

52

3207. (இ-ள்) செய்ய சடையார்....அருள - செம்மையாகிய சடையாராகிய சிவபெருமான் திருப்பனையூரின் புறத்திலே திருவருட் கூத்தினோடும் எதிர்காட்சி பொருந்தக் காட்டியருள; அங்கு...இறைஞ்சி - அவ்விடத்தே (ஊர்ப்புறத்திலே) எதிர் சென்று மேலோங்கிய விருப்பத்தினாலே நிலமுற விழுந்து வணங்கி; ஐயர்தம்மை - இறைவரை; அரங்காட...பாடி - "அரங்கில் ஆடுமாறு வல்லார் அவரே அழகியரே" என்ற கருத்துடையதாய் உலகம் செய்யப் பெறும் வாழ்வு