|
  |  |  | 
  |  | தரும் திருப்பதிகத்தினைப் பாடி; அருள்....போந்தார் - திருவருளினைப் பெற்று உடனே சென்றருளினர். | 
  |  | 53 | 
  |  | இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன. | 
   | 3206. (வி-ரை) புறம் - திருக்கோயிலின் புறம்பு. | |  | எதிரில்....தருவார் - திருப்புகலூரிறைவர். திருப்பதிகக் கருத்துப் போற்றப்பட்டது.  எதிரில் - இணையில்லாத. அருள் பெற்று - அருள் விடை பெற்று. | 
  |  | நிதியின் குவை - செம்பொற் கட்டிகள். குவை - திரட்சி - திரண்ட கட்டிகள்;  குவி - பகுதி. | 
  |  | நிறையும் நதி - குறைமதி - முரண் அணி; நிறைவாய்ப் பெருகி வந்த நதியைச் சிறுகச் செய்தும்,   குறைந்து வந்த மதியைப் பெருகச் செய்தும் அருளிய எல்லாம் வல்லவர் என்பது குறிப்பு. | 
  |  | பொதிதல் - நெருங்கியிடம்பெறச் செருகி வைத்தல். | 
  |  | மார்பர் புகுவார் - புகுவார் - புகுவாராகி; எதிர் சென்று என்று மேல் வரும்   பாட்டுடன் முடிக்க. | 
  |  | புரிநூல் மணி மார்பர் - நூலும் மணி வடங்களும் பூண்ட மார்பர் உம்மைத் தொகை; வைதிகத்   திருவும் மன்னவர் திருவும் உடையவர். தடுத்தாட்கொண்ட புராணம் பார்க்க. மணி - அழகுடைய   என்றலுமாம். | 
  |  | திருப்பனையூர் புகுவார் - திருப்புகலூரினின்றும் திருவாரூருக்கு வருமிடையில் உள்ளது திருப்பனையூர்.   திருவாரூர் செல்லும் சாலைக்கு இதன் வழியாய்ச் செல்வது சுருங்கிய வழியாதலின் புகுவார் என்றார்.  புகுதல் - ஊர்ப்புற எல்லையினைச் சார்தல். | 
  |  | 52 | 
  |  | 3207. (வி-ரை) புறத்து - ஊர் எல்லைப் புறத்தில். | 
  |  | திருக்கூத்தொடும் காட்சி எய்த அருள - ஆனந்தக் கூத்தாடிக் காட்சி தர. | 
  |  | அங்கு - காட்சி தரக்கண்ட அவ்விடத்தே; ஊர்எல்லைப்புறத்தே. | 
  |  | அரங்காட வல்லார் அவரே அழகியரே - பதிகக் கருத்துக்காட்டுமாறு; பாட்டுத்தோறும்   வரும் முடிபுகளின் குறிப்புப் பார்க்க. முதற் பாட்டு முடிபு பார்க்க. | 
  |  | உலகு உய்யப் பெறும் பதிகம் என்க. உய்யப் பெறுதலாவது உறுதிப் பொருளை இதனால்   உபதேசிக்கப் பெற்று உய்யும் வழி பெறுதல். | 
  |  | ஐயரரங்கிலாமோ - என்பதும் பாடம். | 
  |  | 53 | 
  |  | திருப்பனையூர் | 
  |  | திருச்சிற்றம்பலம் | பண் - சீகாமரம் | 
  |  |                       | மாடமாளிகை கோபு ரத்தொடு மண்ட பம்வள ரும்வளர்         பொழிற் பாடல்வண் டறையும் பழனத் திருப்பனையூர்த்
 தோடு பெய்தொரு காதி னிற்குழை தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின்
 றாடு மாறுவல்லா ரவரே யழகியரே.
 |  | 
  |  | (1) | 
  |  |                       | வஞ்சி நுண்ணிடை மங்கை பங்கினர் மாத வர்வள ரும்வளர்         பொழிற் பஞ்சின் மெல்லடியார் பயிலுந் திருப்பனையூர்
 வஞ்சி யும்வளர் நாவ லூரன் வனப்பகை யப்பன் வன்றொண்டன்
 செஞ்சொற் கேட்டுகப்பா ரவரே யழகியரே.
 |  | 
  |  | (11) | 
  |  | திருச்சிற்றம்பலம் |