450 | திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்] |
| திருவொற்றியூர் சங்கிலியார் | | காஞ்சிமா நகரத்தினை அணைந்தனர். அடியவர்கள் வந்து எதிர்கொள்ள, உட்புக்குத் திரு ஏகாம்பரம் பணிந்து மேலும் அங்குள்ள திருக்காமக் கோட்டமும், திருமேற்றளியும் வணங்கினர்; திருவோணகாந்தன்றளியில் தோழமையாற் பொருந்திய அடிமைத்திறம் பேசிப் பரவி எண்ணில்லாத நிதியம்பெற்றுப் பின் திரு அனேகதங்காவதத்தினையும் மற்றும் பதிகளையும் வணங்கி அங்கு எழுந்தருளியிருந்தனர். அதன்பின் திருவன்பார்த்தான் பனங்காட்டூர், திருமாற்பேறு, திருவல்லம் முதலிய பதிகளை வணங்கித் திருக்காளத்தி மலை சேர்ந்தனர். அங்கு இறைவரையும் பெருங்காதற்றலை நின்றருளும் கண்ணப்பரையும் வணங்கி இனிதமர்ந்தனர்; அந்நாளில் அங்கிருந்தவாறே சீபர்ப்பதம், திருக்கேதாரமலை முதலாகிய வடநாட்டுப் பதிகளை வணங்கிப் பதிகம் பாடியருளினர்; அதன்பின் அங்கு நின்றும் போந்து பலபதிகளையும் வணங்கிக்கொண்டு திருவொற்றியூர் சார்ந்து முதல்வரை வணங்கித் திருப்பதிகம் பாடிக் கும்பிட்டு அங்கு எழுந்தருளியிருந்தனர். இதன் முன்பே, திருக்கயிலையிலிருந்து ஆணையின்படி போந்த இரண்ட சேடிமாருள் அநிந்திதை என்பவர், ஞாயிறு என்ற ஊரில் வேளாண் மரபிலே கொள்கைகளால் மேம்பட்ட வாழ்க்கையுடைய திருஞாயிறு கிழவர் என்பவருக்கு மகளாராய் அவதரித்துச், சங்கிலியார் என்னும் திருநாமம் பூட்டப்பெற்று, இறைவரருளால் வந்த நெறியின் முன்னையுணர்வு வரத் தாமே அறிந்த நிலையினராய் வளர்வாராயினார். அவரது மரபுக்கேற்ற செயலே யன்றித் தெய்வத் தன்மையும் உலகோர் கண்டு அதிசயிக்கும்படி வளர்ந்து மணத்துக்கு உரிய பருவம் அடைந்தனர். அப்போது அவருக்கு ஏற்றவாறு மணமுடிக்கும் நிலைபற்றி அவரது தாயாரும் தந்தையாரும் ஒருநாட் பேசிக்கொண்டிருந்ததனைச் சங்கிலியார் கேட்டு, இறைவரது அருள் பொருந்திய ஒருவர்க்கேயான் உரியது; இங்கு வேறு என்ன விளையுமோ என்று வெருவுற்று மயங்கி யயர்ந்து நிலமிசை வீழ்ந்தனர். பெற்றவர்கள் அதுகண்டு பதைத்துப் பரிவுடன் எடுத்தே ஏங்கி "இவளுக்கு என்னோ வுற்றது?" என்று அவரது முகத்தில் பனி நீர் தெளித்து உபசரிக்க மயக்க நீங்கிற்று, அப்போது அவர்கள் உனக்கு நேர்ந்தது என்ன? என்று கேட்க, ஒன்றும் ஒளிக்காமல் "இன்று என்னைப்பற்றி நீங்கள் உரைத்தது என் தன்மைக்கு இசையாது; சிவபெருமான் திருவருள் பெற்ற ஒருவருக்கு நான் முன்னமே உரியவளாயினேன்; நான் இனிமேற் சென்று திருவொற்றியூரணைந்து சிவனருள்வழி தவம்புரிந்து வருவேன்" என்றார். அவர்கள் அதுகேட்டு அயர்வும் பயமும் அதிசயமும் கொண்டு, அந்த மாற்றத்தினை வெளிப்படுத்தாது மறைத்து ஒழுகி வந்தார்கள்; இவர்களோடு ஒத்த குலமுடைய ஒருவன் இதனை அறியானாகி அம்மையாரை விரும்பி மணம் பேசும் பொருட்டுச் சிலரை அனுப்பினான். அவர்களும் போந்து அவ்வாறே இசைத்தனர். அதனைக்கேட்ட தாய் தந்தையார் உண்மைத் தன்மையினை வெளிப்படுத்திச் சொல்லத் தகாமையினாலே வருத்தம் வராதவகையில் வேறு மொழிந்து அவர்களைப் போக்கினர். அவர்கள் சென்று அவனிடம் சேர்ந்து சொல்வதற்குமுன் அவன் அவர்களுடனே தீமை செய்து செத்தான்போல் இறந்துபட்டான். இது கேட்டுப் பெற்றோர்கள் மயங்கிச் சங்கிலியார் திறத்திலே பேசத்தகாத வார்த்தையைத் தாம் உய்ந்திருக்க வேண்டும் என்று எண்ணமுள்ள எவரும் சொல்ல மாட்டார் என்ற உண்மையை உலகமறியும் பொருட்டு இது நிகழ்ந்தது என்று கொண்டு, உண்மை நிலையினை உலகர் அறிய வெளிப்படுத்தி, அம்மை விருப்பத்தினையே உடன்படத் தீர்மானித்தார்கள். அவ்வாறே சுற்றத்தாருடன் அம்மையாரையும் உடன்கொண்டு திருவொற்றியூர் சேர்ந்து இறைவரைப் பணிந்து, அப்பதியவர்களுடைய |
|
|
|
|