452 | திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்] |
| சபதம் | | அவளைவிட்டு நீங்காது உடனிருப்பதற்கு ஒரு சபதம் இவ்விரவே சென்று அவள் முன்பு செய்வாயாக" என்றருளினர். அது கேட்ட நம்பிகள் இறைவரது பிற பதிகளிலும் சென்று கும்பிடக் கடவேனுக்கு இது விலக்காகும் என்ற குறிப்பினை உட்கொண்டு இறைவரை நோக்கித் "அவ்வாறு அவளுடன் நான் சபதம் செய்வதற்கு வந்தால் அப்பொழுது கோயிலை விட்டுத் தேவரீர் தங்கும் இடம் திருமகிழின் கீழேயாகக் கொள்ளுதல் வேண்டும்" என்ற குறையிரந்தனர்; இறைவரும் தமது தோழர் வேண்டியதற்குடன்பாடு செய்வாராகி, "நம்பி நீ சொன்னபடி நாம் செய்வோம்" என்று அருள, நம்பிகளும் மகிழ்ந்தனர். இறைவர் எழுந்தருளி நம்பிகள்பால் ஒரு திருவிளையாட்டினை மகிழ்ந்தோ? அன்றிச், சங்கிலியாரின் வழியடிமைப் பெருமையினாலோ? மீளவும் அவ்விரவிலே சங்கிலியார்பால் முன்போலத் தோன்றி, "நங்கை! உனக்கு ஆரூரன் சபதம் செய்குவன்; ஆனால் நீ அச்சபதத்தினைத் திருக்கோயிலின் நம் முன்பு செய்தற்கு இசையாமல் திருமகிழின் கீழே கொள்ளக் கடவை" என்று அருளிச் செய்யச், சங்கிலியாரும் கண்ணீர் வெள்ளம் பொழிய இறைவரை வணங்கி எழுந்தனர். இறைவர் இவ்வாறருளி நீங்கவே, தம்பக்கல் துயிலும் சேடியர்களை எழுப்பிச் சங்கிலியார் இறைவர் அருளிச் செய்த தெல்லாம் அவர்களறிய உரைத்தனர். அப்போது திருப்பள்ளி எழுச்சிக்கு மலர்தொடுக்கும் காலம் ஆகவே அதற்குரிய சேடியருடன் சங்கிலியார் செல்லத், தாம் சபதம் செய்தற்குரிய காலம் அதுவாகவே குறித்து நம்பிகளும் அணைந்து தமது பெருமானருளினைச் கூறச் சங்கிலியார் நாணுடன் ஒருபுறம் ஒதுங்கிக் கோயிலினுட் புகுந்தனர். நம்பிகள் சேடியரை நோக்கிச் சபதம்செய்ய இறைவர் முன்பு வாருங்கள் என்ன, அவர்கள் "எமது பெருமானே! இதற்காக இறைவர் திருமுன்பு சென்று செய்வது தகா"தென்று கூற, நம்பிகள் இறைவரது செயலினை அறியாது "அவ்வாறாயின் பின்னர் எங்குச் செய்வது?" என்று கேட்டனர். அதற்கு "அவர்கள் மகிழின்கீழே அமையும் என்னக் கேட்டு, மனமருண்டு இவர் சொன்னபடி செய்ய மறுத்தால் இஃது அலராகிலுமாகும்; ஆதலினால் உடன் படவே அமையும்" என்று துணிந்து அவ்வாறே வாருங்கள் என்று சொல்லி அவர்களுடன் மகிழின்கீழே அணைந்து பெருந்தவத்துச் சங்கிலியாரும் காரணத்திருமகிழை மும்முறை வலம் வந்து, "இங்கு மேவாது நான் அகல மாட்டேன்" என நின்று சபதம் விளம்பினர். சங்கிலியாரும் அதுகண்டு "தம்பிரான் பணியாலே பாவியேன் இது கண்டேன்" என்று ஆவி சோர்ந்தழிந்து ஒருபுறம் மறைந்தயர்ந்தனர். நம்பிகள் இறைவரை வணங்கித் "தேவரீர் செய்தவா றழகிது" என்று துதித்து மகிழ்ந்து போந்தனர். சங்கிலியாரும் தமது பணிசெய்து வணங்கிக் கன்னிமாடம் புகுந்திருந்தனர். | | திருமணம் | | அன்றிரவே, இறைவர் அந்நகரில் வாழும் தொண்டர்களுக்கெல்லாம் கனவிற்றோன்றி, "நம்பியாரூரனுக்கு நங்கை சங்கிலிதன்னை இவ்வுலகிலே நமது ஏவலினாலே கலியாணம்செய்து உலகறியக் கொடுப்பீராக" என்று கட்டளையிட்டருளிச் செய்தனர். அவ்வாறே அருள்தலைக்கொண்டு தொண்டர்களும் பதியவர்களும் மகிழ்ந்து நெருங்கிக்கூடி வானவர் பூமழை பொழியக் கண்ணிறைந்த பெருஞ்சிறப்பிற் கலியாணம் செய்தளித்தார்கள். வன்றொண்டரும் இறைவரருளாலே சங்கிலியாரை மணந்து அவருடன்கூடி அவரது தெய்வ நலத்தைக் கண்டு கேட்டுண்டு யிர்த்து உற்றுக் காதலினால் இனிது அமர்ந்தருளினர். அவர்களிடையே மிகுபுலவிப் புணர்ச்சிக்கண் ஒருகணம் ஓர் ஊழியாகும்; ஓரூழி ஒருகணமாகும். இவ்வாறு திருவொற்றியூரிலே நம்பிகள் இறைவரைத் தொழுதிருக்கவே பல |
|
|
|
|