454 | திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்] |
| வலக்கண் பெறுதல் | | யும் தாரீர் என்று, "மீளா அடிமை" என்ற பதிகம் பாடி வணங்கினார். புற்றிடங்கொண்ட புராணனார் இரங்கிக் கருணைத் திருநோக்கம் செய்து வலக்கண்ணையும் கொடுத்தருளச் செல்வே விழித்து முகமலர்ந்து உள்ளம் பரவசமாய்ப் பலமுறையும் வணங்கிப் புற்றிடங்கொண்ட சிவக்கொழுந்தினருளை இரண்டு கண்ணாலுங் கண்டு பருகித் திளைத்தனர். பின்பு திருக்கோயிலினை வலங்கொண்டு போந்து தேவாசிரியன் மருங்கணைந்து இருந்தருளினர். | | இறைவர் தூது | | இவ்வாறிருக்க, நம்பிகள் பிரிந்து போனதற்பின் பரவையார், அவரது பிரிவாற்றாமையால் வருந்தினர். அதன்மேலும், அவர் திருவொற்றியூர் சேர்ந்து சங்கிலியாரை மணம் புணர்ந்தசெய்தியினையும் தாம் அவர்பால் விட்டார்வந்து உரைக்க அறிந்து, தம்மையுமறியா வெகுளியினால் நெஞ்சம் தரியாது தளர்ந்தன ராய்ப் புலவியும் பிரிவும் கூடிய இரண்டன்பாலும் பட்டு வருந்தினர். இந்நிலையில் நம்பிகள் திருவாரூரில் எழுந்தருளப், பரிசனங்கள் பரவையார் திருமாளிகையில் முன்புபோலச் செல்ல மாளிகைப் புறத்திலும் இடம்பெறாது தள்ளப்பட்டார்களாய் அதனை நம்பிகள்பால் வந்துரைத்தனர். நம்பிகள் உலகியல்பு கற்ற மாந்தர் சிலரைப் பரவையார் கொண்ட செற்றம் மாற்றித் தீர்வுசொல்லும்படி செலவிட்டார். அவர்கள் சென்று உலகியல்பிற் பலவும் எடுத்து இயம்பப், பரவையார் மறுத்துத் தமது செற்றத்தினை மாற்றாராகி நம்பிகளின் வார்த்தையினை மேலும் சொன்னால் உயிர்போதல் ஒழியாது என்று கடிந்து சொல்ல, அவர்களும் அஞ்சி வந்து நம்பிகளிடம் அதனை அறிவித்துச் சென்றனர். நம்பிகள் அந்நள்ளிரவில் வேறு துணைகாணாராய்த் துன்பக்கடலுள் மூழ்கிச் சிந்தித்துத் தமது பெருமானாகிய இறைவரை நினைந்தனர்; அவரும் வெளிப்பட்டு வந்து முன்னிற்க, வணங்கிப், பரவையாரது செற்றத்தினைத் தீர்த்து ஒன்றுவித்தல் வேண்டும் என வேண்டிக்கொள்ள, அவரும் இசைந்து சில கணங்கள் புடைசூழ அருச்சகர் வேடந்தாங்கிப் பரவையார் திருமாளிகைக்குச் சென்று, அங்குச் செறிய அடைத்த திருவாயிலின் முன்னின்று, ‘பரவாய் திறவாய்’என அழைப்ப, அவரும் இறைவரது அருச்சகர் இப்பாதியிரவில் அணைந்தார் என்று பயமெய்திக்கதவு திறந்து அவரைக் கண்டு, "இந்நள்ளிரவில் தேவரீர் இங்கு எய்தவேண்டிற் றென்னை?" என்றார். அதற்கு இறைவர் "நம்பி இங்கு வரப் பெறவேண்டும்; நம்பி செய்த ஏதங்கள் மனத்துக்கொள்ளாது வெகுளி நீங்கி நோதகவு ஒழிக" என்று கூறப், பரவையார் "இஃதொரு கருமமாக நீர் இக்கடைத்தலை வருகை உமது பெருமைக்குத் தகுவதன்று; நீரும் போம்" என்று மறுத்தனர். இறைவரும் நம்பியின் வெம்புறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவிப் பரவையார் மறுத்ததனையே கொண்டு மீண்டனர். இசைவு செய்வார் என்று மிக்க காதல் கொண்டு எதிர்பார்த்திருந்த தோழனாரிடம் இறைவர் மீண்டுசென்று, "நாம் உனது திறமெலாம் கூறி நாமே வேண்டவும் பரவையார் மறுத்தாள்" என்றார். நம்பிகள் அதுகேட்டு நடுங்கித், தேவரீர் அருளிய வண்ணம் நன்று! அடியாளான பரவையோ மறுப்பாள்; நாங்கள் அடிமைக்கு எண்ணலார்! இன்று என் அடிமை நீர் வேண்டாவிட்டால் முன்னர் வலிய ஆளாகக் கொண்ட பற்று என்னை? இன்று என் அடிமை நீர் வேண்டாவிட்டால் முன்னர் வலிய ஆளாகக் கொண்ட பற்று என்னை? இன்று பரவையின் புலவி தீர்த்து அங்கு மேவும்படி செய்யீராயின் விடும் உயிர்!" என்று தளர்ந்து வீழ்ந்தார். அதுகண்டு இறைவர் நம்பிகளை அருளால் நோக்கி, "நாம் இன்னமொருமுறை அவள்பாற் சென்று நீ அங்குமேவும் செயலைக் கூறுகின்றோம்; துயர் நீங்குக" என்று கூறிப் பரவையார் திருமாளிகையினை நோக்கித் தூதராக முன் |
|
|
|
|