[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும் | 455 |
| போலன்றித் தாமாந்தன்மை அறிவுறுகோலத்தோடு, தேவர் பூதர் முனிவர் சூழச் சென்றருளினார். இதற்கிடையில், பரவையார் அருச்சகராகி வந்தவர் ஆளுடைய முதல்வரேயாகும் அதிசயம் பலவும் தோன்ற, அவர்முன் என்செய மறுத்தோம் என்று கையறவு எய்தி, மனமழிந்து வாயிலே பார்த்து வருந்தியிருந்தனர். அவ்வளவில் இறைவரும் வந்து புகுந்தனர். பரவையார் விரைந்து சென்று அவரடியில் வீழ்ந்தனர். அவரை நோக்கி இறைவர், "உரிமையினால் ஆரூர் நம்பி ஏவ மீளவும் உன்பால் வந்தோம். முன்புபோல் மறாதே, நம்பி இங்கு வருவதற்கு இசைவாயாக" என்றனர். அதுகேட்டுப் பரவையார், "எனது பெருந்தவப் பயனாக முன் எய்தியவர் நீரோ? அன்பர்க்காகத் திருவடி வருந்த ஓரிரவு முழுதும் அங்குமிங்குமாக எளிவருவீராயில் இசையாது என்செய்வேன்" என்று வணங்க, இறைவரும் அவளுக்கு ஆசி கூறி எழுந்தருளி நம்பிகள்பால் சென்று பரவையார் இசைந்தமை கூறித்திருக்கோயிலில் எழுந்தருளினர். | | நம்பிகள் மகிழ்ந்து இறைவரை இறைஞ்சிப், பின்பு, கலவைச் சேறு, கலங்கள், பூணாடை வர்க்கம் முதலியவற்றை ஏந்திய பரிசனங்கள் முன்பு செல்லத்தாம் திருமாளிகையை வந்தணைந்தனர். பரவையார், திருமாளிகையை அலங்கரித்து விளக்கு நிறைகுடம் முதலியவற்றை வைத்துத் தாம் வாயிலின் முன்புவந்து நம்பியை எதிரேற்று நின்று, அவர் வந்து கூடிய அளவில் காதல் வெள்ளங் கரை காணாது வணங்கினர். நம்பிகள் அவரது கையினைப் பற்றி உள்ளே சார்ந்தனர். இருவரும் இறைவர் இடையாடிச் செய்த கருணை வெள்ளத்திறத்தினைப் போற்றி ஒருவருளொருவர் மேவு நிலைமையில் உயிர் ஒன்றாகி மகிழ்ந் தமர்ந்திருந்தனர். | | ஏயர்கோன் கலிக்காமர் | | அந்நாளில் நம்பிகள் நெஞ்சில் சிறிதும் நடுக்கமின்றிப் பெண்ணிடத்தில் இறைவரைத்தூதாக அனுப்பினார் என்ற இவ் வநீத மொழியினை ஏயர்கோன் கலிக்காமனார் கேட்டு, வெம்பினார்! வெருவினார்!மிக வருந்தினார்.ழுதலைவரை அடியான் ஏதும் காரியம் நன்று;இதனைச் செய்பவனும் ஒருதொண்டனாம்! பொறுக்க வொண்ணாத இப்பிழையினைப் பரவியேன் காதினாற் கேட்டும் என உயிர் போகாதிருந்தது! பெண்ணாசையால் ஒருவன் ஏவினாலும் இறைவரும் இசைந்து ஓரிரவெல்லாம் தூதுக் குழல்வதா? இறைவர் இசைந்தாம் அவரை ஒருவன் ஏவுவதும் ஆகுமா? இவ்வாறு செய்தவனை நான் காணப் பெற்றால் என்ன விளையுமோ?" என்று மனத்துட் செற்றம் பொருந்தி யிருந்தனர் கலிக்காமனார். இச் செய்தியைக் கேட்ட நம்பிகள், பிழை யுடன்படுவாராகி இதற்குத் தீர்வு வேண்டி, நட்புச் செய்யும் வண்ணம் இறைவரிடம் நாடோறும் பணிந்து போற்றினர். இறைவரும் அதனை நோக்கி, இவ்விருவரும் நண்பாகும் தன்மை செய்வாராகி, உடல் வாடும் நிலைபுரியும் கொடிய சூலைநோயினை ஏயர்கோனார்பால் ஏவியருளினர். அந்நோய் அவர் வயிற்றினுள் அனல்செய் வேல் குடைவதென்ன வேதனை மேன்மேலும் செய்தது. அவரும் அதற்குடைந்த வீழ்ந்து இறைவரைப் போற்றினார். இறைவர் அவர்பாற்றோன்றி "உன்னை வருத்தும் சூலை வன்றொண்டன் றீர்க்கிலன்றி முந்துற ஒழியாது" என்ற மொழிந்தருளினர். அது கேட்டுக், கலிக்காமனார், "எம்பெருமானே! எந்தை தந்தை தந்தை எம் கூட்டமெல்லாம் நீரே எமது இறைவர் என்று கொண்டு வழிவழிச் சார்ந்து வாழும் வாழ்க்கையை யுடையேனுக்கு என்னை நின்று வருத்தும் சூலையினைப், புதிதாக வம்பென ஆண்டு கொண்ட ஒருவனே வந்து தீர்ப்பவன்? அவன் தீர்ப்பதினும் தீராதொழிதல் நன்று; உமது பெருமையை யார்தாம் அறிந்தார்? வன்றொண்டர்க்கே |
|
|
|
|