456 | திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்] |
| ஆகும் உறுதியே செய்தீர்" என்று கூற, இறைவரும் அவர் முன்பு மறைந்தருளி, வன்றொண்டர்தம்பாற் சென்று, "நம் ஏவலாலே ஏயர்கோனுற்ற சூலையினை நீ சென்று தீர்ப்பாயாக!" என்றருளினர். நம்பிகளும் வணங்கி மகிழ்ந்து அவ்வாறே சூலை தீர்க்கத் தாம் வரும் செய்தியை ஏயர் கோனாருக்குச் சொல்லியனுப்பினர். | | இறைவர் செய்த நட்பின் றிறம் | | இறைவர்பாற் கேட்ட துன்ப மொழியும் சூலையும் தம்மை வருத்த, அதன் மேலும் வன்றொண்டர் வரவு பற்றிய கேள்வியும் பெற்ற ஏயர்கோனார், "எம்பிரானைத் தூதனாய் ஏவினான் வந்து தீர்ப்பதன் முன் என்னைப்பற்றி நின்று நீங்காப்பாதகச் சூலையினை அதற்கு இடங்கொடுத்திருக்கும் இவ் வயிற்றினோடும் கிழிப்பன்" என்று துணிந்து உடைவாளினாலே வயிற்றினைக் குத்திச் செற்றிட, உயிரினோடும் சூலையும் தீர்ந்தது. அதுகண்டு எண்ணுதற்கரிய பெருமையினை யுடைய கலிக்காமனாரது தேவியாரும் ஒப்பற்ற தம் கணவருடனே தாமும் போகும் நிலைபுரியும் வேளையில், நம்பிகள் இங்குப் பொருந்த அணைந்தார் என்று முன் வந்தவர் கூறக் கேட்டு, "ஒருவரும் அழாதீர்கள்! காவலரை நம்பி அணையும்போது திருமனையை மிகவும் அலங்கரித்து எதிர் செல்லுங்கள்!" என்று பரிசனங்களைப் பணித்தனர்.அவர்களும் பூரண கும்பமும் தீபமும் வைத்து வாயிலைப் பூமாலை தூக்கி அணிசெய்து நம்பிகளை எதிர்கொண்ட னர். நம்பிகள் அவர்களுக்கு நகைமுக மளித்துப் பெருவிருப்பினோடும் திருமாளிகையினுட் புகுந்து தவிசின் வீற்றிருந்து, அவர்கள் விதிமுறை செய்த பூசனைகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு, "ஏயர்கோனார்க்கு வந்த கொடிய சூலையினை நீக்கி அவருடன் இருத்தற்குக் காலம் தாழ்க்கின்றது பற்றி நான் மிகவும் வருந்துகின்றேன்" என்றருளினர். அதற்கு, அம்மையாரின் ஏவலாலே, மனைத் தொழில்மாக்கள் "இங்கே கெடுதி ஒன்றுமில்லை; அவர் உள்ளே பள்ளிகொள்கின்றார்" என்று கூறக் கேட்டு, நம்பிகள், "தீமையில்லை என்றாலும் இன்னம் என் மனம் தெருட்சி பெறவில்லை; ஆதலால் அவரைக் காணவேண்டும்" என்றனர். ஏவலாளரும் அவ்வாறே கொண்டு சென்று அவரைக் காட்டக், குருதி மிகவும் சோரக் குடர் சொரிந்து ஆவி நீங்கிக் கிடந்த அவரை நம்பிகள் கண்டனர். "புகுந்தவாறு நன்று! நானும் இவர்முன்பு நண்ணுவேன்" என்பாராகி. அப்போது ஆளுடைய பெருமா னருளினாலே கலிக்காமனாரும் உயிர்பெற்று உய்ந்து, கேளிரே ஆகிக் "கெட்டேன்" என்று விரைந்தெழுந்து, நம்பிகள் கையினின்றும் வாளினைப் பிடித்துக்கொள்ள, அவர் வணங்கி வீழ்ந்தனர். ஏயர்கோனாரும் வாளினை மாற்றி நம்பிகளது திருவடிகளில் வீழ்ந்தனர். விண்ணவர் பூமாரி பெய்தனர். இருவரும் எழுந்து தழுவி இடை விடாத நண்பினாலே மகிழ்ந்து திருப்புன்கூரிற் சென்று இறைவர் பாதம் வணங்கித் துதித்தார்கள். நம்பிகள் திருவருட் பெருமையினைப் போற்றி "அந்தணாளன்" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி வணங்கிணர். சில நாட் கழிந்தபின் நம்பிகள் தம்கூடவே மகிழ்ந்துவந்த ஏயர்கோனாருடன் திருவாரூரிற் சேர்ந்து பூங்கோயிலின் இறைவரை வணங்கி நிறைந்த அன்பினாலே அங்குத் தங்கினர். அதன்பின் நம்பிகள்பால் அருள்விடைபெற்று ஏயர்கோனார் தமது பதிபுகுந்து தமக்கேற்ற பணிகள் செய்திருந்து இறைவரது திருவடி நீழல் அணைந்தனர். |
|
|
|
|