| னம் பெய்த பெருமழையைத் தவிர்க்கும் படிக்கும் சுந்தரமூர்த்திகளிடம் வேண்ட அவர் பாட, அதற்காக அவன் பன்னிரு வேலி நிலம் கொடுத்தான் என்று கதை புனைந்து "பன்னிருவேலி பெற்றபடலம்" என்று இத் தலபுராணத்திற் புகுத்திவிட்டனர். |
| இவ்வாறு வடமொழியாளர் தமிழ்நாட்டுச் செய்திகளைப் பிறழ உணர்ந்து அவ்வாறே வடமொழியில் தலவரலாறுகள் முதலியவற்றை இயற்றிவிட, அவற்றை அவ்வாறே வடமொழி ஆதரவென்று கொண்டு மீளத் தமிழில் யாத்து வழங்கும் பிழைபட்ட வரலாறுகள் பலவுள்ளன. அவற்றை வழங்குவோர் ஆய்ந்தெடுத்து வழங்குதல் நலம் தரும். |
| சரித ஆராய்ச்சிக் குறிப்புக்கள் |
| (
Dr., M. இராசமாணிக்கம்,
M. O. L., L. T., Ph. D. அவர்கள் உதவியன) |
| 1. செய்யுள் - 77 (3231) |
| "வளவர் பெருமான் மணியாரம்..........." இச்செய்தி கி.பி. 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரால் குறிக்கப்பட்டது. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தராலும் குறிக்கப்பட்டது. ஆனால் இச்செய்தி சங்கப்பாக்களில் இன்மையால், இந்நிகழ்ச்சி ஏறத்தாழ கி. பி. 300-க்கும் 600-க்கும் இடையே நிகழ்ந்ததாக வேண்டும். |
| 2. செய்யுள் - 107 (3261) |
| "உடைய நம்பி" - இப்பெயருடன் (உடைய நம்பி விலாசம் என்னும் பெயரில் ஒரு நூல் சுந்தரர் வரலாற்றை அறிவிக்கின்றது-தெலுங்கு பசவ புராணம், பிராபாக சாஸ்திரியின் முகவுரை காண்க. இப்பெயர் மக்களிடையும் வழங்கி வந்தது.
M. E. R 72 of 1927 (S. I. I, V. 537, A. R. E. 1920, P, 98.) |
| 3. செய்யுள் - 136 (3290) |
| "பொன்னை உரைக்க ஆணி" (கட்டளைக்கல்) பொன் அளவை - மா, (137) இச் செய்திகள் பல்லவர் காலக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது. இதே ஆணி சோழர் காலத்தில் "தண்டவாணி "எனப்பட்டது. |
| 4. செய்யுள் - 158 (3312) |
| "தம்பிரான் தோழர்"-"தம்பிரான் தோழர் மானக்கஞ்சாறர்" -திருமுட்டம் கல்வெட்டு.
M. E, R, 1916., 216 of 1925 முதலிய கல்வெட்டுக்களிலும் இப்பெயரைக் காணலாம். |
| 5. செய்யுள் - 181 (3335) |
| "சிவயோகியார்" சிவயோகியர் சிவனையே நினைந்திருத்தலும், சிவத் தியானத்தால் பிறவித்தளையை அறுக்க முனைதலும் செய்பவர். உயிர் நீங்கும் தறுவாயில் உடல் முழுவதும் நீறுபூசிச் சிவமந்திரங்களைச் சொல்லிக்கொண்டு தம்மார்பில் தொங்கவிடப்பட்டுள்ள சிவலிங்கத்தை வழிபடுவர். இத்தகையோர் நாயன்மார்கள் வாழ்ந்த பல்லவர் காலத்தில் தமிழகத்திலிருந்தனர். சோழர் காலத்தில் இவர்கள் மிகப் பலராக இருந்தமை எண்ணிறந்த கல்வெட்டுக்கள் கொண்டு உணரலாம். திரு எறும்பியூர், திருபுவனை, திருஆரூர் முதலிய ஊர்களில் இருந்த மடங்களில் சிவயோகியரை உண்பிக்க நிவந்தங்கள் விடப்பட்டுள்ளன. |
| 6. செய்யுள் - 190 (3344) |
| காஞ்சி - திருக்காமக் கோட்டம்: திருக்காமக்கோட்டம் - இதனைச் சுந்தரர் தரிசித்தார். இது சங்கரரால் கட்டப்பட்டது என்று கூறப்படுதலால் சங்கரர் காலமாகிய கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டதாதல் வேண்டும். (திருஞானசம்பந்தரும் இங்குவந்து வழிபட்டனர் என்றறியப்படுதலால் இஃது முன்னமே அமைக்கப்பட்டிருத்தல் வேண்டுமென்பது கருதப்படும்.) |
| 7. செய்யுள் - 222 (3376) |
| திருவொற்றியூரில் சங்கிலியார்: சுந்தரர் காலமாகிய ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்ட பல்லவ அபராசிதன், நிருபதுங்கன், வைரமேகன் இவர்கள் காலத்தில் |