| |
| பதிகக் குறிப்பு :- 3207-ல் ஆசிரியர் காட்டியருளியது காண்க. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு : -(1) வண்டு பாடலறையும் பழனம் என்க. பாடல் - பண்; ஒரு காதினில் என்பதனை முன்னும் பின்னும் தோடு - குழை என்ற ஈரிடத்தும் தனித்தனிக் கூட்டுக; துள்ளுதல் - ஆனந்தத்தின் மெய்ப்பாடு; இறைவர் நடங்கண்டு அன்பர்கள் ஆனந்தக் கூத்தாடுவர்; எதிர் காட்சியாக நடங் கண்டு பாடிய பதிகம்; ஆதலின் இவ்வாறு போற்றினர். மேல் வரும் பாட்டுக்களும் இவ்வாறே;-(2) நெய்யாடி - பெயர்; நெய்யாடல் - விழா;-(3) வினை தீர்ப்பராய் விடில் - வினை தீரும் பருவம் வந்து சேர்ந்தபோது;-(4) தோளுமாகமும் தோன்ற நட்டமிட்டு - கூத்துக் கண்ட காட்சிக் குறிப்பு;-(5) அங்கைத்தீ - தீ ஏந்திய நிலை;-(6) சோணாட்டவர் பரவிய பாவிரி புலவர் - ஆளுடைய பிள்ளையார் இத்தலத்துப் பதிகத்துட் பாராட்டிய தன்மைக் குறிப்புப் போலும்;-(7) திரங்கல் - தோல் சுருங்குதல்; துரங்கன் வாய் பிளந்தான் - திருமால்; "மாவாய் பிளந்தான்" தூமலர்த் தோன்றல் - பிரமன்;-(9) குண்டு - ஆழம். |
| தலவிசேடம் - திருப்பனையூர் சோழ நாட்டில் காவிரித் தென்கரை 73-வது பதி; இங்கு நம்பியாரூரருக்கு இறைவர் திருநடனக் காட்சியுடன் எதிர் காட்சி கொடுத்தருளிய வரலாற்றுக் குறிப்புப் பதிகத்துக் காணத்தக்கது; பராசரா புசித்துப் பேறு பெற்றனர். கரிகாற் சோழருக்குத் துணை செய்தபடியால் விநாயகர் துணையிருந்த பிள்ளையார் எனப் பெயர் வழங்கப் பெறுவர். சுவாமி - சௌந்தர நாதர்; அம்மை - பெரியநாயகி; தீர்த்தம் - அமிர்த புஷ்பகரணி - பதிகம் 2. | | இது நன்னிலம் நிலயத்தினின்றும் தென் கிழக்கே (மட்சாலை) கரைவழியே ஒரு நாழிகையளவில் உள்ளது. |
3208 | வளமல் கியசீர்த் திருப்பனையூர் வாழ்வா ரேத்த வெழுந்தருளி அளவில் செம்பொ னிட்டிகைக ளான்மே னெருங்கி யணியாரூர்த் தளவ முறுவற் பரவையார் தம்மா ளிகையிற் புகத்தாமும் உளமன் னியதம் பெருமானார் தம்மை வணங்கி யுவந்தணைவார், | |
| 54 |
3209 | வந்து பரவைப் பிராட்டியார் மகிழ வைகி மருவுநாள் அந்த ணாரூர் மருங்கணிய கோயில் பலவு மணைந்திறைஞ்சிச் சிந்தை மகிழ விருப்பினொடுந் தெய்வப் பெருமா டிருவாரூர் முந்தி வணங்கி யினி திருந்தார் முனைப்பா டியர்தங் காவலனார். | |
| 55 |
| 3208. (இ-ள்) வளமல்கிய....எழுந்தருளி - வளம் பொருந்திய சிறப்புடைய திருப்பனையூரில் வாழ்கின்றவர்கள் துதிக்க எழுந்தருளிப் போய்; அளவில்...புக - அளவு காண முடியாத செம்பொற் கட்டிகளாகிய செங்கற்கள் ஆட்களின்மேல் நெருங்கி அழகிய திருவாரூரின்கண் முல்லை அரும்பு போன்ற முறுவலினையுடைய பரவையாரது திருமாளிகையிலே புக; தாமும்...உவந்தணைவார் - தாமும் தமதுளத்தில் நிலைத்த தமது பெருமானாராகிய புற்றிடங் கொண்டாரை வணங்கி மகிழ்வுடன் அணைவாராகி, |
| 54 |
| 3209. (இ-ள்) வந்து ....நாள் - எழுந்தருளிப் போந்து பரவைப் பிராட்டியார் மகிழும்படி தங்கியிருந்து பொருந்தியிருக்கும் நாட்களிலே; அந்தணாரூர்....இறைஞ்சி - அழகிய குளிர்ந்த திருவாரூரின் பக்கத்தில் அணித்தாக உள்ள கோயில் |