[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்457

  தலவிசேடம்:- (1) திருப்பெருமங்கலம் - திருப்புன்கூருக்கு வடக்கே ஒரு நாழிகை யளவில் உள்ளது. சிவாலயமும் அதில் நாயனார் திருவுருவமும் உண்டு; இதனருகே விறன்மிண்டர் தங்கிய இடமாக வழங்கும் விறன்மிண்டர் மடம் என்ற நிலயமும் உண்டு. முன் (3155) உரைத்தவை பார்க்க.
  திருப்புன்கூர் - முன் (261-ன் கீழ்) உரைக்கப்பட்டது.
  கற்பனை:- 1. சிவபெருமான்பால் அன்புமிக்க குடிகள் நெருங்கிச் சிவபுரி என்னும்படி விளங்குதல் ஒரு நகரத்துக்கு ஏனைய பெருமைகள் எல்லாவற்றிலும் மேம்பட்ட சிறப்பு. (3158)
  2. வேளாளர்களுள் வழிவழி அரசர் சேனாபதிக் குடியாகவரும் ஒரு வகையும் உண்டு. (3159).
  3. சிவன்பணி செய்துவாழும் வாழ்க்கையே இன்பந்தருவது. (3161)
  4. குருவின் மாளிகைக்கு நாடோறும்அமுதுபடி முதலானவற்றைப் படிசமைத்தல் சிவபுண்ணியமாம். (3165)
  5. குருவின்பணி நியமம் முட்டுப்படின் பெரியோர் வருந்தி உண்ணாமலும் இருந்து இறைவரை வேண்டுவர். (3167)
  6. குருவின் பணி நிறைவேறும்பொருட்டு வேண்டி வருந்துவோர்க்கு இறைவர் அருள்புரிவர். (3168)
  7. குண்டையூர்க்கிழார் வேண்டியவாறே நென்மலை அருளியதுடன், அதனைத் திருவாரூருக்கு எடுக்கப் பூதங்களையும் இறைவர் ஏவியளினார். தாமே திருவாரூரில் நம்பிகளுக்கு நெல் தராது இவ்வாறு அருளியது குண்டையூர்க் கிழாருக்குக் குருபணியின் பலன் தருவதற்காம். "பனிமதி முடியா ரன்றே யுமக்குநெல் லளித்தார்" (3172) என்ற நம்பிகள் இதனை விளக்குதல் காண்க.
  8. திருவாரூரில் வாழ்வார்கள் அவ்வவர் மனையெல்லைக்குட் படுநெல்லெல்லாம் அவ்வவர் மாளிகையிற் புகப்பெய்து கொள்க எனப் பரவையார் பறைசாற்றி அளித்தனர்; இஃது அவரது முன்னைத் தவத்தின் பெருந்தன்மையும் புகழுமாம். அவ்வாறே நம்பிகள் ஒவ்வோர் முறையும் கொணர்ந்தளிக்கும் பொற்குவைகளும் அவ்வப் பங்குனி உத்திரவிழாக்களில் அடியார்களுக்கு குறைவறுக்கும் பொருட்டுப் பயன்படுத்திய திறமும் காணப்படும். இதனுட் பரவையாரது பெருமையும் மேம்பாடும் கண்டு கொள்ளத்தக்கன.
  9. நாட்டியத்தான்குடிக் கோட்புலியார் நம்பிகளை அழைத்துச்சென்று உபசரித்துத் தமது மக்களாகிய வனப்பகை சிங்கடி என்ற இருவரையும் அவர் பால் அளித்து அடிமையாகக் கொண்டருளும்படி வேண்டினார். நம்பிகள்அவர்களைத் தமது தூய மக்களாக எற்றுக்கொண்டு, அவர்கட்கு வேண்டுவன அளித்துக், கண்ணீர் வார உச்சிமோந்து தமது பதிகங்களிலும் தம்மை அவர்களைப் பெற்றெடுத்த பிதாவாக வைத்துப் பாடியருளினார். நம்பிகள் பொன்னாசை பெண்ணாசை கொண்டவர் எனப் பிதற்றும் மதியிலிகள் இவ்வுண்மைகளைக் கணிப்பாராயின் உய்குவர் (3194 - 3196).
  10. திருப்புகலூரில் செங்கல்லே செழும் பொன்னாக இறைவ ரருளாற் பெற்ற நம்பிகள், பொன் முதலியவற்றை வேண்டிப் பொய்ம்மையாளராகிய புன்மாக்களைப் பாடித்திரியும் புலவர்களை நோக்கி "நீவீர் அதனைவிட்டு இறைவரைப் பாடினால் இம்மையே சோறும் கூறையும் முதலியன எல்லாம் பெறலாம்" என்று