| சிக்குத் துணையாக நின்றன. அவை படி எடுத்தொழுகற்பாலன. மனைவியாரின் அன்புநிலை கணவனாரது உய்திக்குத் துணையாயிருத்தலும் கருதற்பாலது. |
| 39. சிவன்பாற் பிழைபட்ட தம்மால் சூலை தீர்ந்து நலம்பெறுதலை விரும்பாது கலிக்காமனார் உடைவாளாற் குத்திக்கொண்டு உயிர் துறந்தனர் என்று தெரிந்த நம்பிகள் தாமும் அவ்வாற்றால் உயிர் துறக்கத் துணிந்தனர். இஃது அன்பின் செம்மையின்பாற்கொண்ட உறைப்பும், தமதுகுற்றத் தீர்வுபெறச் சூழ்ந்தநிலையும் ஆம்; இது பெரியோரியல்பு. |
| 40. சூலை தீர்த்து நட்பாகுக என்றருளிய இறைவர், சூலையும் தீர்ந்தவழி சூலை தீர்ந்த உயிரினை மீட்டும் கொடுத்தருளி நம்பிகள்பால் நட்பாம் தன்மையையும் செய்தருளினர். இவை நம்பிகள் வேண்டியபடி அருளப்பட்டமையின் நம்பிகள் செய்தருளியமையேயாம். ஆட்பாலவர்க்கு இறைவர் அருளும் வண்ணம் அளவிட்டறிதற்கரியன. |
| ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் முற்றும் |