[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 30. திருமூலதேவ நாயனார் புராணமும் உரையும்465

  முதற்பெருநாயகம் - "கோயில் நாயகன்" (20); நாயகமாவது காவலாகிய அதிகாரம்.
  நெறியருளும் - இஃது உட்செல்ல விடுக்கும் காலம் என்றும், இஃது அவ்வாறு செல்ல விடாத காலம் என்றும், இவ்வழி செல்க - இவ்வழி செல்லற்க என்றும் காலமும் இடமும் காட்டி விடுத்தும் தடுத்தும் வழிப்படுத்தும். நெறி - சிவநெறி, குரு நெறி, ஒளிநெறி, நன்னெறி என்றலுமாம்; இப்பொருளில் முனிவர் யோகியர்க்கே யன்றி இமையவர்க்கும் என்று எச்சவும்மை தொக்க தென்க.
  நந்தி - திருநந்தி தேவர்; நந்தி - சிவபெருமானது பெயர்; அவர்பால் முதல் உபதேசம் பெற்ற நந்திதேவருக்கு ஆயிற்று; முதற்பெருநாயகமாகி - நெறியருளும் - நந்தி - என்பன இறைவராகிய நந்தியினின்றும் பிரித்துணர வைக்கும் அடைமொழிகள். பிறிதினியையு நீக்கிய விசேடணம்.
  நந்தி திருவருள் பெற்ற - நந்தி பெருமான்பால் நேரே உபதேசம் பெற்ற என்க. "நந்தி யருள்பெற்ற நாதரை நாடிடின், நந்திக ணால்வர் சிவயோக மாமுனி, மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரம, ரென்றிவ ரென்னோ டெண்மரு மாமே", "இருந்தேனென் னந்தி யிணையடிக் கீழே" (திருமந்திரம் - பாயிரம்) என்பன முதலியவை பார்க்க.
  நான்மறை யோகிகள் - வேத சிவாகமங்களுள் பேசப்பட்ட சிவயோகங்கைவந்த பெரியார். பன்மை சிறப்பு; இவரது சிவயோக சாதனையால் வரும் இச்சரித நிகழ்ச்சிகள் பலவும் காண்க. "எண்ணிறைந்த வுணர்வுடையா ரீசரருளென வுணர்ந்தார்" (3586); "சிவயோகந் தலைநின்று, பூவலரு மிதயத்துப் பொருளோடும் புணர்ந்திருந்தார்" (3588) என்பன முதலியனவாய் வருவன காண்க; யோகிகளுள் ஒருவர் என்றுரைப்பாருமுண்டு; ஒருவர் - ஒப்பற்றவர் என்ற குறிப்புமாம்; இவரது முன்னைப் பெயர் சொல்லப்படவில்லை. ஈண்டைக்கு வேண்டப் படாமை குறிப்புப் போலும். அவையெல்லாம் கண்டு சரிதங் காண்பாருமுண்டு.
  இப்புராணம் அந்தி என்று அகரத்தில் தொடங்கிச் சாற்றுவாம் என மகர ஒற்றுடன் நிறைவாதல் பிரணவ வடிவான ஞானம் தரவந்தவரது சரிதம் என்ற குறிப்புத்தருவது.
 

1

  3565. (வி-ரை) அணிமாதி வருஞ் சித்தி - அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற எண்வகைச் சித்திகள். இவை அட்டமாசித்திகள் எனப்படும்; .அணிமா - அணுவினுஞ் சிறிய உருவம் கொள்ளுதல்; மகிமா - எங்கும் நிறைந்து நிற்கும் பெருமை கொள்ளுதல்; லகிமா - மேருப்போல மிகப் பெரிதாயிருந்தும் எடுக்கும்போது இலகுவாயிருத்தல்; கரிமா - அணுப்போலிருந்தும் எடுக்குங்கால் மேருப் போலக் கனப்பது; பிராத்தி - எங்கும் செல்லும் ஆற்றலுடைமை; பிராகாமியம் - பரகாயத்தில் நண்ணுதல், ஆகாயத்தில் சஞ்சரித்தல், நினைந்த போகங்கள் எல்லாம் தானிருந்த இடத்தே வரப்பெறுதல், தன் உடல் ஒளியினாலே இருந்தபடியே மண்ணிலும் விண்ணிலும் உள்ள பொருள்களெல்லாமும் கால மூன்றும் அறிதல்; ஈசத்துவம் - ஈசனென முத்தொழிலும் செய்து தேவரும் பணிகேட்ப நிற்றல்; வசித்துவம் - எவ்வுயிரையும் தன் வசமாக்குதல்; இவற்றினியல்பைத் திருவிளையாடற் புராணம் அட்டமாசித்தி யுபதேசித்த படலம் முதலியவற்றுளும் இவரது திருமந்திரத்துள்ளும் காண்க.
  வருஞ்சித்தி - சிவயோகியர்கள் இவற்றை விரும்பார்; ஆயினும் அவர்களை இவை நிழல்போலப் பிரியாது அடைந்து அவர்களது பெருமைகளை உலகர்க்கு