[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்49

கள் பலவற்றையும் சென்று வணங்கி; சிந்தை...காவலனார் - மனமகிழ மிக விருப்பத்தோடும் தேவர் பெருமானாகிய புற்றிடங்கொண்ட பெருமானது திருவாரூரினை முற்பட வணங்கி முனைப்பாடி நாட்டவர்களின் தலைவராகிய நம்பியாரூரர் இனிதாக எழுந்தருளியிருந்தனர்.

55

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்கநின்றன. உவந்தணைந்தார் (54) என்பது பாடமாயின் தனிமுடிபுகளாக உரைத்துக் கொள்க.
3208. (வி-ரை) இட்டிகை - செங்கல். பொன் இட்டிகைகள் - செங்கல் வடிவமைந்த செம்பொற் கட்டிகள்.
ஆள்மேல்.....புக - ஏவலாட்கள் தாங்கிச் சென்று பரவையார் திருமாளிகையினுள் சென்று சேர்க்க. பொற்கட்டிகளின் மிக்க கனத்தால் ஆள்மேல் என்றார்.
தாமும்...உவந்தணைவார் - தாம் அவர்களுடன் நேரே திருமாளிகையிற் செல்லாது தமது உள நிறைந்த இறைவரைச் சென்று வணங்கிய பின்னரே அங்குச் சென்றருளுவார். இம்மரபு பற்றி முன்னர்ப் பலவிடத்தும் உரைக்கப்பட்டது; பின்னும் கண்டு கொள்க; இதனை உலகர் உள்ளங்கொண்டு ஒழுகும் பொருட்டு ஆசிரியர் அங்கங்கும் வற்புறுத்தி எடுத்துக் காட்டி யருளுதல் வழக்கு.
உளமன்னிய - தமது உள்ளத்தைவிட்டு நீங்காது, என்றும் எண்ணத்தில் நிலைபெறக் கொண்டிருக்கின்ற.
தாமும் - அணைவார் - ஆட்கள் புகுத அதன்பின் தாமும் என்ற இறந்ததுதழுவிய எச்ச உம்மை.
தம்பெருமானார் தம்மை - தம் - இருமுறை வந்தது இருபாலும் ஒட்டி நிகழும் தன்மை குறித்ததற்கு.
உவந்தணைவார் - வந்து - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. அணைவார் - அணைவாராகி; முற்றெச்சம்.
3209. (வி-ரை) பரவைப் பிராட்டியார் மகிழ வைகி - மகிழ்ச்சியாவது செம்பொன்னைத்திருப்பங்குனி உத்தர விழாவிற் பல வகையாலும் கொடை நேர்ந்து அடியார்க் களித்தனால் ஆயது.
ஆரூர் மருங்கு அணிய கோயில்கள் பலவும் - முன் உரைக்கப்பட்டன. இவை எண்ணிறந்தவை உள்ளன;
தெய்வப் பெருமாள் - தேவதேவர்; தேவர்கள் வந்து முறையிருந்து வழிபடும் சிறப்புக் குறித்தது; திருக்கூட்டச் சிறப்புப் பார்க்க.
திருவாரூர் முந்தி வணங்கி - திருவாரூரினை நாளும் வணங்கிப் பின் அணிய கோயில்களைச் சென்று வணங்கி மீண்டு திருவாரூரிற் சேர்ந்தவாறே, ஒரு நாளும் திருவாரூரை விட்டு நீங்கி அகலாது இனிதமர்ந்தார் என்பதாம்.
முனைப்பாடியர்தம் காவலனார் - திருமுனைப்பாடி நாட்டினரது தலைவர் என்று நம்பிகளது திருவவதாரம் பற்றி உரைத்தார்; திருவாரூரில் மகிழ்ந்திருப்பது தமது உலகத் தொடர்பன்றி அதனின்றும் சிறந்த உயிர்த் தொடர்பு பற்றி என்பதறிவித்தற்கு.

55

3210
லநா ளமர்வார் பரமர் திரு வருளா லங்கு நின்றும்போய்ச்
சிலைமா மேரு வீரனார் திருநன் னிலத்துச சென்றெய்தி
வலமா வந்து கோயிலினுள் வணங்கி மகிழ்ந்து பாடினார்
தலமார் கின்ற "தண்ணியல்வெம் மை"யினா னென்னுந்தமிழ்மாலை.

56