| தனிவந்து மேய்க்கின்றான் - நதிக்கரைப் புறவில் தனிவந்து என்க. மேய்க்கின்றானுடைய என்று ஆறனுருபு விரிக்க; தனி - துணையாகிய சிறுவர் ஒருவருமின்றி. "அங்கவளு மக்களுட னருஞ்சுற்ற மில்லாதாள்" (3581) என்று பின்னர் அவன் மனைவியைப்பற்றிந் கூறுதல் காண்க. |
| வினை மாள - உடல் வாழ்க்கை நிலைபெறும் எல்லையாக உள்ளது வினைப் போக மாதலின் அது கழிய என்க. "வினைப்போக மேயொரு தேகங்கண் டாய்; வினை தானொழிந்தாற், றினைப்போ தளவு நில்லாது" (பட்டினத்து அடிகள்) மாள - ஒழிய; எல்லை கழிய. |
| வாழ்நாளை - ஆயுட்காலத்தை; வாழ்நாளை விடமுண்ண - உண்ணுதல் - இங்கு விழுங்கித் தீர்த்தல் என்ற பொருளில் வந்தது. |
| விடம் - உண்ண - உண்ண - உண்டமையால் என்று காரணப்பொருளில் வந்தது. தன் மனையினின்றும் அன்று பகலே பசுக்களைக் கொணர்ந்து மேய்க்கின்ற அவன் சடுதியில் இறந்துபடுதற்கு வெளிப்படையான காரணம் விடந்தீண்டுதல் எனப் பட்டது; முன் பதிப்புக்களில் எல்லாம் கூற்றுண்ண என்றே பாடங் கொள்ளப்பட்டுள்ளது; விடமுண்ண என்ற இப்பாடம் இங்குப் பரிசோதித்த பழம்பிரதியொன்றிற் கண்டது; சடுதியில் இறந்துபடவந்த காரணம் கூறுதலால் இந்தப் பாடம் மேற்கொள்ளப்பட்டது; சடுதியில் சாவு வரக்கூடிய இந்நாளிற் காணும் நெஞ்சடைப்பு முதலிய நோய்கள் முன்னாளில் தொழிலாளிகளிடையே பயின்று காணப்படாமையும் அறியப்படும்; விடமுண்ண என்றது ஊழ்வந் துறத்தற்குற்ற புறத்தோற்றமாகிய காரணத்தையும், வினைமாள என்றது அதனை விளைக்கும் உட்காரணத்தையும் குறித்தன; "தனிப்பெருந் தருமந் தானோர் தயாவின்றித் தானை மன்னன், பனிப்பில்சிந்தையினி னுண்மைப் பான்மைசோ தித்தா லென்ன" (107); "வேந்தன்வழித்திரு மைந்த னாவி கொளவரு மறலி யூர்திக் கழுத்தணி மணியி னார்ப்போ வென்ன" (113) என்றும், "அன்ப ரின்புறு மார்வத்தி னளித்தபாங் கல்லாற்....புகலி காவலர்க்கிது புணரா, தென்ப துட்கொண்ட பான்மையோ ரெயிற்றிளம் பணியாய், முன் பணைந்தது போலவோர் முள்ளெயிற் றரவம்" (2954) என்றும் வரும் கருத்துக்கள் காண்க. |
| வீடி - மூர்ச்சை முதலியனவன்றி உயிர்போய் இறந்து என்பது குறிப்பு. |
| 11 |
3575 | மற்றவன்றன் னுடம்பினையக் கோக்குலங்கள் வந்தணைந்து சுற்றிமிகக் கதறுவன சுழல்வனமோப் பனவாக, நற்றவயோ கியர்காணா, நம்பரரு ளாலே"யா வுற்றதுய ரிவைநீங்க வொழிப்ப"னென வுணர்கின்றார்; | |
| 12 |
3576 | "இவனுயிர்பெற் றெழிலன்றி யாக்களிடர் நீங்கா"வென் றவனுடலிற் றம்முயிரை யடைவிக்க வருள்புரியுந் தவமுனிவர் தம்முடலுக் கரண்செய்து தாமுயன்ற பவனவழி யவனுடலிற் றம்முயிரைப் பாய்த்தினார். | |
| 13 |
| 3575. (இ-ள்) மற்றவன்தன்....மோப்பனவாக - மற்ற அவ்விடையனது உடம்பை அந்தப் பசுக்கள் வந்து அணுகிச் சுற்றி வருதலும், கதறுதலும், சுழலுதலும், மோத்தலும் ஆக நிகழ்ந்து வருந்த; நற்றவ யோகியர் காணா - நல்ல தவமுடைய இந்த யோகியார் அதனைக் கண்டு; நம்பர் அருளாலே - இறைவரது திருவருளினாலே, |