| |
| மழவறாதன அரங்கம் - பொலி - "மங்கல மென்ப மனைமாட்சி மற்றத, னன்கல நன்மக்கட் பேறு" என்ற கருத்தினை உட்குறித்தது. முன் 1908, 1909 பாட்டுக்களில் இதனை விரித்தமை காண்க. மங்கல - மழவு - என்று கூட்டியுரைப்பதும் சிறப்பு. |
| உழவறாத நல் வளத்தன் - குடிகள் - இப்புராணமுடைய நாயனார்வேளாளராதற் குறிப்பினால் அச்சிறப்புப்பற்றிக் கூறிய நயம் கண்டுகொள்க. இஃது ஆசிரியரது தெய்வக் கவிநலச் சிறப்புக்களுள் ஒன்று. ஆளுடைய பிள்யைார், சண்டீச நாயனார், திருநீல நக்க நாயனார், கண்ணப்பர், ஆளுடைய அரசுகள், திருநாளைப் போவார், அதிபத்தர் முதலியோர் புராணங்களுள்ளும் அவ்வவர்மரபுச் சிறப்புக் காட்டும்படி அவ்வந் நாடு நகரங்களின் பொலிவு கண்டு காட்டிய நயங்களும் ஈண்டு நினைவு கூர்தற்பாலன. |
| நல் வளம் - உழவினால் வரும் வளங்களின் ஈடற்ற உயர்வும், ஏனைத் தொழில் வளங்களிற் படும் குற்றங்களில்லாமையும் குறிப்பு. |
| 3 |
3158 | நீரி னிற்பொலி சடைமுடி நெற்றிநாட் டத்துக் காரி னிற்றிகழ் கண்டர்தங் காதலோர்குழுமிப் பாரின் மிக்கதோர்பெருமையாற் பரமர்தாள் பரவுஞ் சீரின் மிக்கது சிவபுரி யெனத்தகுஞ் சிறப்பால். | |
| 4 |
| (இ-ள்.) நீரினில்....குழுமி - கங்கையாற்றினைக் கொண்டு விளங்கும் சடைமுடியினையும், நெற்றிக் கண்ணினையும், மேகம்போல விளங்கும் கண்டத்தினையும் உடைய சிவபெருமானிடம் பேரன்புடையவர்கள் கூடி; பாரின்...பெருமையால் - உலகில் மிக்கதாகிய ஒப்பற்ற பெருமையினாலே; பரமர்....மிக்கது - சிவபரஞ்சுடரின் திருவடிகளையே துதிக்கின்ற சிறப்பினாலே மிகுந்தது; சிவபுரி......சிறப்பால் - அச்சிறப்பினாலே அது சிவபுரி என்று சொல்லப்படும் தகுதியினை யுடையது. |
| (வி-ரை.) நீர் - சிறப்பினாலே கங்கையாற்றினைக் குறித்தது. நீரினிற் பொலிதல் - நீரைச்சூடி விளங்குதல். காதலோர் - அன்பு காதலாய் முற்றி விளைந்த பேரன்பர்கள். |
| காதலோர்குழுமிப் பாரின் மிக்கதோர்சீர் - இப்புராணத்து வரலாற்றினுள் "எம்பிரா னெந்தை தந்தை தந்தையெங் கூட்டமெல்லாந், தம்பிரா னீரேயென்று வழிவழி சார்ந்து வாழும், இம்பரின் மிக்க வாழ்க்கை" (3546 - 392) என்று வரும் கருத்தின் முற்குறிப்பு. |
| பாரின் மிக்கது ஓர்பெருமை - உலகில் வரும் ஏனை எல்லாப் பெருமைகளிலும் இதுவே மிக உயர்ந்தது என்பதாம். |
| பரமர்தாள் பரவும் - தாள் - தாள்களையே என்று பிரிநிலை யேகாரம் தொக்கது. "தம்பிரா னீரே" (3546). |
| சிறப்பால் - அச்சிறப்பினாலே; சிறப்பால் - எனத்தகும் - என்று கூட்டுக. |
| மிக்கது - முன்கூறிய திருப்பெரு மங்கலமாகிய அந்நகர் என்று எழுவாய் முன் (3155) பாட்டினின்றும் வருவிக்க. முன் இரண்டு பாட்டுக்களால் உலகியல் நிலையில் நாடு நகர்வளங் கூறினார். இப்பாட்டினால் உயிரியல் நிலையின் சிறப்பினாற் கூறினார். |
| 4 |
3159 | இன்ன வாழ்பதி யதனிடை யேயர்கோக் குடிதான் மன்னி நீடிய வளவர்சே னாபதிக் குடியாந் | |