50திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

(இ-ள்) பலநாள்...போய் - பல நாட்கள் அவ்வாறு திருவாரூரில் விரும்பி எழுந்தருளி யிருந்த நம்பிகள் இறைவரது திருவருளாலே அங்கு நின்றும் சென்று; சிலை.....மகிழ்ந்து - பெரிய மேருமலையினை வில்லாகவுடைய வீரனாராகிய இறைவர் எழுந்தருளியுள்ள திருநன்னிலத்துப் பெருங் கோயிலினைச் சென்று சேர்ந்து வலம் வந்து திருக்கோயிலில் சென்று வணங்கி மகிழ்ச்சி பொருந்தி; தலமார்கின்ற.....தமிழ்மாலை - இந்நிலவுலகின் நிலவி விளங்குகின்ற "தண்ணியல் வெம்மையினான்" என்று தொடங்கும் தமிழ்மாலையினை; பாடினார் - பாடியருளினார்.
(வி-ரை) அமர்வார் - முன் சொன்னவாறு திருவாரூரிலே தங்கியபடியே அணிமையில் உள்ள கோயில்களுக்குச் சென்று சென்று மீண்டு எழுந்தருளியிருப்பாராகிய நம்பிகள்; அமர்வார் - வினைப்பெயர்.
திருவருளால் - திருவருட் குறிப்பாகிய விடை பெற்று மேல் வரலாற்றின் விளைவுகள் நிகழ வேண்டிய காரணம் பற்றிய திரு அருளினாலே.
சிலை - வில்; சிலையாக மேருவினைப் பிடித்த வீரனார்.
தலம் ஆர்கின்ற - தலம் - இந்நிலவுலகம்; ஆர்தல் - புகழ் நிறைந்து விளங்குதல்.
தண்ணியல் வெம்மையினான் - தட்பமுடைய வெம்மை; முரண் அணி; "அங்கங் குளிர்ந்தன லாடு மெங்க ளப்பன்"(அம்மை. மூத்த. பதிகம்); தண்ணியல்பாவது கருணை; வெம்மை - சங்காரம்; சங்காரமும் அருளேயாம் என்பது.
திருநன்னிலம் - இது மாடக்கோயில் என்னும் பெருங்கோயில்களுள் ஒன்று.

56

திருநன்னிலத்துப் பெருங்கோயில்
திருச்சிற்றம்பலம்

பண் - பஞ்சமம்

தண்ணியல் வெம்மையினான் றலை யிற்கடை தோறும்பலி
பண்ணியன் மென்மொழியா ரிடங் கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறையோர் முறை யாலடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத்துப் பெருங் கோயி னயந்தவனே.

(1)

கோடுயர் வெள்ளெயிற்றுத் திகழ் கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய நன்னிலத்துப் பெருங் கோயி னயந்தவனைச்
சேடியல் சிங்கிதந்தை சடை யன்றிரு வாரூரன்
பாடிய பத்தும்வல்லார் புகுவார்பர லோகத்துளே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு: - சிவபெருமான், கோச்செங்கணான் செய்கோயிலாகிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவர்.
பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) தண்ணியல் வெம்மையினான் - இறைவர் ஏந்தியாடும் தீ உயிர்களுக்குப் பிறவி வெப்பம் தீரத் தண்மை செய்து குளிர்விக்கும் தன்மை பொருந்தியது; பலி - இட - என்க; பண்டரங்கன் - பண்டரங்கம் என்னும் கூத்துடையவன்; பெருங்கோயில் மாடக்கோயில்; கோசசெங்கட் சோழ நாயனார் சிவனுக்கு அமைத்த மாடக் கோயில் எழுபதினுள் ஒன்று. 10-வது பாட்டுப் பார்க்க; நயந்தவன் - விரும்பி வீற்றிருப்பவன்; முறையால் - ஆகம நூல் விதித்த முறைப்படி;-(2) மாதவம் செய் மலை மங்கை - உமையம்மை தவஞ் செய்த வரலாறு கந்த புராணத்துட் காண்க; தவஞ் செய்து மணஞ் செய்து கொண்டமையால் ஒரு பங்கினன் என்றார்; உளங்கிளர் கங்கை - "சலமுகத்தால்" (திருவா); பொழில் -