| மேல்பாலை மலையணைய - மாலைப் பொழுது ஆகும் நேரம் வர; மேம்பாலை மலை - மேற்கு மலைகள். |
| சைவ நெறி மெய் உணர்ந்தோர் - சிவாகம உண்மைகளை நந்தி திருவருள் உபதேசத்தால் அறிந்து சிவயோகம் தமது உணர்ச்சியிற் கைவந்தவர்; சைவ நெறி மெய் - வேத சிவாகம முடிபுகளாகிய உண்மைகள்; உணர்ந்தோர் - சுய அனுபூதிகத்தில் உள்ளுறப் பெறும் நிலை வந்தவர். உணர்ந்தோர் - பின் போனார் என்று கூட்டுக. |
| தாமே......ஆகி - வந்தெய்த - பசுக்கள் மேய்விடத்தினின்றும் மாலைப்போதில் தத்தம் மனைகளுக்குத் திரும்பும்போது வேறு ஒருவர் செலுத்தாமல் தாமே இடமறிந்து செல்லுமியல்பு குறிக்கத் தாமே என்றார். |
| பைய நடப்பன - வயிறு நிறைய மேய்ந்திருத்தலானும் மற்றும் தம் இயல்பானும் பசுக்கள் பைய நடப்பது அவற்றின் இயற்கை. |
| கன்றை நினைந்து படர்வன - அவற்றின் நினைப்பு அவை கன்றுகளை நினைந்து அம்மா என அழைத்து நடத்தலால் காணப்படும்; சில பசுக்கள் வாளா பைய நடப்பன; மற்றும் சில கன்றை நினைந்து அழைத்துப் படர்வன; இஃதவற்றின் வாழ்க்கை யியல்பு. |
| ஆக - வந்து - எய்த என்று கூட்டுக; எய்த ஊரெல்லை எய்தும் வரை என்க. |
| வையநிகழ் சாத்தனூர் - உலகிற் புகழ் மிக விளங்கும் ஊர் . நிகழ் -எக்காலத்தும் நிகழ்வதாகலின் முக்காலத்துக்கும் பொருந்தும் என்று வினைத்தொகையாற் கூறினார். நிகழ்தல் - என்றும் புகழ் விளங்க இருத்தல்; புகழாவது அந்தணர் சிறப்பும் இச்சரித நிகழ்ந்த சிறப்புமாம். |
| சாத்தனூர் - பின் போனார் - பசுக்கள் அந்த ஊரினைச் சார்ந்தவை என்றும், அது சாத்தனூரென்றும் யோகியார் அறியார்; ஆனால் பசுக்களைப் பின்பற்றிச் சென்றால் அவை தாமே தமதியற்கை யறிவு கொண்டு ஊருக்குக்கொண்டு செலுத்தி விடுமென்னு மியல்புணர்ந்தா ராதலின் பின்போனார்; ‘சோவுடனே கூடிவரும் குருட்டாவு மூர்புகுதும்’ (உமாபதி சிவம்); யோகியார் அவ்வூரறியாராய் அப்போதுதான் வந்தெய்துகின்றாராதலின் அவ்வூர் என்று முன்னறி சுட்டாற் கூறாது சாத்தனூர் என்று பெயர் கூறிச் சொல்லியதுமன்றி வைநிகழ் - என அதன் சிறப்பும் கூறினார் . இது தெய்வக் கவிநயம். |
| 16 |
3580 | போனவர்தாம் பசுக்களெலா மனைதோறும் புகநின்றார்; மானமுடை மனையாளும் "வைகியபின் றாழ்த்தா"ரென் றானபயத் துடன்சென்றே யவர்நின்ற வழிகண்டாள் "ஈனமிவர்க் கடுத்த" தென மெய்தீண்ட வதற்கிசையார், | |
| 17 |
3581 | அங்கவளு மக்களுட னருஞ்சுற்ற மில்லாதாள் தங்கிவெரு வுறமயங்கி "யென்செய்தீர்?"எனத்தளர "இங்குனக்கென் னுடனணைவொன் றில்லை" யென வெதிர்மறுத்துப் பொங்குதவத் தோராங்கோர் பொதுமடத்தி னுட்புகுந்தார். | |
| 18 |
| 3580. (இ-ள்) போனவர்தாம்....நின்றார் - முன்கூறியவாறு பசுக்களின் பின் போன திருமூலர் பசுக்கள் எல்லாம் அவ்வவற்றின் மனைகள்தோறும் புக அவ்வெல்லை யளவில் நின்றனர்; மானமுடை.....கண்டாள் - பெருமையுடைய அவ் |