| விடையனது மனைவியும் "தன் நாயகர் போது வைகிய பின்னும் வரத் தாழ்த்தனர்" என்று நினைத்த அச்சத்துடன் சென்றே அவர் நின்று கொண்டிருந்த வகையினைக் கண்டாள்; ஈனம்....இசையார் - இவருக்கு ஏதோ தீங்கு நேர்ந்துள்ளது என்று கருதி அவரை மெய்தீண்ட அவர் அதற்கு இசையாராகி; |
| 17 |
| 3581. (இ-ள்) அங்கவளும்......மயங்கி - அங்கு அதற்கு அவளும் மக்களோடு அரிய சுற்றத்தாரையும் இல்லாதவளாதலின் தங்கிப் பயந்து மயங்கி; என் செய்தீர் எனத் தளர - என்ன செய்தீர் என்று மனந்தளர்ந்து வருந்த; இங்குனக்கு.......எதிர் மறுத்து - இங்கு உனக்கு என்னுடன் தொடர்பொன்றுமில்லை என்று மறுத்து; பொங்கு......புகுந்தார் - மேன்மேலும் வளரும் பெருந் தவத்தினையுடைய திருமூலர் அவ்விடத்து ஒரு பொது மடத்தினுள்ளே போய்ப் புகுந்தனர். |
| 18 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3580. (வி-ரை) பசுக்களெல்லாம் மனைதோறும் புக நின்றார் - ஊர் எல்லை வரையும் பசுக்கள் ஒருங்குசேர வந்தன; அதன்பின் அவை தந்தம் மனைகள் தோறும் புக அங்கங்கும் பிரிந்து செல்ல வேண்டியவையாதலின் அதுவரை பின் பற்றி வந்த திருமூலர் மேலும் செல்ல இயலாமையால் அவ்விடத்து நின்று கொண்டு அவை மனைதோறும் புகுவதனைப் பார்த்து இருந்தார் என்பார் புகநின்றார் என்றார்; முன்னர்ப் பின் போனார் என்றமை காண்க. நின்ற இடம் ஊருக்குள்ளே புகும் வழியில் பொது இடம் என்பதாம். |
| மானமுடை - மானம் - பெருமை; ஈண்டுக் கற்பு முதலிய பெண்மை நலம் குறித்தது. |
| வைகியபின் தாழ்த்தார் - வைகுதல் - நாள் எல்லை கழிதல் என்ற பொருளில் வந்தது; வைகியபின் - நாள் எல்லை அற்றபின்; நாட்போது கழிந்த பின்னும்; சிறப்பும்மை தொக்கது; தாழ்த்தார் - தனது நாயகன் மனைக்குத் திரும்பிவருதலைத் தாழ்த்தனர்; "போதும் வைகிற்று" (451) என்றதும், "வைகுறு" என்றதற்கு எமது மாதவச் சிவஞான முனிவர் சூத்திரவிருத்தியுள் உரைத்தனவும் காண்க. |
| ஆனபயம் - உளதாகிய அச்சம்; நாயகனுக்கு என்ன தீங்கு நேர்ந்ததோ என்று எண்ணியதாலாகிய அச்சம். "ஆனபயம் ஐந்தும் தீர்த்து" (121) |
| அவர் நின்ற வழி - அவர் - உடம்பினைக் கண்ட அளவால், தனது கணவர் என்று மனைவி எண்ணிய அவர் என்றும், உடம்பிற்குள் புகுந்து நின்ற அவர் (திருமூலர்) என்றும் உரைக்க நின்றது; நின்ற வழி - வழி - தன்மை என்ற பொருளில் வந்தது; இரண்டனுருபு தொக்கது. வழி - இடம் என்றலுமாம். |
| ஈனம் - எதுவோ ஓர் தீங்கு; புத்தி மாறக்கூடிய தொருநிலை; நோய்; என - என்று கொண்டு. |
| மெய் தீண்ட - பற்றி மனைக்குக் கொண்டு செல்ல முயல. |
| இசையார் - இசையாராகி; மறுத்துப் - புகுந்தார் என்று வரும் பாட்டினுடன் முடிக்க. |
| 17 |
| 3581. (வி-ரை) அங்கவளும்.........இல்லாதாள் - தனக்குத் துணையாக உள்ள சுற்றத்தவர்கள் இல்லாமையால் தானே தனிமையிற் றளவர்வாளாயினாள் என்பது. தங்கி - அங்கே செயலற்று நின்று. |
| என்செய்தீர் என - துயரத்தில் வரும் இரக்கக் குறிப்பு. |
| தங்குதல் - வெருவுறல் - மயங்குதல் - தளர்தல் - இவை சடுதியில் நேர்ந்த பெருந்துன்பத்தினால் நேர்ந்த மெய்ப்பாடுகள்; திருமருகலில் "மறுமாற்ற மற் |