[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்51

மதிதடவ - பொழிலின் உயர்ச்சி குறித்தது;-(3) கச்சியன் - காஞ்சிபுரத்தில் மேவியவர். கருப்பூர் - வைப்புத் தலங்களுள் ஒன்று; நொச்சி - புனல் - பூசைக்கின்றியமையாதவை; "புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு" (திருமந்); "குடங்கைநீரும் பச்சிலையும்" (திருவிளையாடல்);-(5) பிலம் தரு - தரு - உவமவுருபு;-(6) பெண் - கங்கை;-(7) தொடைமலி - மலி - உவமவுருபு;-(8) குராவோடு - "குராமலரோ டராமதியம்"(தாண்); நளிர்தரு - குளிர்ச்சி செய்கின்ற;-(9) தமர் - சிவன் சுற்றம் அடியார்;-(10) செம்பியர்கோன் - நரபதி - கோச்செங்கட் சோழ அரசர்;-(11) கோடு - கொம்பு. சிங்கி - சிங்கடி; சடையன் திருவாரூரன் - தந்தை பெயர் கூட்டித் தம் பெயர் கூறும் நவீனர் வழக்குக் காண்க.
தலவிசேடம் : - திருநன்னிலத்துப் பெருங்கோயில் காவிரித் தென்கரை 71-பதி. மாடக்கோயில்களுள் ஒன்று; மதுவனம் என வழங்கப்படுவது; சான்றாகத் தேன்கூடு ஒன்று விளக்குச் சுடருருவாகத் திருக்கோயிலினுள் இன்றும் இருக்கின்றது; பூசிக்கப்பட்டு வருகின்றது; (குறிப்பு) இக்கோயில் மிகவும் பழுதுபட்டுக் கதவுகள் தாழ் இல்லாமல் கவனிப்பாரின்றிக் கிடக்கின்றது. இதனைச் செப்பனிட்டுத் திருப்பணி செய்தல் சிறந்த சிவபுண்ணியம்; அவ்வாறு செய்வது இறைவன் பணியாதலோடு கோச்செங்கட்சோழ நாயனாருக்குப் பணியும், ஆளுடைய நம்பிகளுக்குப் பணியுமாம். சுவாமிகோயில் கட்டுமலைமே லுள்ளது. சுவாமி - பிரகேசுரர் - மதுவநேசுவரர்; அம்மை - பிரகேசுவரி - மதுவத நாயகி; தீர்த்தம் - பிரம தீர்த்தம்; கோயிலுக்கு வடக்கில் உள்ளது. பதிகம் 1. அம்மை கோயிலும் அகத்தியர் கோயிலும் கீழே உள்ளன.
இது நன்னிலம் (செந்நாவூர்) நிலயத்தினின்றும் மேற்கே கற்சாலை வழி1 1/2 நாழிகையளவில் உள்ள திருச்சுரத்தை யடைந்து அதனின்றும் பின்னும் மேற்கே 1 1/2 நாழிகை அளவில் அடையத் தக்கது. (இதனின்றும் தென்மேற்கே மாப்பிள்ளைக்குப்பம் மட் சாலை வழி 3 நாழிகையளவில் திருவாஞ்சியம் உள்ளது.) இப்பதிக்கு மோட்டார் வண்டி வசதி உண்டு.
3211
பாடி யங்கு வைகியபின் பரமர் வீழி மிழலையினில்
நீடு மறையான் மேம்பட்ட வந்த ணாளர் நிறைந்தீண்டி
நாடு மகிழ வவ்வளவு நடைக்கா வணம்பா வாடையுடன்
மாடு கதலி பூகநிரை மல்க மணித்தோ ரணநிரைத்து,

57

3212
ந்து நம்பி தம்மையெதிர் கொண்டு புக்கார்; மற்றவருஞ்
சிந்தை மலர்ந்து திருவீழி மிழலை யிறைஞ்சிச் சேண்விசும்பின்
முந்தை யிழிந்த மொய்யொளிசேர் கோயி றன்னை முன்வணங்கிப்
பந்த மறுக்குந் தம்பெருமான் பாதம் பரவிப் பணிகின்றார்,

58

3213
டங்கொ ளரவிற் றுயில்வோனும் பதுமத் தோனும் பரவரிய
விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளக முடன்பரவி
"அடங்கல் வீழி கொண்டிருந்தீ ரடியே னுக்கு மருளு"மெனத்
தடங்கொள் செஞ்சொற் றமிழ்மாலை சாத்தி யங்குச் சாருநாள்.

59

3214
"வாசி யறிந்து காசளிக்க" வல்ல மிழலை வாணர்பாற்
றேசு மிக்க திருவருள்முன் பெற்றுத் திருவாஞ் சியத்தடிகள்

60