486 | திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்] |
| 3586. (இ-ள்) தண்ணிலவார்.........கரப்பிக்க குளிர்ச்சி பொருந்திய சந்திரன் நிறைந்த சடையினையுடைய மகா சதாசிவமூர்த்தி அருளினாலே தந்த சிவாகமங்களின் பொருளை நிலவுலகத்திலே திருமூலரது திருவாக்கின்மூலம் தமிழிலே வகுப்பதற்காகக் கருதிய அந்தத் திருவளால் அந்த உடலினை மறைப்பித்தாராதலின்; எண்ணிறைந்த.....உணர்ந்தார் - எங்கும் நிறைந்த முற்றுணரவுடையவராகிய திருமூலர் அச்செயலினைச் சிந்தையில் தெளிந்து அஃது ஈசரருளாலாயிற்று என உணர்ந்தனர். | | 23 | | இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. | | 3585. (வி-ரை) இந்த நிலைமையிலிருந்தார் - பசுக்களின் துயரை நீக்க எண்ணிப் பரகாயப் பிரவேசம் செய்து இடையனுடம்புடன் பசுக்களை ஊரில் மனை தோறும் செலுத்த, இடையன் மனைவி மெய் தீண்ட வர, அவளை மறுத்துத் தாம் பொதுமடத்திலிருக்க; ஊரவர்வந்து நாட, என்றிவ்வளவும் தொடர்பு கொள்ள நேர்ந்த நிலைமை; இத்துணையும் இந்த நிலைமை என்ற இரு சொற்களாற் சுட்டிப் பெற வைத்தார். | | எழுந்திருந்து - எழுந்து; ஆனிரைகள் வந்தவழியே சென்று - தாம் அங்குப் போகத் தொடங்கிய மேய்விடமும் உடலைக் காப்பில் வைத்த இடமும் தெரிந்து செல்வதற்கு ஆனிரைகள் வந்த வழியே சென்றால் அறியும் அடையாளம் பெறலாமாதலின் அவ்வழியினையே பற்றிச் சென்றார். | | வைத்த.....பொறை - தாம் அடையாளம் பெற வைத்துச் சேமம் செலுத்தி நீங்கிய தமது முன்னை உடல்; உடற்பொறை - உடலாகிய சுமை; வீடுபேறு கருதியயோகியர்க்கு உடம்பும் சுமையாகத் தோன்றும் ஆதலின் பொறை என்றார். "மற்றுந் தொடர்பா டெவன்கொல் பிறப்பறுக்க, லுற்றார்க் குடம்பு மிகை" (குறள்). | | வைத்த-உய்த்த-தாம்விட்டு நீங்கிய செயல் ஒன்றும்,இடையுடனுற்கண் நின்று அதற்குக் காப்புச் செய்த செயல் ஒன்றும் குறிக்க வைத்த -உய்த்த என்றார். | | முழுதுணர்ந்த மெய்ஞ்ஞானச் சிந்தை - முற்றும் உணர்தலாகிய மெய்ஞ்ஞானம் கைவரப்பெற்ற சிந்தை. இஃது எண் சித்திவகையினாலும், நந்திபெருமான் திருவருள் ஞானோபதேசத்தினாலும் வருவது. மேலும் இதனையே"எண்ணிறைந்த உணர்வுடையார்" (3686) என்பது காண்க. | | வந்த செயல் - உடற்பொறை மறைந்துவிட நேர்ந்த செயலினை. | | தெளிகின்றார் - தெளிகின்றாராகி; முற்றெச்சம். தெளிகின்றார் - உணர்ந்தார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. | | 22 | | 3586. (வி-ரை) சடையார் தாம் தந்த ஆகமப்பொருளை - சிவபெருமான் தமது ஈசானமுகத்திற்சத்தியோசாத முதலிய ஐந்து திருமுகங்களாலும் அருளியவை காமிக முதலிய இருபத்தெட்டு ஆகமங்கள். அவற்றின் பொருளாவன சரியையாதி நாற்பாத நிலைகளும் முப்பொரு ணிச்சயமும் சாதனமும் பயனும் முதலியவை. | | சத்தியோசாத முகத்தினின்று காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம் என்ற ஐந்து ஆகமங்களும், வாமதேவத்தினின்றும், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், என்ற ஐந்தும், அகோரத்தின், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம் என்ற ஐந்தும், தற்புருடத்தின் இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம் என்பவை ஐந்தும், ஈசானத்தில் புரோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேச்சுவரம், கிர |
|
|
|
|