[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 30. திருமூலதேவ நாயனார் புராணமும் உரையும்489

  பெருகு ஆர்வச் செற்ற முதல் கடிந்தவர் - திருமூலர்; ஆர்வம், செற்றம், குரோதம் முதலியவை விலக்கற்பாலனவாகிய தீக்குணங்கள். முதல் - வேர் - வேரறக் கடிந்தவர்; கடிதல் - வெறுத்து நீக்குதல்; "களவுபொய் காமங் கோப முதலிய குற்றங் காய்ந்தார்" (1784). பெருகு - பிறவி பெருகுதற்குக் காரணமாகிய என்றலுமாம்; ஆர்வம் - பெருவிருப்பம்.
  ஆ அடு தண்டுறை சேர்ந்தார் - துறை என்றதற்கேற்பத் தண் என்றார். - (பசுத்துவம்); வினை அடுமவதாயினும் வெப்பமின்றித் தண்ணியதுறை என்றதும் குறிப்பு. "தண்ணியல் வெம்மையினான்" (நம்பிகள்); சேர்ந்தார் - மீண்டும் வந்தணைந்தார்; "அந்நிலைமைத் தானத்தை அகலாத தொருகருத்து, முன்னியெழுங் குறிப்பினால் மூளு மாதரவு" (3573) முன்னரே பெற்றனராதலின் அதனையே தொடர்ந்து சென்று சேர்ந்தனர் என்பதாம்; சாத்தனூரில் சிந்தையில் செயல் ஆராய்ந்தபோது தமிழில் ஆகமப்பொருள் வகுப்பதற்காக உடற்பொறை மறைக்கப்பட்டதென உணர்ந்தனரேயன்றி இன்ன இடத்தில் அது நிகழ்வதென்று இடம் உணர்த்தப்படவில்லை. அது முன்னரே உணர்த்தப்பட்டதாதலின் அதனைப்பற்றிக்கொண்டு சேர்ந்தனர் என்பதாம். சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை" (திருமந்).
 

24

3588
வடுகண் டுறையணைந்தங் கரும்பொருளை யுறவணங்கி
மேவுவார் புறக்குடபான் மிக்குயர்ந்த வரசின்கீழ்த்
தேவிருக்கை யமர்ந்தருளிச் சிவயோகந் தலைநின்று
பூவலரு மிதயத்துப் பொருளோடும் புணர்த்திருந்தார்.
 

25

  (இ-ள்) ஆவடுதண்டுறை....மேவுவார் - திருவாவடுதுறையினைச் சேர்ந்து அங்குச் சிவபெருமானைப் பொருந்துமாற்றால் வணங்கி அங்குத் தங்குவாராகி; புறக்குடபால்.....அமர்ந்தருளி - திருக்கோயிற் சுற்றின் புறத்திலே மேற்குப் பக்கத்திலே மிகவும் உயர்ந்த அரசமரத்தின் கீழே தேவாசனத்தில் அமர்ந்து எழுந்தருளியிருந்து; சிவயோகம்....புணர்ந்திருந்தார் - சிவராசயோகத்தின் மிக்கிருந்து இதய கமலத்தில் அரும்பொருளாகிய இறைவருடன் இரண்டறக் கூடி ஒன்றியிருந்தனர்.
  (வி-ரை) அரும்பொருளை உறவணங்கி - அரும்பொருள் - சிவபெருமான், பெறுதற்கரிய பொருள்களெல்லாவற்றுள்ளும் அரியவர் அவரேயாகலான்; உற - விதிப்படி பொருந்த.
  மேவுவார் - புணர்ந்திருந்தார் - என்று கூட்டுக. மேவுவாராகி; முற்றெச்சம்.
  புறக்குடபால் மிக்குயர்ந்த அரசின்கீழ் - இவ்வரச மரம் அக்காலத்தில் திருக்கோயில் புறச்சுற்றில் மேற்குப் பக்கத்தில் இருந்தது; இப்போது திருமூலர் சந்நிதி உள்ள இடத்தின் மேற்கில் இருந்ததென்றும் தெரிகிறது. திருமூலர் சந்நிதி இப்போது கோயிலுக்குள் வாயில் இருக்கத்தக்கதாக அமைவுபடுத்திச் சேர்க்கப்பட்டிருக்கிறது; இவ்வமைப்பை நீக்கிப்பார்க்கின் அச்சந்நிதி புறக்குடபால் அமைதல் காணப்படும்.
  மிக்குயர்ந்த அரசு - செறிந்து மிகவும் உயர்ந்து வளர்ந்த அரசமரம். இஃது இப்போது அங்கில்லை. இப்போது கோயில் அபிமுகத்தில் கிழக்குக் கோபுரத்தருகில் உட்புறம் உள்ளது. இது படர் அரசு என்ற ஒருவகையுட் சேர்ந்தது. பல பல