|
  |  | இப்புவிமேல் மகிழ்ந்திருந்து - தாம் முன் இருந்த திருக்கயிலையில் இருத்தலுமின்றி,   மேற்குறித்துப் போந்த பொதிகையிற் சேர்தலுமின்றி, இடைவழியில் இங்குத் தங்க நேரிடினும்,   திருவருள் கைவந்த வழியே இருந்தாராதலின் மகிழ்ந்து என்றார். | 
  |  | திருவருளால் - திருக்கயிலை தன்னில் அணைந்து - தாம் குறித்துப் போந்தபடி பொதிகையில்   செல்லாது என்க. அதற்குக் காரணம் திருவருள் ஆணை தந்து செலுத்திய தென்றார். | 
  |  | ஒருகாலும் பிரியாமை தாள் அடைந்தார் - முன்னர்ப் பிரிந்து போந்தமை போல இனி எக்காலமும்   பிரியாதபடி என்க. தாள் அடைதல் - சிவசாயுச்சியத்துட் கலந்திருத்தல்; முன் இருந்தநிலை   சிவயோக நிலை என்க. | 
  |  | 27 | 
  | 3591 |                       | நலஞ்சிறந்த ஞானயோ கக்கிரியா சரியையெலாம் மலர்ந்தமொழித் திருமூல தேவர்மலர்க் கழல்வணங்கி
 அலர்ந்தபுகழ்த் திருவாரூ ரமணர்கலக் கங்கண்ட
 தலங்குலவு விறற்றண்டி யடிகடிறஞ் சாற்றுவாம்.
 |  | 
  |  | 28 | 
  |  | (இ-ள்) நலஞ்சிறந்த....கழல்வணங்கி - நன்மை தருதலிற் சிறந்து விளங்கும் ஞானம்   யோகம் கிரியை சரியை என்ற நான்கு நெறிகளும் விரிந்த மொழியினை யுடைய திருமூல தேவரது மலர்போன்ற   திருக்கழல்களை வணங்கி (அதனாற் பெற்ற திருவருளின் துணைகொண்டு); அலர்ந்த ...கண்ட - திசைகளில்   எங்கும் விரிந்து பரவிய புகழினையுடைய திருவாரூரிலே அமணர்களது கீழாயின செயல்கள் கலங்குதலைச்   செய்த; தலங்குலவு...... சாற்றுவாம் - உலகில் விளங்கும் வலிமை பொருந்திய தண்டியடிகளது   அடிமைத் திறத்தினை எடுத்துச் சொல்லப் புகுகின்றோம். | 
  |  | (வி-ரை) இது கவிக்கூற்று. ஆசிரியர் தமது நியமப்படி இதுவரை கூறிப்போந்த சரிதத்தை   முடித்துக்காட்டி மேல்வரும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்தருளுகின்றார். | 
  |  | நலஞ்சிறந்த......மலர்ந்த மொழி - இது இதுவரை கூறிப்போந்த சரித உள்ளுறையும் சரித   சாரமுமாகும். | 
  |  | நலஞ்சிறந்த - வீடு பேற்றுக்கு நெறிகளாகிய. | 
  |  | திருமூல தேவர் - நாயனாரது பெயர்; இவ்வாறு சில பிரதிகளில் இப்புராணப் பெயர் எழுதப்பட்டுள்ளது. | 
  |  | கழல் - "கள்ளவினை, வென்று பிறப்பறுக்கச் சாத்தியவீ ரக்கழலும்"   (போற்றிப் பஃறொடை) என்ற கருத்து. "பிறவிவிடர் தீர்ந்துலகத் தோருய்ய, ஞான முத னான்குமலர்   நற்றிருமந் திரமாலை" (3589) என்றபடி, பிறவியறுக்க வழி தேடித் தந்த வெற்றிக் குறிப்புப்படக்  கழல் என்றார்; அணிமாதி சித்திகளும் யோகநிலையும் கூடிக், காலத்தையும் வெற்றிகொண்ட   பண்பும் குறிப்பு. | 
  |  | அலர்ந்த புகழ்த் திருவாரூர் - இறைவர் ஆட்சிபுரிந் தமர்ந்தருளும் புகழ். | 
  |  | அமணர் கலக்கங் கண்ட - விறல் தண்டியடிகள் சரிதத் தோற்றுவாயும் உள்ளுறையுமாம்; சரித   சாரம்; அமணர் கலக்கமாவது - ஆரூரில் அமணர்களது நிலைபேற்றினைக் கலங்கச் செய்து   அப்புறப்படுத்தியது. கண்ட - காணுதல் - செய்தல்; "முதல்வன் கண்டது முதனூலாகும்." |