498திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

கண்ணார் மணி - கண்ணில் ஒளிகாட்டும் கண்மணி என்ற அங்கக் கூறு; "கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய்" (தேவா); ஒன்றும் - ஒரு சிறிதும்; கண்ணார்....இன்றி - கட்பார்வை யில்லாத அந்தகராகியும்; கயிறு பிடித்து - குளக்கரையிலிருந்து அடிவரை தறிநட்டுக் கயிறு கட்டி அந்தக் கயிற்றைத் துணையாகப் பிடித்து ஏறியும் இறங்கியும்; தடம் தொட்டலும் - கரையில் இடத்தாற் குறைபாடுபட்ட கமலாலயக் குளத்தை அகலமாக்கக் கல்லுதலும்; தொடலும் என்றது தொட்டலும் என வந்தது செய்யுள் விகாரம்; யாப்பமைதி நோக்கி வந்தது; நகும் அமணர் - வன்கண்மையால் இழிசொற் கூறிச் சிரித்த அமணர்கள்; புராணம் பார்க்க; ஆங்கு - அப்பொழுதே; அவ்விடத்தே; அமணர்கள் கண் இழப்பத் தாம் கண் பெற்றவர்; வரலாறு புராணத்துள் விரிக்கப்படும்; அம்மலர்க்கண் - அமணர்கள் விழி இழந்தாய் என்று இகழ்ந்ததும், உன் கடவுளருளால் பெற்றனையேல் ஊரிலிரோம் என்று ஒட்டியதும், அந்த ஒட்டுதலில் கலக்கம் காணப்பெற்றதும் ஆகிய அந்த என முன்னறிசுட்டு; கண்ட அம்மலர்க்கண் என்றது கண்டம்மலர்க்கண் என வந்தது - கண்ட என்றதில் ஈற்றகரம் கெட்டது செய்யுள் விகாரம்; விறல் - திருத்தொண்டின் உறைப்பாகிய அஞ்சா வீரம்; தண்டியே பெற்றவன் என்க.
கலக்கம் - ஒட்டிக்கெட்டுத் தம் நிலையிழந்து கலங்கிய கேடு; கண்ட - தம் கண்ணாற் கண்ட; கலக்கங் கண்ட என்பதும், விறல் - என்பதும் ஆசிரியர் எடுத்தாண்டருளினர் (3591). கண்ட - காரணராயிருந்த - செய்த என்றலுமாம். "முனைவன் கண்டது முதனூல்" (தொல்.) என்புழிப் போல.
பேரும் பண்பும் தொகைநூல் தொகுத்துப் பேசிற்று; ஊரும், பேரும், சரித வரலாறும் பண்பும் வகைநூல் வகுத்தது; இவை விரிந்தபடி விரிநூலுட் கண்டு கொள்க.
விரி :
3592. (இ-ள்.) தண்டி அடிகள் - தண்டியடிகள் என்னும் பெயருடையார்; திருவாரூர்....தவமுடையார் - திருவாரூரிலே பிறக்கும் பேறுடைய பெருமையாகிய முன்னைத் தவத்தினை உடையவர்; அண்டவாணர்.... குறிப்பேயன்றி - தேவர்கள் வேத முழக்கங்களைச் செய்ய ஆடுகின்ற சிவந்த பொன்போன்ற திருவடிகளை மனத்தினுள்ளே கொண்ட அகக்கண்ணாற் காண்கின்ற குறிப்பொன்றே யல்லாது; புற நோக்கும்....போல் - வெளிப்பார்வையால் நோக்கும் அளவுபட்ட வுணர்வினை ஒழித்தவர்போல; பிறந்த....காணார் - அவதரித்த நாளினின்றே புறக்கண் பார்வை யில்லாதவர்.
(வி-ரை.) தண்டியடிகள் - உடையார் - கண்காணார் - என்று முடிக்க.
தண்டியடிகள் - நாயனாரது பெயருடைனே புராணந் தொடங்குவது ஓர் சிறப்பு.
திருவாரூர்....தவமுடையார் - திருவாரூர்ப் பிறக்க முத்தி என்பவாதலின், அவ்வாறு பிறத்தல் தவமுதிர்ச்சியினால் முத்திபெறும் தகுதி வாய்ந்தவர்க்கல்லது கிட்டாது; அங்குப் பிறக்கப் பெறுதலே வீடு பெறும் தகுதி கொடுக்கும். தவங்களுள் எல்லாம் பெருந்தவமாதலாலன்றோ பெருநன்மையாகிய வீடுதரும் வகையால் திருவாரூரிற் பிறப்பைக் கொடுக்கும் என்பதாம்.
அண்டவாணர் - தேவர்கள்; அண்டவாணர்....ஆடும் செம்பொற்கழல் - இது தியாகேசரது ஆடல் குறித்தது. தியாகேசர் தேவலோகத்தினின்றும் இங்குப்