| |
| நிலையும், பிள்ளையார் சரிதத்திலும் அவ்வாறே தம் வயப்பட்ட பாண்டியன்பால் அறிவித்த நிலையும், பிறவும் இங்குக் கருதத்தக்கன. |
| மண்ணை...வேண்டாம் என்று - இஃது இதோபதேசம் போலக்காட்டி உலகை ஏமாற்றும் வஞ்சகச் சொல்லாதல் காண்க. இவ்வாறே தத்தம் சுயநலத்தை உள்ளே பொதிந்து மறைத்து உலகை ஏமாற்றி, வஞ்சிக்கும் நீதி மொழிகளைக் கூறிச், சீவனோபாயம் காணும் மக்கள் பலரை உலகியலிற் காணலாம்; ஆனால் இவர்கள் வஞ்சனை, ஏமாந்த மக்களிடையேயும் சிவகாலம் செல்லுமேயன்றி முற்றும் செல்லாமை பலதிறத்தானும் அறியப்படும். மறைந்து எங்குமுள்ளவராகிய இறைவரை வஞ்சிக்க எவ்வாற்றானும் இயலாமை ஈண்டுச் சரித விளைவில் உடன் காணப்படும்; உண்மை யனுபவமும் அவ்வாறேயாம். உண்மை என்று பிழையாது! |
| வருந்த வேண்டாம் - நீரும் வீணே வருந்த வேண்டா என்று அவர்பால் கருணையாகக் காட்டிய பொய்யாகிய சீவகாருணிய வொழுக்கம்; வருத்த என்பது பாடமாயின் பிராணிகளை வருத்துதல் பாவம் என்று பொய் உபதேசநிலை மேற்கொண்டவாறாம். |
| 6 |
3598 | மாசு சேர்ந்த முடையுடலார் மாற்றங் கேட்டு மறுமாற்றந் தேசு பெருகுந் திருத்தொண்டர் செப்பு கின்றார் "திருவிலிகாள்! பூசு நீறு சாந்தமெனப் புனைந்த பிரானுக் கானபணி ஆசி லாநல் லறமாவ தறிய வருமோ வுமக்?" கென்றார். | |
| 7 |
| (இ-ள்.) மாசு....கேட்டு - அழுக்குப் படிந்த முடைநாற்றம் பொருந்திய உடலினையுடைய அமணர்கள் கூறிய மாற்றத்தினைக் கேட்டு; மறுமாற்றம்....செப்புகின்றார் - அதற்கு எதிர்மொழியாக ஒளிபெருகும் திருத்தொண்டர் சொல்கின்றாராகி; "திருவிலிகாள்!....உமக்கு" என்றார் - மெய்த்திரு வில்லாதவர்களே! பூசும் நீற்றினையே சாந்தம் என்று அணிந்த சிவபெருமானுக்கு ஆகிய திருப்பணிகள் எவையாயினும் அவையெல்லாம் குற்றமில்லையாகிய நல்ல அறமேயாவனவாம் என்ற உண்மை உமக்கு அறியவருமோ?" என்று சொன்னார். |
| (வி-ரை.) மாசு சேர்ந்த முடை உடலார் - கழுவாமையினால் அழுக்குப் பொதிந்த உடல் உடையவர்கள் அமணர்; உடல் கழுவும்போது அங்கங்கும் உள்ள புழுக்கள் முதலியவை சாகும் என்பது அவர்களது கொல்லாமை எனும் கொள்கையின் ஒழுக்க அளவு. முடை - முடைநாற்றம். |
| மாற்றம் - சொல்; உண்மையின் மாறுபாடு என்ற குறிப்புமாம். |
| மறுமாற்றம் - அமணர் சொல் மாற்றம் (மாறுபாடு) என்னில், அதற்குமறுதலை - (உண்மை) என்ற குறிப்பும் காண்க. |
| தேசுபெருகும் - தேசு - ஞான ஒளி. பெருகும் - இனி, இச்சரித நிகழ்ச்சியிலே கண் ஒளியும் பெற்று மிகும் நிலைக்குறிப்பு. "நட்டமிகு தண்டி" (தொகை) |
| திருவிலிகாள் - திரு - சிவனடிமைத்திறம்; சிவச்சார்பு. "உருவிலான் பெருமையை யுளங்கொ ளாதவத், திருவிலார் - தங்களைத் தெருட்டலாகுமே" (தேவா) என்ற திருவாக்கு ஈண்டுக் கருதத் தக்கது. |
| பூசுநீறு சாந்தமெனப் புனைந்த பிரானுக்கு - நீறு - சங்காரத்தையும், சாந்தமெனப் புனைதல் - மகிழ்ச்சிக் குறிப்பாகிய சிருட்டியினையும் குறிப்பாலுணர்த்தின; எனவே இவை இறைவர் தொழில்களாக, அவரது பணியிலே பிராணிகள் இறந்துபட நேரிட்டால் அது அவற்றுக்கு உய்தி தரும் தொழிலே யாதலின் அறமெனப் |