| |
| மணித் தோரணம் - மணிமாலைகளை இடையிடைத் தொங்க வைத்த தோரணங்கள். மணி - அழகு என்றலுமாம். |
| 57 | | 3212. (வி-ரை) மற்று அவரும் - அவ்வாறு எதிர்கொண்டு அழைக்கப்பட்ட அந்நம்பிகளும்; மற்று - வினைமாற்றில் வந்தது; அவர் - அகரம் முன்னறி சுட்டு; இறைஞ்சி - சென்று இறைஞ்சி; சென்று என்பது சொல்லெச்சம். |
| சேண் விசும்பின் கோயில் - திருவீழிமிழலை விமானம் விட்டுணுவினால் ஆகாயத்திலிருந்து கொணர்ந்து தாபிக்கப்பட்டதென்பது வரலாறு; அதனால் விண்ணிழி கோயில் எனப்படும். |
| பந்தம் அறுக்கும் - அடைந்தார்க்கு மலபந்தங்களை நீங்குகின்ற இறைவர். |
| பணிகின்றார் - முற்றெச்சம். பணிகின்றாராகி; பணிகின்றாராகிப் பரவிச் சாத்தி என மேல் வரும் பாட்டுடன் முடிக்க. |
| 58 |
| 3213. (வி-ரை) படம் - பாம்பின் படம்; அரவு - விட்டுணு பள்ளிகொள்ளும் ஆதிசேடன். |
| விடங்கன் - உளியினாற் செதுக்கப்படாத திருமேனியுடையவன்; (டங்கம் - உளி). |
| விண்ணோர் பெருமான்; விட்டுணுவினால் வழிபடப்பட்ட தன்மை பற்றித் தேவர்கள் தலைவர் என்ற குறிப்புமாம். |
| அடங்கல் வீழி.....அருளும் என - இது பதிகத்தின் மகுடமும் கருத்துமாம். பதிகம் (10) பார்க்க. |
| தடங்கொள் செஞ்சொல் - தடம் - பெருமை; பொருளின் பெருமை குறித்தது. "நற்றமிழ்" பதிகம் (10) பார்க்க. |
| 3214. (வி-ரை) வாசி...மிழலைவாணர் - திருஞானசம்பந்த நாயனாருக்கு வாசியுடன் படிக்காசும், அரசுகளுக்கு வாசியில்லாக் காசும் தந்தருளிய வரலாறு குறிக்கப்பட்டது. 2467-ம், "இருந்துநீர் தமிழோடிசை கேட்கு மிச்சையாற் காசு நித்த னல்கினீர்" (பதிகம்) என்றதும் காண்க. அதுபற்றி அவ்வவர் புராண வரலாறுகளும் பார்க்க. |
| தேசுமிக்க திருவருள் - சிவஞான வொளி மிகுதியின் கண்ணே அறியப்படும் அருள் வெளிப்பாடாகிய விடை. |
| பாசம் அறுத்து ஆட்கொள்ளும் தாள் - இப்பகுதியில் வந்து அடைந்தோர்களது பாசம் என்க; ஆட்கொள்ளும் - ஆளாகக் கொண்டு முத்தி நல்கும். பொது வகையானன்றித் தலவரலாறும் சிறப்புக் குறிப்பு. |
| பொருவனார் - பதிகத்தின் தொடக்கம்; முதற் குறிப்பு; பதிகம் பார்க்க. |
| மாசில் - குற்றத்தை இல்லையாகச் செய்யும் உபாயமறிவிக்கும் திறமுடைய; "அடியாரை ஊழ்வினை நலிய வொட்டாரே" என்பது முதலாக வரும் பதிகக் கருத்துப் பார்க்க. |
| அணைந்தார் - அணுகச் சென்று சார்ந்தனர் என்க; அங்குச் சேர்ந்து வழிபட்டது மேல்வரும் பாட்டிற் கூறப்படுதல் காண்க. |
| 60 |
| திருவீழிமிழலை |
| திருச்சிற்றம்பலம் | பண் - சீகாமரம் |
| நம்பி னார்க்கருள் செய்யு மந்தணர் நான்ம றைக்கிட மாய வேள்வியுட் செம்பொனேர் மடவா ரணிபெற்ற திருமிழலை | |