| |
| படும் என்றதாம். ஆதலின் சிவன் றிருப்பணியிற் கொலைபற்றி உயிர்க்கு இம்சை முதலிய குற்றங்கள் கூறுதற்கு இயைபில்லை என்றபடி. ஆன பணி - என்றது மிக்கருத்து. திருநந்தவனம் திருக்கோயில் முதலிய இறைவர் தலங்களுக்கு இடையூறாக உள்ள அரசமரம் முதலிய புண்ணிய மரங்களையும் வெட்டி அப்புறப் படுத்தலாம் என்ற விதி இக்கருத்துடையது. எறிபத்த நாயனார் - கோட்புலி நாயனார் முதலிய பெரியார் சரிதங்களின் நிகழ்ச்சிகளின் உள்ளுறையும் கருதுக; சீவகாருண்ணியம் என்றதன்பாற் பட்ட பசு தர்மங்களுக்கும் சிவன் பணிகளாகிய பதி தர்மங்களுக்கும் உள்ள வேறுபாடு ஈண்டு உணர்ந்து மனங்கொள்ளுதற்பாலது; இவை முன்னர் அரசுகள் புராணத்துள் "அறங்கள் செய்வாராய்" (1300), "காவளர்த்தும்" (1301) என்ற இடத்தும், பிறாண்டும் விளக்கப்பட்டன. இந்நுட்ப மறியாதார் உலகியலுள் வைத்துப் பலவாறு பிதற்றியொழிகுவர்; சிவனுக்காக உள்ள பதி புண்ணியப் பொருள்களைச் சீவர்களுக்கு ஆக்கிப், பசு புண்ணியங்களாகச் செய்தல் சிறந்ததென்று முழக்கம் செய்து உலகை மயக்கி யுழல்கின்றார்கள்; இது காலக் கொடுமை!; இங்குத் தீர்த்தக் குளத்தின் இடத்தின் குறைபாட்டினை நீக்க மக்கள் குடியிருந்த மனையிடங்களை அகழ்ந் தெறிந்தார் தண்டியடிகள்! இஃது இறைவர் றிருவுள்ளக் குறிப்பினை அணுகி அங்கீகாரமும் பெற்றது. ஆனால் இந்நாள் மாக்கள் கோயில் குளங்களைத் தூர்த்துக் குடியிருக்கும் இடமாக்க முற்படுகின்றனர். அந்தோ! கொடிது! கொடிது!! |
| ஆசிலா நல் அறமாவது - ஆசு இல்லாமையாவது - குற்றங்களைப் போக்குதல்; இல்லையாகச் செய்தல்; நன்மையாவது வீடுபேறாகிய நிலைத்த இன்பத்தைத் தருதல். அஃதாவது சிவனுக்கான பணிகளாகிய இவை பாச நீக்கமும் சிவப்பேறும் தந்து பரம்பரையில் வீடு பெறுவிப்பன; இதனால் ஏனை அறமெனப் பட்டன எல்லாம் அவ்வாறன்றித் துன்பம் தந்து பிறவிக் கேதுவாவன என்பதும் போதரும். |
| அறியவருமோ உமக்கு - நீரும், உம்மைப்போன்ற பிறரும் இந்நுட்பமாகிய உண்மைகளை உணரும் ஆற்றல் இல்லீர் என்பது. இதுவே இந்நாள் மாக்கள் தன்மையுமாயிற்று. |
| மாசுபடர்ந்த - என்பதும் பாடம். |
| 7 |
3599 | அந்த மில்லா வறிவுடையா ருரைப்பக் கேட்ட வறிவில்லார் சிந்தித் "திந்த வறங்கேளாய் செவியு மிழந்தா யோ?"வென்ன "மந்த வுணர்வும் விழிக்குருடுங் கேளாச் செவியு மற்றுமக்கே இந்த உலகத் துள்ளன"வென் றன்பர் பின்னு மியம்புவார், | |
| 8 |
3600 | "வில்லா லெயின்மூன் றெரிந்தபிரான் விரையார் கமலச் சேவடிகள் அல்லால் வேறு காணேன்யா:னதுநீ ரறிதற் கா?"ரென்பார், "நில்லா நிலையீ ருணர்வின்றி நுங்கண் குருடாயென்கணுல கெல்லாங்காண்பான் யான்கண்டாலென்செய்வீ"ரென்றெடுத்துரைத்தார். | |
| 9 |
| 3599. (இ-ள்.) அந்தம்....உரைப்ப - எல்லையில்லாத அறிவினையுடைய தண்டியடிகள் முன்கூறியபடி சொல்ல; கேட்ட....என்ன - கேட்ட அறிவில்லார்களாகிய அமணர்கள் எண்ணமிட்டு நாங்கள் கூறிய இந்த அறச்சொல்லினைக் கேளா தொழிந்தாய்; (கண் இழந்ததோடு) செவியும் இழந்தனையோ? என்று கூற; மந்த....என்று - மந்தமாகிய உணர்வும் விழியின் குருட்டுத் தன்மையும் கேளாத |