| |
| அன்பர் - அன்பு காரணமாகக் கூறியதன்றிச் சினம் முதலிய மாறுகோள் நிலையாற் கூறியதன்று என்பது குறிப்பு. |
| 8 |
| 3600. (வி-ரை.) வில்லார்....ஆர் என்பார் - எரித்தபிரான் என்று இத்தன்மையாற் கூறியது மாறுபட்டாரது மும்மதிலும் ஒரு நொடியில் அழித்தமை போல நுங்களையும் இன்னே அழிவுபடுத்த உள்ளவர் என்பது குறிக்கத்தது. |
| அல்லால் வேறு - காணேன் - எதிர்மறை உறுதி குறித்தது. |
| அது அறிதற்கு நீர் ஆர் - அதனை அறிதற்கு உமக்கு என்ன தகுதி; "அடியார்களில்யா னாரா வணைவாய்" (569); "என்மனங் குடிகொண் டிருப்பதற் கியானா ரென்னுடை யடிமைதான் யாதே" (திருவி); அது - அதனை; அடிமைத் திறத்தினை அறிதல் சிவன் அருளுடையார்க் கன்றி யியலா தென்பதாம். வேறு காணேன் - காண்பதாவது - “கழல் மனத்துக்கொண்ட கருத்தினை நோக்கும் குறிப்பு” (3592) என்ன மனக்கண் காட்சி. |
| “நில்லா நிலையீர்...என்செய்வீர்?” - இது தண்டியடிகள் அமணர்பாற் கூறிய சூளுரை. இந்தச் சூள் உரைத்தல் சிவன்றிருவடிகளே பதிந்த திண்ணிய பேரன்பின் உறைப்பினாலன்றி இயைவதன்று. நில்லா நிலை - தெளியாதொரு பொருளே பொய்யு மெய்யுமாம் என்னும் புரை நெறியாகிய அமண் சமயக் கொள்கை. "அத்தி நாத்தி" என்னும் அமணர்களது மந்திரப்பொருள். இவையெல்லாம் முன்னர் விரித்துரைக்கப்பட்டன. உணர்வின்றி - உங்களுக்கு உணர்வு இல்லாமற் போகவும்; கண் குருடாய் - உங்களது இப்போது ஒளியுள்ள கண்கள் ஒளியிழந்து குருடாகவும்; உலகெல்லாம் காண்பான் - உலகத்தார் முன்பு எல்லாரும் காணும்படி; "நாட்டாரறிய" (1898); இனி, நான் இதுவரை இறைவன் திருவடியினையே மனக்கண்ணாற் கண்டிருந்தேன்; அதனோடு அத்திருவடியினை உலகெல்லாப் பொருள்களிலும் புறக்கண்ணாலும் யான் காணும்படி என்றுரைத்தலுமாம். காண்பான் - காணும்பொருட்டு. |
| என் செய்வீர் என்று எடுத்துரைத்தார் - அவர்கள் ஏற்ற மறுமொழி சொல்லும்படி வினவி எடுத்துச் சொன்னார். |
| நிலையீர்க் குணர்வின்றி - என்பதும் பாடம். |
| 9 |
3601 | அருக ரதுகேட் "டுன்றெய்வத் தருளாற் கண்ணீ பெற்றாயேற் பெருகு மிவ்வூ ரினினாங்கள் பின்னை யிருக்கி லோ"மென்று கருகு முருட்டுக் கைகளாற் கொட்டை வாங்கிக் கருத்தின்வழித் தருகைக் கயிறுந் தறியுமுடன் பறித்தார் தங்க டலைபறித்தார். | |
| 10 |
| (இ-ள்.) அருகர் அதுகேட்டு - அமணர்கள் அதனைக் கேட்டு; "உன் தெய்வத்து....இருக்கிலோம்" என்று - "உனது தெய்வத்தின் அருளினாலே நீ கண் பெற்றாயானால் பெருகுகின்ற இந்தவூரில் நாங்கள் அதன் பின்னர் இருக்கமாட்டோம்" என்று சொல்லி; கருகு....உடன் பறித்தார் - கரிய முருடுகளையுடைய கைகளினாலே அடிகளது கொட்டினை வலிந்து பற்றிக் கருத்தின் வழியே நிலை தருகின்ற கயிற்றினையும் நடுதறியினையும் உடனே பறித்தார்கள்; தங்கள் தலை பறித்தார் - தங்கள் தலைமயிரைப் பறிக்கும் நோன்புடையார்கள். |
| (வி-ரை.) உன் தெய்வத்து....இருக்கிலோம் என்று - இஃது அடிகளுக்கு அமணர் கூறிய மறுமொழி; கோபமிகுதியாற் கூறியவாறு காண்க; திருவால |