518திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

கூடாதபடி தேவர்கள் செழிய குளிர்ந்த (மந்தார முதலிய) தெய்வ தருக்களின் மலர்மாரி பொழிந்தனர்; இழுதை....கண்டு - அறிவில்லாத அமணர்கள் விழித்திருந்தபடியே தமது கண்களை இழந்து தடுமாறுதலைக் கண்டு; பழுது....பகர்கின்றான் - தீமை செய்த அமண் சமயம் கெட்டது என்று முடித்து அரசன் சொல்வானாகி;

20

3612. (இ-ள்) தண்டியடிகள்....துரக்க என - தண்டியடிகளோடு ஒட்டித்தாமே கெட்ட சமணர்களாகிய கீழ்மக்கள், தேவர்கள் போற்றுகின்ற இத்திருவாரூரினின்றும் நீங்கிப் போய்க் கழியும்படிக் கண்டவிடத்தே அமணர்களை எங்கும் இனிக் காணாதபடி துரத்துக என்று சொல்ல; வயவர் மண்டிச் சாடுதலும் - வீரர்கள் நெருங்கிச் சாடியதனாலே; கண்கள் காணார் மனங்கலங்கி - கண்ணொளியிழந்தவர்களாகிய அவ்வமணர் மனங்கலங்கி.

21

3613. (இ-ள்.) வெளிப்படை. குழியில் விழுவார்களும், நிலைதளர்வார்களும், (தடவிச் செல்ல) ஊன்றுகோலும் இல்லையே என்று கூறுவார்களும், ஈதுவழி என்று எண்ணிச் சென்று புதர்களை அடைவார்களும், நாம் இறந்து போனோம் என்று சொல்வார்களும், மதிகெட்டவர்களே! அழியும் பொருளை நம்பிச் சபதம் செய்து இங்கு நாம் அழிந்தோம் என்பார்களும், ஈது அரசனுக்குப் பழியாகுமோ? (ஆகாது) என்பார்களும், (உடுத்த) பாய்களையும் இழப்பார்களுமாகி அந்தப் பறிதலையுடைய அமணர்கள்.

22

3614. (இ-ள்.) வெளிப்படை. (தாம் கையில் ஏந்தும்) மயிற்பீலிக் கற்றையினைக் காணாது பெயர்ந்து செல்வார்களும். (செல்லாது) நின்று மயங்குவார்களும், மிகவும் நெருக்கமாகச் சென்று எதிரெதிரே தம்மில் தாமே முட்டிக் கொள்வார்களும், மயங்கும் மனமும் உடைந்து வழிகள் அறியார்களாய் மயங்குவார்களும் (ஆயினர்);

23

3615. (இ-ள்.) அன்ன....கண்டு - அவ்வாறாகிய நிலையில் திருவாரூரில் உள்ள அமணர்களது கலக்கத்தினைக் கண்டு; அவர்....துரந்தற்பின் - அவர்கள் தங்களே ஒட்டிச் சபதங் கூறி யிசைந்தபடி அவர்களை ஊரில் இல்லாத வண்ணம் ஓடத்தொடர்ந்து துரத்தியபின்; பன்னும்....கரைபடுத்து - சொல்லிய அமணர்களது பாழிகளையும் பள்ளிகளையும் பறித்து இடித்துக் குளத்தினைக் சூழ்ந்த கரையினை உரியபடி அகலமாகச் செய்து; மன்னவனும்....பணிந்தான் - அரசனவனும் மனமிக மகிழ்ந்து வந்து தண்டியடிகளை அடிவணங்கினான்.

24

இவ்வைந்து பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
3611. (வி-ரை.) தொழுது - இறைவரருளைத்தொழுது கொண்டவாறே.
தூய மலர்க்கண் பெற்று - தூய - என்பது அவரது கண்களின் முன்னை நிலையினையும், மலர்க்கண் - என்றது அழகும் ஒளியும் பெற்ற பின்னிலையினையும் குறித்தன.
பொழுது - பொழுதினை - காலத்தினை - அறிவிக்கும் சூரியனைக் குறித்தது; ஆகுபெயர்.
இழுதை - அறிவில்லாதவர்களாகிய. "இழுதையர்க் கெளியே னலேன்" (பிள். தேவா).
விழித்தே கண் இழத்தல் - என்றது கண்கள் செவ்வே யிருப்பவே ஒளியிழத்தல்.