| |
| மானது திருநீற்றின் சார்பே உண்மைப் பொருளாவது என்று அறிந்தாராகி; அரனார்...நிலைமையார் - சிவபெருமானடியார்களுக்கு அமுது ஆக்கி அவர்கள் முன்னே அமுதுண்ணக் கண்டு அதன்பின் தாம் உண்ணும் நீதிமுறை தவறாத நியமத்தினை மேற்கொண்ட தன்மையினை உடையாராயினார். |
| (வி-ரை) கோதில் மரபு - வேளாளர் மரபு; மரபு - குலத்தின் உட்பிரிவு என்றலுமாம். |
| அறிவு கொண்ட நாள் தொடங்கி - அறிவு தொடங்கிய சிறுபருவ முதலே சிவ நெறியி லன்பு கொண்டார்; இது முன்னைத் தவத்தால் வருவதாம். "பிறந்துணர்வு தொடங்கியிபின்"(1052) என்றதும், "பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம்" (அற்.அந்.) என்றதும், பிளவும் பார்க்க. |
| திருநீற்றின் அடைவே பொருள் - திருநீற்று நெறியாகிய சார்வே மெய்ப்பொருளாவது. அடைவு - சார்பு. ஆதி முதல்வர் - ஆதியாகிய முதல்வர்; ஆதிசத்தியுடன் கூடிய முதல்வர் என்றலுமாம். |
| திருநீற்றின் அடைவே பொருள் என்றறிந்து அடியார்க் கமுது ஆக்கி அமுது செய்யக் கண்டுண்ணும் - நியதி - திருநீற்று நெறி நிற்பதில் ஒழுகும் சைவநெறி பல வற்றுள்ளும் இந்நாயனார் சிறந்ததென மேற்கொண்டு ஒழுகியது இந்நியமம் என்பது; அடியார்க்குத் திருஓடு கொடுத்தார், கீளும் கோவணமும் கொடுத்தார், வேண்டுவன கொடுத்தார் என் றித்தித்தினர் பலர்; அடியார் பணியே யன்றிச் சிவன்பணி மேற்கொண்டாரும் பலர்; அவருள்ளே அடியார்க்காக அமுத ஆக்கி அடியாரை முன் ஊட்டிப் பின் உண்ணும் நியதியினை இந்நாயனார் மேற்கொண்டொழுகினர் என்க; இவர் சங்கமத்தால் முத்தியடைந்தவர் என்று வகுக்கப்பட்டனர். |
| காதலடியார் - தாம் காதல் பூண்டு ஒழுகிய அடியார்; சிவன்பாற் காதல் பூண்ட அடியார் என்றலுமாம். |
| அடியார்க்கு அமுதாக்கி - அடியார்களுக்கென்று திருவமுது வேறே ஆக்குவித்து; ஆக்கி - ஆக்குவித்து எனப் பிறவினை. |
| கண்டு உண்ணும் - அவர்கள் அமுது செய்தலைத் தான் கண்டு பின் உண்ணும்; கண்டு - ஊட்டுவித்து மகிழ்ந்து. நியதி - இடையறாத கடமையாக. |
| முதலாந் திரூநீற்றின் அடைவே என்பதும் பாடமாயின் எவற்றிற்கு முதலாகிய பூதிசாதன வழியே என்க. |
| 3 |
3621 | தூய வடிசி னெய்கன்னல் சுவையின் கறிக ளவையமைத்து மேய வடியார் தமைப்போற்றி விருப்பா லமுது செய்வித்தே ஆய பொருளு மவர்வேண்டும் படியா லுதவி யன்புமிக ஏறு மாறு நாடோறு மினைய பணிசெய் தின்புற்றார். | |
| 4 |
| (இ-ள்) தூய.......அமைத்து - தூய்மையுடைய அன்னமும், நெய் - வெல்லம் - சுவையுடைய இனிய கறிகள் என்ற இவைகளும் நன்கு அமையச் செய்து; மேய....செய்வித்தே - வந்து பொருந்திய அடியார்களை உபசரித்து முகமன் கூறி விருப்புடனே அமுது செய்வித்தே; ஆய...உதவி - ஆகிய ஏனைப் பொருள்களையும் அவ்வடியவர்கள் வேண்டியவாறே உதவி; அன்புமிக.... இன்புற்றார் - அன்பு மிகவும் பொருந்தும்படி நாள்தோறும் இத்தகைய பணியினைச் செய்து இன்பமடைந்தார். |