| |
| பணிந்தேத்தி - அரிசிற் கரைப்புத்தூரைச்சார அணைந்த நம்பிகள் இடையில்
இப்பதியினைப் பணிந்து பாடியருளினார். |
|
விழுநீர்மை - "தாழ்வெனுந் தன்மை யோடு சைவமாஞ் சமயஞ் சாரும், ஊழ்
பெறலரிது" (சித்தி) என்று இதன் அருமைப் பாட்டினை ஞான சாத்திரம் விரித்துக்
கூறிற்று. "வெற்றவே யடியா ரடிமிசை வீழும் விருப்பினன்" (பிள். தேவா. ஆலவாய்)
என்ற திருவாக்கும் இத்தன்மையினைப் பேசியது. பெருந்தொண்டர் என்ற
குறிப்புமிது. |
|
மழுவோடு...உடையார் - மானும் மழுவும் இரு கையிலும் ஏந்தியவர்;
சிவபெருமான். தொழுநீர்மை - தொழுதற்கு விதித்த முறை. |
|
மழுநீடிளமான் மறிகரத்தில் - என்பதும் பாடம். |
|
61 |
|
திருநறையூர்ச் சித்தீச்சரம் |
|
திருச்சிற்றம்பலம் |
பண் - குறிஞ்சி - 7-ம் திருமுறை |
|
நீரும் மலரு நிலவுஞ் சடைமேல், ஊரும் மரவு
முடையா னிடமாம் வாரும் மருவி
மணிபொன் கொழித்துச், சேருந் நறையூர்ச் சித்தீச்
சரமே. | |
|
(1) |
|
போரார் புரமெய் புனித னமரும், சீரார் நறையூர்ச்
சித்தீச் சரத்தை, ஆரூ ரன்சொல்
லிவைவல் லவர்கள், ஏரா ரிமையோ ருலசெய் துவரே. | |
|
(11) |
|
திருச்சிற்றம்பலம் |
|
பதிகக் குறிப்பு : - சித்தீச்சரம் இறைவரது இடமாம். |
|
பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) நீரும்
என்றெழுந்த குறிப்பினால் ஆசிரியர் "செழுநீர்
நறையூர்" என்று நீர்ச் சிறப்புப்பற்றி
இப்பதியினைக் குறிப்பிட்டார். பதிகத்தினுள் மற்றும்
பார்க்க. "நீருலாவு" என்ற பிள்ளையார் பதிகமும்
பார்க்க. அருவி - காவிரி;-(2) அளைப்பை
- நஞ்சுப்பை; இவை பம்பின் வாயினுள் பற்களின்
மேற்பகுதியில் உள்ளன; துளைக்கை -
துளையையுடைய கை; துதிக்கை;-(3) இகழுந்தகையோர்
- பகைவர்; முகமே - திகழ் - முகம் போல
விளங்கும்;-(4) வரைத்தோள் வரையால் இறக்கொள்
- மலையினை மலையால் அழித்த என்பது கவிநயம்.
இறக்கொள் இறச் செய்தலும் பின்னர் என்று
கொள்ளலும்; "மிதிகொள் சேவடி" (அரசுகள். கோயில்);
(6) ஆன்ஆர் அடல்ஏறு - இடபம்; அமர்தல்
- விரும்புதல்;-(8) புரியும் மறையோர் - புரிதல்
- இடைவிடாது சொல்லுதல்;-(9) முனிவன் -
தக்கன்; மாணாமை - சிறவாமை; அழித்தான்
என்பதனை மாணாமை செய்தான் என்றது மங்கல வழக்கு;
பாண் - பாணர் மரபு; சேணார் -
நெடுந்தூரமும் கேட்க ஒலிக்கும்;-(10) குறியில்
வழுவா - வைத்த குறிதவறாத; நெறியில்....வழுவா
நியமத்தவர்கள் - அந்தணர்கள்; 8-வது பாட்டுப்
பார்க்க. சித்தர்கள் என்றலுமாம். இப்பதியின் பெயர்
சித்தர்கள் பூசித்தமையாற் போந்த தென்பர். சுவாமி
பெயரும் பார்க்க.-(11) போரார் - பகைவர்கள். |
|
தலவிசேடம் : - திருநறையூர்ச் சித்தீச்சரம் -
முன் (IV - 491) உரைக்கப்பட்டது. சுவாமி -
சித்தநாதர்; அம்மை - அழகம்மை; தீர்த்தம்
- பிரம தீர்த்தம்; பதிகம் 4. |
|
கும்பகோணத்தினின்றும் தெற்கே நீடாமங்கலம் கற்சாலை
வழி 2 நாழிகையில் உள்ள சாக்கோட்டையினின்றும்
தென்கிழக்கை 4 1/2 நாழிகையளவில் உள்ள
திருஅரிசிற்கரைப்புத்தூரினின்றும் தென்கிழக்கே 2
நாழிகையளவில் உள்ளது. |