| |
| ஆக்குவோர் கைக்கொள்ளச் செய்து; அவர் கைக்கொள்ளுதல் அமுதாக்குதற்குரிய பண்டங்கள் பெறுதற் பொருட்டு. |
| ஏதமிலா வகை கடைப்பந்தி தாமும் அமுது செய்து என்க. ஏதமாவது - சூதின் வந்த பொருளினால் உண்டு உயிர் வாழ்தல்; கடைப்பந்தி - அடியார்கள் எல்லாம் அமுது செய்தபின் இறுதியில் உண்போர் வரிசை; இதனால் ஏதல் இல்லா வகையாவது அடியார் உண்ட சேடம் உண்பதனாலும், அவர்க்கு அமுது ஆக்கும் பணி செய்யத் தாம் உளராதற் பொருட்டு உண்பதனாலும் கடைப்பந்தி அமுது செய்தலால் ஏதம் இல்லையாகும். |
| அங்கு இருக்கும் நாள் - உலகை விட்டபின் - புரம் புக்கார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. அங்கு - திருக்குடந்தைப் பதியிலே; எனவே இந்நாயனார் தொண்டை நாட்டில் திருவேற்காட்டூரில் அவதரித்துச் சோழநாட்டிலே திருக்குடைந்தையில் இறைவன் திருவடி சேர்ந்தருளினர் என்க. |
| 10 |
| 3628. ( வி - ரை) நல் அடிசில் - முன் (3621) கூறியவை. |
| ஆதரவு - மிக்க அன்பு. |
| அருளாலே ஏதங்கள் போயகல - சிவனருள் வழிநின்று தாமற்ற தன்மையாலே சூதினால் வரும் தீமைகள் தாக்காதொழிய, உடலுடன் வந்த ஏதங்கள் என்றலுமாம். |
| அருளாலே - தனக்கென்று செயல் ஒன்று மில்லாது ஏகனாதி இறைபணி நிற்கும் அடியவர் செய்கைகளைத் தம் செயலே யாக்கி, அச்செயல்களால் வரும் துரிசுகளை அவர்பாற்சாராமற் செய்வது இறைவர் அருளாம். பாதகங்கள் செய்திடினும்.....நெறியல்லா நெறி பயிற்றிவரினும் - தவறுகள் வந்திடினும், தனக்கெனவோர் செயலற்றுத் தானதுவாய் நிற்கில், நாதனவ னுடலுயிரா யுண்டுறங்கி நடந்து நானாபோகங்களையுந் தானாகச் செய்து, பேதமற நின்றிவனைத் தானாக்கி விடுவன்"(உண்மை நெறி விளக்கம்-6) என்பது முதலிய சிவாகமத் திருவாக்குக்கள் காண்க. |
| பூதங்கள் - இசைபாட ஆடுவார் - இறைவன் றிருக்கூத்துக் கிசையச் சிவபூதங்கள் பாடியும் முழக்கியும் ஆடியும் பயில்வன என்பது; புரம் - சிவபுரம். |
| இவ்வுலகை விட்டதற்பின் - புரம்புக்கார் - இவ்வுலக வாழ்வு நீத்தவுடன் வேறு பிறவியிற் சேராது சிவனுலக வாழ்விற் றலைப்பட்டு நின்றார் என்பது. |
| 11 |
3629 | வல்லார்க டமைவென்று சூதினால் வந்தபொருள் அல்லாருங் கறைக்கண்ட ரடியவர்க டமக்காக்கும் நல்லார்நற் சூதரா மூர்க்கர்கழனாம் வணங்கிக் சொல்லார்சீர்ச் சோமாசி மாறர்திறஞ் சொல்லுவாம். | |
| 12 |
| (இ-ள்) வல்லார்கள்...நல்லார் - சூதாடுபவர்களை வெற்றிகொண்டு சூதினால் வந்த பொருள்களை யெல்லாம் கருமை பொருந்திய விடமுடைய கண்டராகிய சிவபெருமானது அடியவர்களுக்கே திருவமுதுக்கு ஆக்குகின்ற நல்லாராதலின்; நற்சூதராம்......வணங்கி - நற்சூதர் எனப்பெறும் மூர்க்கரது திருவடிகளை நாம் வணங்கி; சொல்லார்.. சொல்லுவாம்-நிறைந்த சொற்களாற் புகழும் வேத வாய்மைச் சிறப்பினையுடைய சோமாசிமாற நாயனாரது திறத்தினைச் சொல்லப் புகுகின்றோம். |
| (வி-ரை) இது கவிக் கூற்று. ஆசிரியர் தமது மரபின்படி இதுவரை கூறிவந்த புராணத்தை வடித்தெடுத்து முடித்துக்காட்டி, இனிக் கூறப்புகும் புராணத்திற்குத் தோற்றுவாய் செய்தருளுகின்றார். |