|
  |  |  | 
  |  | வழங்கும் பலவற்றுள் ஒன்றாகிய அளவிற் கொள்ளத் தக்கதாகும். - ஊரும் பண்பும் பேரும் தொகைநூல்   உணர்த்திற்று. மாறனுக்கும் - முன் அடிமைப்பட்ட பெரியோர்களுடன் இவருக்கும் என்று உம்மை   எச்சவும்மை; எண் உம்மையுமாம். | 
    |  | வகை:- சூதப்பொழில்.....என்பான் - மாமரங்கள் மிக்க சோலைகள் சூழும் திருவம்பர்ப்     பதியில் வாழும் மறையவர், சோமாசி மாறன் என்று சொல்லப் படுபவர்; வேதப்பொருள்....     மொழியான் - அவர் வேதங்களின் உட்பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்தினை இடையறாது     சொல்லுவதன்றி வேறு மொழி பயிலாத (நித்த நியமன்); நீதி.......நியமன் - சிவன்பாற்     பொருந்திய நியதியில் வரும் நித்த நியமம் பூண்டவர்; பரவையென்னும்....துணையே - பரவையார்     என்று சொல்லப்படுகின்ற அம்மையாரின் கணவராகிய வன்றொண்டருக்கு மகிழ்ச்சி பொருந்திய     துணைவராவார். | 
    |  | சூதப்பொழில் அம்பர் - நகர்வளம்; சூதம் - மா; இந்நாட்டு இப்பக்கம்     மாஞ்சோலைகளின் வளங் குறித்தது; இஃது இந்நாளினும் காணத்தக்கது; விரிநூலா சிரியரும்     இதனையே எடுத்துப் போற்றியது காண்க (3630); அந்தணன் - குலம் பற்றியது; "மறையாளர்     குலம் (3630); என்பான் - எனப்படுவான்; "இல்வாழ்வானென்பான்" (குறள்) என்புழிப்போலக்     கொள்க. வேதப்பொருள் அஞ்செழுத்து - வேதங்களின் பொருள் திருவைந்தெழுத்தே என்பது    விளம்பி யல்லான் மொழியான் - விளம்புதல் - பலமுறையும் பயின்று கொண்டிருத்தல்;    அல்லால் மொழியான் - வேறு சொல்லாதாவர். எதிர்மறை உறுதி குறித்தது; இதனையே     ஆசிரியர் முன் "சொல்லார் சீர்ச் சோமாசி மாறர்" (3629) என்று காட்டித் தோற்றுவாய்     செய்தருளினர்; பரமன் மன்னும் - பரமன்பாற் பொருந்தும்; மன்னுதல் - பிறழாது     நிலை பெறுதல்; ஏழனுருபு தொக்கது; நீதி - நியமன் - என்று கூட்டுக; நீதிப்பரன்     என்றே கொண்டுரைத்தலுமாம்; "நீதி பலவுந் தன்னதுரு வாமென மிகுத்ததவ நீதியொடு தானமர்விடம்"(தேவா     - வைகா - சாதாரி - 4); பரன் மன்னும் நித்த நியமமாவது சிவாகம விதிப்படி     இடையறாத சிவவழிபாடு; "வாழுந் திறமீசர் மலர்க்கழல் வாழ்த்தல் என்பார்" (3631) என்றும்,     "அஞ்செழுத் தோதும் வாய்மை, நித்தந் நியமம் எனப்போற்றும் நெறியில் நின்றார்" என்றும்     (3632) ஆசிரியர் இதனை விரித்தருளினர்; காந்தன் வன்றொன்டன் - காந்தனாகிய     வன்றொண்டர்; பண்புத் தொகை; காந்தன் - கணவர்; நாயகர்; மகிழ்துணை -     "அன்பால் சாரும் பெருநண்பு சிறப்ப அடைந்து" என்பது விரிநூல் (3633); துணை -துணைவர். | 
    |  | ஊரும் பேரும் பண்பும் அடிமைத் திறமும் வகைநூல் வகுத்துக் காட்டிற்று இவை விரிந்தபடி     விரிநூலுட் கண்டுகொண்டு கொள்க. | 
    |  | (இ-ள்) சூதம்...அம்பரில் - மாமரங்கள் மிக்கு விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவம்பர்     நகரின் கண்ணே; தூய வாய்மை....மேலோர் - தூய்மை செய்யும் வாய்மையுடைய வேதங்களைப் பயிலும்     மறையவர்களது குலத்தில் மிக மேம்பட்டு விளங்குபவர்; ஏதம்....வந்தால் - உலகுக்குக் கேடுசெய்த     மும்மதில்களையும் எரித்த இறைவருக்கு அன்பர்கள் வந்தால்; பாதம்....மிக்கார்-அவர்களது     திருவடிகளிற் பணிந்து திரு அமுதூட்டுகின்ற நல்ல பண்பில் மிகுந்தவர்,. | 
    |  | (வி-ரை) சூதம் பயிலும் பொழில் - "சூதப்பொழி லம்பரில்" என்ற வகை நூலின் (திருவந்தாதி)     சொல்லும் பொருளும் விரித்துப் போற்றப்பட்டது; பயிலுதல் - மிகுதல்; சூதம்     - மா. |