542திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

தூய வாய்மை வேதம் பயிலும் மறையாளர் - மறையாளர் என்றலே அமையுமாயினும் இவ்வாறு கூறியது பிறப்பினளவா னன்றி வேதப்பயிற்சி ஒழுக்கத் தானும் மிக்கவர் என்று குறிப்பதற்கு.
ஏதம் புரியும் எயில் செற்றவர் - ஏதம் - உலகுக்குக் கேடு; ஏதம் புரிந்தமையால் அந்த ஏயில்களைச் செற்றவர் எனக் காரணக் குறிப்புடன் நின்றது.
ஆர் அமுது - ஆர்தல் - தூய்மை - சுவை - பண்பு முதலியவற்றாலும், அன்பினாலும் நிறைவுடையதாதல்; இத்தன்மைகள் இளையான்குடி மாறர் - மூர்க்கர் - புராணங்களுள்ளும், பிறாண்டும் காண்க.
நற்பண்பு - நன்மையாவது சிவசம்பந்தமாக நின்று வீடுபேற்றுக்குத் துணை செய்யும் தன்மை.
எயில் எய்தவர்க்கு - என்பதும் பாடம்.

1

3631
யாழின் மொழியா டனிப்பாகரைப் போற்றும் யாகம்
ஊழின் முறைமை வழுவா துலகங்க ளான
ஏழு முவப்பப் புரிந்தின் புறச்செய்த பேற்றால்
"வாழுந் திறமீசர் மலர்க்கழல் வாழ்த்த" லென்பார்

2

3632
"எத்தன்மைய ராயினு மீசனுக் கன்பர் என்றால்
அத்தன்மைய ராநமை யாள்பவ" ரென்று கொள்வார்
"சித்தந்தெளி யச்சிவ னஞ்செழுத் தோதும் வாய்மை
நிந்தத் நியம"மெனப்போற்று நெறியி னின்றார்.

3

3631. (இ-ள்) யாழின்...பேற்றால் - யாழ்போன்ற இனிய மொழியினை உடைய உமையம்மையாரது ஒரு தனிப்பாகராகிய சிவபெருமானைப் போற்றும் சிவயாகத்தினை வழிபடும் விதிமுறை தவறாது, ஏழுலகங்களும் மகிழ்ந்தின்புறும் படி செய்த பேற்றினாலே; வாழும் என்பார்- உயிர்கள் நல்வாழ்வடையும் வழியாவது சிவனது மலரடிகளை வாழ்த்துதலேயாம் என்று துணிவாராகி,

2

3632. (இ-ள்) எத்தன்மையராயினும்....என்றால் - குலம், முதலியவற்றால் என்ன தன்மையுடையோர்களே யானாலும் சிவபெருமானுக்கு அன்பர்கள் என்னப்பட்டார்களானால்; அத்தன்மையராம்...கொள்வார் - அவரே நம்மையாளாகவுடையவர்கள் என்ற துணிபும் கொள்வாராய்; சித்தம்....நின்றார் - சித்தம் தெளிவு பெறும் பொருட்டுச் சிவனது திருவைந் தெழுத்தினையும் விதிப்படி ஓதுகின்ற வாய்மையினையே நித்தமும் தமது நியமமெனக் கொண்டு போற்றுகின்ற ஒழுக்கத்தின் நின்றார்.

3

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
3631. (வி-ரை) யாழ் இன் மொழியாள் - இனிய இசைபோன்ற மொழியினை உடைய உமாதேவியார்; உவம உருபு தொக்கது; "யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன்" (நம்பி - தேவா).
பாகரைப் போற்றும் யாகம் - சிவனையேநோக்கிச் செய்யும் சிவயாகம்; இந்திரன் - பிரமன் - மால் முதலிய ஏனைக் கடவுளரை நோக்கிச் செய்யும் வேறு காமிய யாகங்களின்றும் பிரித்துணர வைத்தலின் பாகரைப் போற்றும் யாகம் என்றது பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; ஏனை யாகங்கள் சொர்க்காதி போகங்