[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 33. சோமாசிமாற நாயனார் புராணமும் உரையும்543

களைத் தந்து நாளெல்லையில் பிறவியில் வீழ்ப்பன, சிவயாகங்கள் அவ்வாறன்றி, மீளா நெறியாகிய வீடுபேற்றுக்கு ஏதுவாவன; "ஆதி மாமறை விதியினா லாறு சூழ் வேணி, நாத னாரைமுன் னாகவே புரியநல் வேள்வி, தீது நீங்கநீர் செய்யவும்," (2327) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. சிவபாதவிருதயர் இதனைச் செய்ததுவும் அதன் பொருட்டு ஆளுடைய பிள்ளையார் சிவன்பால் வேண்டிப் பொருள் பெற்று ஈந்ததுவும், பிறவும் இதன் சிறப்புணர்த்துவன.
ஊழின் முறைமை - விதி முறைகள்.
உலகங்களான ஏழும் உவப்பப் புரிந்தின்புறச் செய்த - இந்தச் சிவயாகங்களால் அருள்கலி நீங்கி உலகம் இன்புற்று ஓங்கும் என்பது; "கற்றாங் கெரியோம் பிக்கலியை வாராமே, செற்றார்" (தேவா) என்பது முதலியவை காண்க.
செய்த பேற்றால்....வாழ்த்தல் என்பார் - சிவயாகங்கள் செய்யப் பேறு பெற்றமையால் இத்துணிபு வரப்பெற்றனர். இத்துணிபு வருதற்கு முன்னைத் தவம் வேண்டுமென்பது.
கழல் வாழ்த்தல் வாழுந்திறம் என்பதாம்; வாழும் திறம் - வாழ்வு பெறுதற்குரிய சாதனம்; "பரன் மன்னும்" என்ற வகை நூலினை விரித்தவாறு.
என்பார் - கொள்வார் - நின்றார் - என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க; என்பாரும் - கொள்வாரும் ஆகி - நெறிநின்றார் - என எண் உம்மைகளும் ஆக்கச் சொல்லும் வருவிக்க.
சோமாசி மாற நாயனார் இத்தலத்துச் செய்த யாகத்தினைப் பற்றி வழங்கும் தலமான்மியச் சிறப்பு வரலாறு இத்தன்மை பற்றி இதுனுள் வைத்து முரணாதவாறு அடக்கிக்கொள்ளத் தக்கது; வகை நூலுள்ளும் இவ்வரலாறுபற்றிக் குறிக்கப்படாமையால் ஆசிரியரும் கூறிற்றிலர் என்க.

2

3632. (வி-ரை) எத்தன்மையராயினும் - குலம் - நலம் - பண்பு முதலியவற்றால் கீழோராயினும் என்பது குறிப்பு. உம்மை இழிவு சிறப்பு; "நலமில ராக நலம துண்டாக நாடவர் நாடறி கின்ற, குலமில ராகக் குலமதுண்டாக" (தேவா);
என்றால் - என்று சொல்லப்பட நின்றாராயின்; காணப்பட்டாராயின்.
அத்தன்மையர் - ஈசனன்பர் என்ற அத்தன்மையுடையோர்; அகரம் முன்னறி சுட்டு.
ஆள்பவர் - தலைவர்; நாளயானர் என்ற கருத்து.
கொள்வார் - துணிவு கொள்வாராகி.
நித்தம்......நியமம் எனப் போற்றும் நெறி - "அஞ்செழுத்தும் விளம்பியல்லான் மொழியான் - நித்த நியமன்" என்ற வகைநூலின் கருத்தை விரித்தவாறு. திருவைந்தெழுத்தை ஓதும் நித்த நியமமானது சித்தந் தெளிவிக்கும் சிறந்த சாதனமா மென்பது" விதி யெண்ணு மஞ்செழுத்தே" என்ற ஞானசாத்திரத்தானு முணர்க. அஃதாமாறு அனுபவமுடைய தேசிகர்வாய்க் கேட்டுணர்க. சிவன் அஞ்செழுத்தினால் இறைவர் சித்தந் தெளிவிக்கு நிலைபற்றி "வைத்த நிதி பெண்டீர் மக்கள் குலங் கல்வியென்னும், பித்த வுலகிற் பிறப்போ டிறப்பென்னும், சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த, வித்தகத் தேவர்" (திருவா - கோத் - 6) என்பது முதலிய திருவாக்குக்கள் காண்க. தெளிதலாவது காமாதி குற்றங்களினீங்கிச்,சிவனே பொருளென்ற துணிவு பெறுதல்.
சிவன் அஞ்செழுத்து - "அஞ்செழுத்தி னாமத்தான்", "திருநாம மஞ்செழுத்து" என்றபடி சிவன் திருநாமமாவது.