| |
| யிற்சேர்ந்து உய்யும் விளக்கம் இதுவே என்று துணிந்து; வன்றொண்டர்....வாய்ப்ப - வன்றொண்டரது. திருவடிகளைத் தொழுது அதனாற் பெற்ற சிறப்பு வாய்க்கப் பெற்றமையாலே; என்றும்....உற்றார் - என்றும் அழியாத நித்தியமாகிய சிவலோகத்தில் வாழும் இன்பத்தினைப் பெற்றனர். |
| (வி-ரை) துன்றுதல் - செறிந்து அடர்த்தல். |
| புலன் ஐந்தினையும் வென்று - புலனை வெல்லுதலாவது அவற்றின் வழியே தாம் செல்லாது அவை தம்வழியில் நிற்கும்படி அடக்கி ஆளுதல்."தன்மையைந்து புலனும்பின் செல்லுந் தகையார்" (1207); "மாறி நின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்து" (திருவா). அடக்குதல் செயல் செய்ய ஆற்றலிலா தொடுக்குதலன்று; "ஐந்து மடக்கில் அசேதன மாமென்றிட், டைந்து மடக்காவறிவறிந் தேனே" (திருமந்) "கண்காள் காண்மின்களோ" "செவிகாள் கேண்மின்களோ" என்பன வாதியாக வரும் ஆணையின்படி ஐம்புலங்களும் பணிகேட்டு ஒழுகிநிற்கப் பணித்தலே ஈண்டு வெற்றி எனப்பட்டது. இவ்வாறு வெற்றி கொள்ளாவிடில், முன் கூறியபடி அன்பர் வந்தாற் பாதம்பணிந் தாரமு தூட்டு நற்பண்பும், வாழுந் திறமீசர் மலர்க்கழல் வாழ்த்தல் என்னும் துணிபும், சித்தந் தெளியச் சிவனஞ் செழுத்தோதும் நித்த நியமமும், வன்றொண்டர் பாதம் பற்று நிலையும் கைகூடா என்க. |
| ஆறு தொகுத்த குற்றம் - ஆறு என்று தொகுக்கப்பட்ட குற்றங்கள்; தொகுத்த - தொகுக்கப்பட்ட; படு விகுதி தொக்கது; இவை காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் என்பன; இவற்றை வெல்லுதலாவது தம்பால் அணுகாமற் காத்தல்," பொய்கடிந் தறத்தின் வாழ்வார்" (361); "களவுபொய் காமங் கோப முதலிய குற்றம் காய்ந்தார்" (1784). "அறுபகைசெற் றைம்புலனு மடக்கி" (பிள். தேவா). |
| இது ...விளக்கம் - இது. இதுவே; வேறில்லை; என்று பிரிநிலை ஏகாரம் தொக்கது; நெறிசேரும் விளக்கம் - இருளில் வழிச்செல்வாருக்குக் குழியும் வழியும் காட்டி உதவும் விளக்குப்போல, இருளுருவமாகிய ஆணவம், புலனின்பங்கள், காம முதலிய குற்றங்கள், முதலாகிய கேடுகள் நிறைந்த உலக யாத்திரையில் வழி காட்டி, நல்ல வழியிலே படுத்தும் உதவி வன்றொண்டார் பாதம் பணிவது என்பதாம்; சேரும் - சேரவுதவும்; சேர்விக்கும்; சேரச் செலுத்தும்; பிறவினை. |
| வன்றொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு - தொழுது ஆன - தொழுதலால் விளைவான; தொழுது - தொழுதலால் எனக் காரணக் குறிப்புப்பட நின்ற வினையெச்சம். ஆன - ஆக்கம் விளைந்த என்ற பொருள் தந்தது; இதுவே ஆன - நலமான சிறப்பு; ஏனையவை அல்லாதன என்ற குறிப்புமாம்."திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன், வாச மலர்மென் கழல்வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்" [1265]; இக்கருத்தினையே தொடர்ந்து இவ்வாறே நாமும் ஒழுகி உய்தி பெறுவோம் என்று மேல்வரும் பாட்டில் "ஒருவர் சரணமே யரணமாக வடைந்தோமே" (3635) என்று ஆசியர் முடித்துக் காட்டி யருளியது காண்க. |
| என்றும் நிலவும் இன்பம் - மீளாத இன்பநிலை என்று கூட்டி யுரைக்கவும் நின்றது; என்றும் நிலவும் சிவலோகம் - அழிவில்லாத உலகம்; ஏனைக்கடவுளர் உலகங்களெல்லாம் அவ்வவ் வூழிகளில் அழிவு பெறும் என்பது; "நொடித் தான்மலை". |
| இனி, இப்புராணத்தினுள் "வேதம் பயிலும் மறையாளர் குலத்தின்" மேன்மையால் அன்பர் பணியும், (3630), யாகம் புரிந்தமையால் பரணுணர்வான |