[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்57

3216. (வி-ரை) புகழ்த்துணையார்க்கருளும் திறமும் போற்றிசைத்து - பதிகம் 6-வது பாட்டுப் பார்க்க. "அகத்தடிமை செய்யுமந்தணன்" என்று புகழ்த்துணையாரைச் சிறப்பித்து அவருக்கு நித்தமும் காசு அருளிய சரிதம் போற்றப்பட்டது காண்க.
முனிவர் போற்ற - அந்தணர்கள்; சிவ வேதியர்கள்.
பதிகள் பலவும் - அரிசிற்கரைப் புத்தூரினின்றும் திருவாவடுதுறையிற் சேரும் இடையில் அனேகம் பதிகள் உள்ளன; இவை திருச்சிவபுரம். திருநாகேச்சரம், திருவிடைமருதூர், தென் குரங்காடுதுறை முதலாயின என்பது கருதப்படும்.
இனிய நினைவு - மனமகிழ்ச்சி; நினைதொறும் இனிப்ப வருவது இறைவரது நினைவு; "நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தொறு மெம்போதும், அனைத்தெலும் புண்ணெக வானந்தத் தேன்சொரியுங் குனிப்புடையான்" (திருவா).
எய்தினார் - வினைமுற்று முன் வந்தது விரைவுக் குறிப்பு.
மூரிவெள்ளம் - பெருவெள்ளம்; அடங்காத நீர்ப் பெருக்கு.
கங்கையினில் திங்கள் அணிதல் - ஒரு சேர அணிதல்; "வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை, யிளந்திங்களும் மிருக்குஞ் சென்னி" (அம்மை - இரட்டை மணிமாலை1) "அப்புனலிற், சரிகின்ற திங்களோர் தோணியொக்கின்றது" (பொன்வண். அந்தாதி - 67)

62

திரு அரிசிற்கரைப் புத்தூர்

திருச்சிற்றம்பலம்

பண் - இந்தளம் - 7-ம் திருமுறை

மலைக்குமக ளஞ்ச மதக ரியை யுரித்தீ ரெரித்தீர் வருமுப் புரங்கள்
சிலைக்குங்கொலைச் சேவுகந் தேற்றொழியீர் சில்பலிக்
கில்கடோறுஞ் செலவொழியீர்
கலைக்கொம்புங் கரிமருப் பும்மிடறிக் கலவம் மயிற் பீலியுங் காரகிலும்
அலைக்கும் புனல்சே ரரிசிற் றென்கரை யழகார் திருப்புத்தூ ரழகனீரே.

(1)

அகத்தடிமை செய்யு மந்தணன்றா னரிசிற் புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையு நும்முடி மேல்விழுத்திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்கு நித்தற் படியும் வருமென் றொருகாசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்து கந்தீர் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.

(6)

காரூர் மழைபெய்து பொழியருவிக் கழையோ டகிலுந்திட் டிருகரையும்
போரூர் புனல்சே ரரிசிற் றென்கரைப் பொழிலார் திருப்புத்தூ்ப் புனிதர்தம்மை
யாரூர னருந்தமி ழைந்தினோடைந் தழகா லுரைப்பார்களுங் கேட்பவருஞ்
சீரூர்தரு தேவர் கணங்களொடு மிணங்கிச் சிவலோகம தெய்துவரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிக்க குறிப்பு ; - தோழமை முறையில் இறைவரது அருட் செயல்களை வியந்து பாராட்டியது.
பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) சிலைத்தல் - பேரொலி செய்தல்;-(2) திருமால் கண்ணிடந்து பூசித்து ஆழிபெற்ற வரலாறு போற்றப்பட்டது;-(3) தரிக்குந்தரை - தரையின்றொழில் விரித்துரைத்தது; "மண்டானு முரந்தருங் கடினமாகித் தரித்திடு முணர்ந்து கொள்ளே" (சித்தி. சூ. 2-66); "மண்கடின மாய்த்தரிக்கும்" (உண்மைவிள - 9); சவிதா - சூரியன்; திரைக்கைகளால் வாரிமோதி - அலையாகிய கை; உருவகம்;-(6) அகத்தடிமை செய்யும் அந்தணன் - திருமேனி தீண்டிப்