|
  |  |  | 
  |  | வாழ்வும் (3631) இவ்விரண்டினாலும் முறையே அடியார்களைத் தலைவராகக் கொண்டு அடுக்கும் நிலையும்,   சிவன் ஐந்தெழுத்து ஓதும் நித்த நியமமும், கை வரப் பெற்றனர் என்றும், இவற்றின் பயனாக வன்றொண்டரது   பெருநண்பும், அதனால் அவர் பாதம் பற்றும் நிலையும், அதனால் அதுவே துணையாகச் சிவலோக   வாழ்வும் பெற்றனர் இந்நாயனார் எனக் காரண காரிய முறையாக வைத்து ஓதும் சிறப்பும் கண்டு   கொள்க. | 
    |  | 5 | 
    |  | 
 | 
    |  | சரிதச் சுருக்கம்:- திருஅம்பரில் வேதம் பயிலும் மறையாளர் குலத்தில் வந்து மேம்பட்டு     விளங்கியவர் மாறர்; அவர் சிவன் அன்பர்க்கு அமுதூட்டும் பண்புடையவர்; சிவயாகங்கள் விதி     வழுவாமற் செய்து, உலகமெல்லா மின் படையப் புரிந்து சிவன் கழலேவாழ்வாவது என்ற துணிபு பெற்றார். | 
    |  | இவ்வாறு வாழும் பண்பினாற் சிவன் அடியவர்களே தமது தலைவராவார் என்ற கொள்கையில் உறைப்புடையவராய்த்     திருவைந்தெழுத்தினை ஓதும் நித்த நியம நெறியில் நின்றனர்; இதன் பயனாகத் திருவாரூரிற்     சார்ந்து வன்றொண்டப் பெருமானாருக்கு அன்பு செய்து அவரது பெருநண்பு பெற்று அங்குத் தங்கினர். | 
    |  | அவர் பாதமே பற்றுக்கோடாகக் கொண்டு, ஐம்புலனும் ஆறு குற்றமும் வென்றனர். அப்பாதங்கள்     தந்த விளக்கத்தின் துணையாலே சிவலோகத்தில் என்றும் நிலவும் இன்பம் பெற்றனர். | 
    |  | 
 | 
    |  | கற்பனை:-1. வேதங்கள் தூய வாய்மை தெரிப்பன. | 
    |  | 2. வேதங்களின் உள்ளுறையாவன சிவனடியார் வழிபாடும் சிவ வழிபாடும் என்றிரண்டுமேயாம்.     1832-ம் பார்க்க; (3631-3632). | 
    |  | 3. வேதாகமங்களுள் விதிக்கப்படுவன சிவனை முன்னாகச் செய்யும் சிவயாகங்களேயாம். | 
    |  | 4. அந்த யாகங்களின் பயனாகக் கலிநீங்கி உலக மின்புறும். | 
    |  | 5. சிவனடியார்களே உலகையாளும் தலைவர்கள். "அகில காரணர் தாள் பணி வார்கடாம், அகில     லோகமு மாடற் குரியவர்" (139) | 
    |  | 6. சிவனஞ்செழுத் தோதும் வாய்மை நித்த நியமமாகக் கொண்டொழுகுதல் சித்தந் தெளியச் செய்யும்     சிறந்த சாதனம். | 
    |  | 7. வன்றொண்டர் பாதம் தொழுது பற்றுதல் நன்னெறி சேரும் விளக்கமாக உதவிச் சிவலோகம்     அடைவிக்கும். | 
    |  | தலவிசேடம்:- திருவம்பர் - இது திருவின்னம்பர் எனவும், அம்பர் மாகாளம் எனவும் வழங்கும்;     2427-2430 பாட்டுக்களின் கீழ் உரைத்தவை பார்க்க. | 
    |  | சோமாசி மாற நாயனார் புராணம் முற்றும் | 
    |  | 
 |