| |
| உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
| சுந்தரமூர்த்தி நாயனார் துதி |
| தொகை |
| "ஆரனாரூரி லம்மானுக் காளே" | |
| (5) |
| - திருத்தொண்டத் தொகை |
| வகை |
| "துணையு மளவுமில் லாதவன் றன்னரு ளேதுணையாக் கணையுங் கதிர்நெடு வேலுங் கறுத்த கயலினையும் பிணையு நிகர்த்தகட் சங்கிலி பேரமைத் தோளிரண்டும் அணையு மவன்றிரு வாரூர னாகின்ற வற்புதனே" | |
| (40) |
| - திருத்தொண்டர் திருவந்தாதி |
| விரி |
| வேறு |
3635 | பணையுந் தடமும் புடைசூழு மொற்றி யூரிற் பாகத்தோர் துணையுந் தாமும் பிரியாதார் தோழத் தம்பி ரானாரை யிணையுங் கொங்கைச் சங்கிலியா ரெழில்மென் பணைத்தோ ளெய்துவிக்க வணையு மொருவர் சரணமே யரண மாக வடைந்தோமே. | |
| 1 |
| துதி - இனி, நிறுத்த முறையானே, "வம்பறா வரிவண்டு" என்ற திருத்தொண்டத் தொகை ஐந்தாவது பாசுரத்தினுள், "அம்பரான் சோமாசி மாறனுக்கு மடியேன்" என்ற பகுதியின் சரிதத்துக் கருத்து "ஆரூர னாரூரி லம் மானுக்காளே" என்றதனள் போந்தபடி, திருவாரூர்ப் பெருமானுக்கு நம்பிகள் ஆளாயின சரிதப் பகுதியைக் கூறத் தொடங்கிய ஆசிரியர் நம்பிகள் சரிதத்தினுள் மற்றுமோர் பகுதியினை உள்ளமைத்து ஆளாந் தன்மையைக் காட்டும் முகத்தால் அதனை நம்பிகளின் துதியாகக் கூறுகின்றார். இவ்வாறு நம்பியாண்டார் நம்பிகளால் வகுத்துக் காட்டப்பட்டது. |
| தொகை:- "வம்பறா வரிவண்டு" என்னுமித் திருப்பாட்டினுள் துதிக்கப்பட்ட ஆறு அடியார்களுக்கும் தனித்தனி அடியேனாகிய ஆரூரனாகிய நான் திரு ஆரூர் அம்மானுக்கும் ஆள் என்று முடிக்க. அம்மானுக்காளே யாகிய ஆரூரன் முன் கூறிய ஆறு அடியவர்களுக்கும் தனித்தனி யடியேனானேன் என்று கூட்டி முடித்தலுமாம். இவை பற்றி முன் உரைத்தவையும் பார்க்க. |
| வகை:- துணையும் ....துணையா - ஒப்பும் அளவும் இல்லாத இறைவரது திருவருளே துணையாகக் கொண்டு; களையும்....அணையும் - அம்பினையும் ஒளி பொருந்திய நெடிய வேலினையும் கறுத்த இரண்டு கயல்மீன்களையும் ஒத்த கண்களையுடைய |