554திருத்தொண்டர் புராணம் [வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்]

இங்கு இவ்வாற்றால் இறைவரைக் கூறி எடுத்தது இப்புராணமுடைய நாயனாருக்குச் சாக்கியமாகிய புறப் புறச் சமயத்துள்ளேயும் தாமே தலைவராக நின்றமை காட்டிய ருள்செய்தமை குறிப்பு; (3640-3041).
இந்நாயனார் சாக்கிய வேடத்துடன் நின்றபடியே சிவனை வழிபட்ட செயல் அச்சமயத் தலைவரும் சிவனேயாதலால் சமயநெறியினின்றும் விபசரித்தமையாகா தென்பது காட்டுதற் பொருட்டு இவ்வாற்றாற் றொடங்கிய தகுதியும் காண்க.
மறுசமயச் சாக்கியர் தம் வடிவு - புறப்புறச் சமயமாகிய புத்த சமயத்தவர்களது வேடம்; துவராடை முதலியவை; "பொல்லா வேடம்" (3642) என்பது காண்க."தகடன வாடையன்" (அந்தாதி).
வடிவினால் வரும் தொண்டர் - புறப்புறச்சமய வேடம் துறவாதே சிவத்தொண்டின் நிகழ்பவர்.
உறுதிவர - உறுதி வரப்பெற்றதனால்; உறுதியாவது; "ஈறில்சிவ நன்னெறியே பொருளாவ" தென்றும் (3639), "எந்நிலையி னின்றாலு மெக்கோலங் கொண்டாலும், மன்னியசீர்ச் சங்கரன்றாள் மறவாமை பொருள்" என்றும் (3641) கொண்ட மெய்யுணர்வின் உறைப்பு; வர - வருதலினால்; காரணக் குறிப்பு.
மறுவில் சரண் - மறு - குற்றம்; மலமறைப்பு; இல் - இல்லையாக்கும்; சரண் - சிவன்றிருவடி.

1

3637
தாளாளர் திருச்சங்க மங்கையினிற் றகவுடைய
வேளாளர் குலத்துதித்தார் மிக்கபொரு டெரிந்துணர்ந்து
கேளாகிப் பல்லுயிர்க்கு மருளுடைய ராய்க்கெழுமி
"நீளாது பிறந்திறக்கு நிலையொழிவே" னெனநிற்பார்,

2

3638
ந்நாளி லெயிற்காஞ்சி யணிநகரஞ் சென்றடைந்து
நன்ஞான மடைவதற்குப் பலவழியு நாடுவார்
முன்னாகச் சாக்கியர்தா மொழியறத்தின் வழிச்சார்ந்து
மன்னாத பிறப்பறுக்குந் தத்துவத்தின் வழியுணர்வார்,

3

3639
ந்நிலைமைச் சாக்கியர்தம் மருங்கலைநூ லோதியது
தன்னிலையும் புறச்சமயச் சார்வுகளும் பொருளல்ல
என்னுமது தெளிந்தீச ரருள்கூட "வீறில்சிவ
நன்னெறியே பொருளாவ" தெனவுணர்வு நாட்டுவார்,

4

3640
"செய்வினையுஞ் செய்வானு மதன்பயனுஞ் சேர்ப்பானு
மெய்வகையா னான்காகும் விதித்தபொரு" ளெனக்கொண்டே
"இவ்வியல்பு சைவநெறி யல்லவற்றுக் கில்ல" யென
உய்வகையாற் "பொருள்சிவ"னென் றருளாலே யுணர்ந்தறிந்தார்.

5

3637. (இ-ள்) தாளாளர்...உதித்தார் - திருச்சங்கமங்கை என்னும் பதியில் தாளாண்மையுடையவர்களாய் வாழ்கின்ற வேளாளர் குலத்தில் வந்தவதரித்தார்; மிக்க பொருள் தெரிந்துணர்ந்து - உண்மைப் பொருளினைத் தெரிந்தும் (அதன்பயனாய்) அதனை உணர்ந்தும்; கேள் ஆகி..கெழுமி -அன்புடையராயும் எல்லாவுயிர்களிடத்தம் அருள் உடையராயும் இணங்க ஒழுகி; நீளாது.....நிற்பார் - பிறந்தும்