[வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்] 34. சாக்கிய நாயனார் புராணமும் உரையும்555

இறந்தும் வரும் நிலையின் தன்மை மேலும் நீண்டு செல்லாது இப்பிறப்பிலேயே அதனின்றும் நீங்குவேன் என்ற கருத்துடன் அவ்வொழுக்கத்தின் நிற்பார்.

2

3638. (இ-ள்) அந்நாளில்....நாடுவார் - (ஒழுகும்) அந்நாளில் (அதன் பொருட்டுத் தமது ஊரைவிட்டு) மதில் சூழ்ந்த காஞ்சிபுரம் என்கின்ற அழுகிய நகரத்தின்கண் சென்று அடைந்து நல்ல உண்மை ஞானத்தினைப் பெறுவதற்குரிய பலவழிகளையும் நாடுவாராய்; முன்னாக....சார்ந்து-அதன் பொருட்டு முதலாகச் சாக்கியர் என்பார்கள் மொழியும் புத்தகருமங்களின் வழியிலே சார்ந்து; மன்னாக.....உணர்வார்-நிலையில்லாத பிறப்பினை அறுக்கும் உறுதிப் பாட்டின் வழியினை ஆராய்வராய்.

3

3639. (இ-ள்) அந்நிலையில்....ஓதி அந்த நிலையிலே சாக்கியர்களுடைய அரிய கலைநூலினைக் கற்று; அது....தெளிந்து -அதன்துணிபாகப் பெறப்பட்ட முடிபும் இன்னும் ஏனைப் புறமாகிய சமயங்களிற் சார்வாகக் கூறும் முடிபுகளும் உண்மைப் பொருளல்ல என்ற உண்மையினைத் தெளிந்தாராய்; ஈசர்..நாட்டுவார் - சிவபெருமானது திருவருள் கூடியதனாலே "அழிவில்லாத சிவநன்னெறியே உண்மைப் பொருளாவது" எனப்பெறும் நல்லுணர்வில் சிந்தையினை நிலைபெற நிறுத்துவாராய்.

4

3640. (இ-ள்) செய்வினையும்...எனக்கொண்டே - செய்யும் வினை ஒன்று; செய்பவனாகிய கருத்தா ஒன்று - அதன் பயன் ஒன்று - அதனைக் கொடுத்து ஊட்டுவானாகிய முதல்வன் ஒன்று ஆக உண்மை காணும் வகையினால் விதியினாற் கிடைக்கும் பொருள்கள் நான்காகும் என்ற தெளிவு கொண்டே; இவ்வியல்வு.... உணர்ந்தறிந்தார் - இந்தச் சிறப்பு இயல்புநிலை சைவநெறி யல்லாத ஏனை நெறிகளுக்கு இல்லை என்ற துணிபினையும் உய்திபெறும் தவத்தாலே சிவனருளின் துணையினால் பொருளாவது சிவனேயாம் என்பதனையும் உணர்ந்து அறிந்தனர்

5

இந்த நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
3637. (வி-ரை) தாளாளர் - தாளாண்மை மிக்கவர்; தாளாண்மை - தாள் - முயற்சி; ஆளர் - ஆள்பவர். "வேளாளர்...தாளாளர்" (பிள். தேவா - ஆக்கூர்).
தகவு - தகைமை; மேன்மை; பெருமை; தகவாவது உயிர்களை எல்லாம் கருணையுடன் கண்டு புரப்பதாகிய உழவுத்தொழில் உடைமை; தாளாளராகிய வேளாளர் என்க; "இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலையவர்"; "உழுவா ருலகத்தார்க் காணி யஃதாற்றா, தெழுவாரை யெல்லாம் பொறுத்து" (குறள்) என்பன முதலிய உண்மைகள் காண்க. "இது குடியுயர் தற்கேதுவென்ற ஆள்வினைவகையாம்" என்பர் பரிமேலழகர். அருள் - எல்லா வுயிர்களிடத்தும் இயல்பாகவே செல்லும் கருணை.
மிக்க பொருள் - மெய்ப்பொருள்; உறுதிப் பொருள் என்றலுமாம்; மிகுதல் - ஏனை எல்லாவற்றிலும் சிறத்தல்; எஞ்சுதல் என்றலுமாம்; உலகியல் வாழ்க்கையில் வரும் ஏனைய பொய் எல்லாங் கழிய எஞ்சி நிற்கும் என்றதாம்.
தெரிந்துணர்ந்து - கெழுமி - ஒளிவேன் என - என்றஇவை சமய விசாரத்தில்மனம் வைத்த நாயனார் முதலிற் செய்த முயற்சிகள்; தெரிந்துணர்ந்து - இஃது விசாரித்து அறிகின்ற சித்தத்தின் செயல்; கெழுமி - இஃது உடல் முயற்சி; ஒழிவேன் என - இது முன்னை முயற்சிகளை ஆக்கும் மனத்துணிவு; "சமயங்களானவற்றி னல்லாறு தெரிந்துணர" (1302) என்ற கருத்துக் காண்க.