| |
| கேளாகி.....கெழுமி - கேள் - உறவு - நட்பு. கேள் என்பது மக்கட் கூட்டத்துக் கும், பல்லுயிர்க்கும் என்பது ஏனையுயிர் வகைக்குமாம். கெழுமுதல் - நண்ணுதல்; இணைந்து ஒழுகுதல். |
| பிறந்திருக்கும் நிலை நீளாது ஒழிவேன் - என்க. நீறுதல் - மீள மீளப் பிறந்தும் இறந்தும் வரும் நிலைகாரண காரியத் தொடர்பாய்ச் சங்கிலிபோல வளர்ந்து வருதல். |
| ஒழிவேன் - நிலையின்றும் நீங்குவேன். நிலையினை ஒழிப்பேன் என்றலுமாம்,. |
| நிற்பார் - அவ்வழியின் முயற்சியினை மேற்கொள்வாராய்; முற்றெச்சம். |
| நிற்பார் - நாடுவார் - உணர்வார் - (3638), தெளிந்து - நாட்டுவார் - (3639) கொண்டே - என - அறிந்தார் - என்று மேற்பாட்டுக்களுடன் கூட்டி முடிக்க. |
| கேளாகிப் பல்லுயிர்க்கும் அருளுடையராய்ச் கெழுமிப் - பிறந்திருக்கும் நிலை ஒழிவேன் என்றதற்கு உயிர்களிடத்து அருளடையராய் வாழ்ந்து பிறவிப் பிணியினின்றும் விடுதலை யடைவது என்று உரைப்பாரு முண்டு. இது புத்தர் கூறும் அறம். நாயனார் இங்கு மேற்கொண்ட நிலை அஃதன்று; அதனைப் பின்னரே ஓதிச் சார்ந்தமை மேற்கூறப்படும். இங்குக் கூறியது புத்த தர்மமாகிய அறம் பற்றாது பொதுப்படக் கூறப்படும் சீவகாருண்ய ஒழுக்கம். "தேசநெறி நிலையாமை கண்டறங்கள் செய்வாராய்....கருணையினால் ஆசிலறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தல்களும் அமைப்பார்" (1300); "காவளர்த்துங் குளந்தொட்டும்...நானிலத்துள்ளோர், யாவருக்குந் தவிராத வீகைவினைத் துறைநின்றார்" (1301) என்று வரும் அரசுகள் சரித வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது, ஆளுடைய அரசுகளும் இவ்வாறே அறங்கள் செய்து சமய விசாரணையுட் புக்குச், சமணம் புகுந்துபின் திருவருளாற் சைவநெறியின் மிண்டைமை கருதுக, இங்குக் கூறியநிலை இறைவன் நினைவும் பற்றுமின்றிச் செய்யும் பசுதர்மங்கள்; இவை போகங்களைத் தந்து பிறவிக்கேதுவாம். சிவதருமங்கள் எனப்படும் பதிதருமங்கள் இவற்றின் வேறாம். அவைகளே பிறவை நிக்குவன; அந்நிலையின் உண்மையறிவு பெறுதலை மேற் (3640) கூறதல் காண்க; இவ்வேறுபா டுணராத இந்நாண் மாக்கள் பதிதருமங்களை இகழ்ந்தும், பசுதர்மங்களை உயர்த்தியும் கொண்டு பலவாறும் இழுக்கடைந்து, மிக்க பெருமிதம் வந்து உலகிற் றம்மையே சால மதித்துக் கழிகுவர். இவைபற்றி முன் உரைத்தவை பார்க்க. |
| 2 |
| 3638. (வி-ரை) காஞ்சி அணிநகரம் சென்றடைந்து - அந்நாளில் காஞ்சி புரமானது சமய விசாரணை செய்வோர்க்கு உதவியாகப் பலவகைச் சமய நிலயங்களுக்கும் கலைஞான சாதனங்களுக்கும் இருப்பிடமாய் விளங்கியது என்பது நாட்டுச் சரிதங்களாலும், மணிமேகலையில் கச்சிமாகநகர் புக்க காதையாலும் அறியக் கிடக்கின்றது. "மெய்வளந்தரு சிறப்பினா லுலகெலாம் வியப்ப; (1125); "ஆண்ட நாயகி சமயங்க ளாறு மகில யோனியு மளிக்குமந் நகரம்" (1161) என்றவையும் காண்க. "முன்னொரு சமயந் தன்னைப் பொருளென முற்றி நின்றோர், பின்னர்வான் சைவ மெய்தப் பெறினவர் பேசு மாபோல்" (நகரப் படலம் - 4) என்று உவமை முகத்தால்இவ்வுண்மையினையும் இந்நாயனார் வரலாற்றுக் குறிப்புப்படக் குறிப்பிற் கூறுவதும், "வளரிலைத் தருப்பை நுனியெனக் கூர்த்தமதியினர் தொன்றுதொட் டுடைய, பளகறு கேள்விப் பயிற்சியர் மேற்கோண் முதற்பகர் மூன்றினுந் தெருட்டி, இளையருக் குணர்த்து மிலக்கண நெறியோ ரீரிரு புலமையோர் தம்முட், களவிக லிகந்து குழாங்குழா மாகிக் கலைதெரி கழகமும் பலவால்" (மேற்படி-108) என்று விளங்கக் கூறுவதும் ஆகிய காஞ்சிப் புராணவுரை |