| |
| நீடோடு களியுவகை நிலைமைவரச் செயலறியார் பாடோர்கற் கண்டதனைப் பதைப்போடு மெடுத்தெறிந்தார். | |
| 9 |
| 3641. (இ-ள்) "எந்நிலையில்....பொருள்" என்றே - எந்த நிலைமையில் ஒருவன் நின்றானாயினும், என்னை வேடத்தைக் கொண்டானாயினும், நிலைபெற்ற சிறப்பினையுடைய சங்கரனுடைய திருவடியை மறவாதிருத்தலே உண்மையாகிய உறுதிப் பொருள் என்றே துணிந்து; துன்னிய......துறவாதே - தாம் மேற்கொண்டு தாங்கிய அந்தச் சாக்கிய வேடத்தினை நீக்காமலே; தூய.....தலைநிற்பார் - தூய்மை செய்யும் சிவலிங்கக் குறியினை மிக்கஅன்பினாலே மறவாத நிலையினில் சிறந்து விளங்குவாராய் |
| 6 |
| 3642. (இ-ள்) எல்லாம்...அறியாதார் - உலகம் எல்லாம் தமது வடிவமாக உடைய ஈசன் என்ற பதத்திற்கு வாச்சியமாகிய சிவபெருமானே முழுமுதலாம் தலைவர் என்ற உண்மை யுணர மாட்டாதவர்களே; பொல்லா.....ஆகுவார் - பொல்லாங்கு துய்க்கும் பொறியிலிகளாய்த் தமது வேடத்தினை அவனில் வேறு என்று கொண்டடொழியும் சாக்கியர்களாகிப் புன்மையின் நின்றொழுகுவர்; அல்லார்...வல்லார் - கரிய விடம் பொருந்திய கண்டத்தினையுடைய சிவபெருமானுக்கு இந்த உலகமெல்லாம் ஆளாவதன்றி மற்றில்லை என்று காணவல்லவராகி; இவர்....நிற்பார் - இந்நாயனார் அந்தச் சாக்கிய சமயத்தவர் தாங்கும் வேடத்தை மாற்றாமலே சிவன்பா லன்பின்வழியிலே நின்றொழுகுவாராய், |
| 7 |
| 3643. (இ-ள்) காணாத....காரணமாய் - கண்ணுக்குப் புலப்படாத அருவத்திருமேனிக்கும், (கட்புலப்படும்) உருவத் திருமேனிக்கும் மூலமாகிய இருப்பிடமாகி; நீள் நாகம்..சிவலிங்கம் - நீண்ட பாம்பினை அணிந்த சிவபெருமானை அறிந்து வழிபடுதற்குச் சிறந்த அடையாளமாகிய குறியாக விளங்கும் சிவலிங்கம்; நாணாது ....தெளிந்தாராய் -நாணமின்றித் தேடிய மாலும் பிரமனும் காணும்படி அருளாலே அவர்கள் நடுவே விசும்பையும் பாதலத்தையும் அளாவும் அனற்றூனாகித் தோன்றிய வடிவமேயாம் என்று தெளிந்தவராகி, |
| 8 |
| 3644. (இ-ள்) நாடோறும்..நயந்து - நாள்தோறும் சிவலிங்கத்தைக் கண்டு தொழுதபின்பே உணவு உட்கொள்ளவேண்டும் என்னும் நியமத்தினை மேற்கொள்ள விரும்பி; மாடு ஓர்...நிலைமை வர - பக்கத்திலே ஒரு வெளியிடத்திலே நிலைபெற்ற சிவலிங்கத்தினைக் கண்டு மனத்தில் நீடு செல்கின்ற மிக்க மகிழ்ச்சி பொருந்திய நிலைமை கைவரப் பெற்றமையாலே; செயல் அறியார் - இன்னது செய்வதென் றறியாராகி; பாடு ஓர்......எறிந்தார் - பக்கத்தில் ஒரு கல்லினைக்கண்டு அதனையே மலராக அன்பினில் விளைந்த பதைப்புடனே எடுத்து அச்சிவலிங்கத்தின் மேல் எறிந்தனர். |
| |
| 9 |
| இந் நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3642. (வி-ரை) எல்லாம் உடைய - உடைய - வடிவாக உடைய; ஈசன் - ஈசன் என்ற சத்தத்தின் பொருளாக உள்ளவன் எவனோ அவனே; இறைவன் - முழு முதல்வனாகிய சிவன்; "எவனுக்கு முற்றும் வடிவங்களாகும்" (காஞ்சிப்புராணம் - அமரேசப்படலம் 15) என்ற கேனோபநிடதப் பொருள் காண்க. சிவபிரானக்குச், சர்வலோகங்களும் உடைமைப் பொருளாயும், அடிமைப் பொருளாயும் இருத்தல் பற்றி ‘எல்லாமுடைய ஈசன்’ என்றருளினார் என்ற குறிப்புமாம். "எப்பொருளுமாக்குவான் ஈசனே யெனுமுணர்வும், அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் |