[வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்] 34. சாக்கிய நாயனார் புராணமும் உரையும்563

எனுமறிவும்" (திருஞா. புரா. 71); "எல்லாமுன் னடிமையே எல்லா முன்னுடைமையே எல்லாமுன் னுடைய செயலே"(தாயு).
அறியாதார்.....ஆகுவார் - அவ்வறி வறியாதார் சாக்கிய வேடம் சிவன் வடிவின் வேறு என்று புன்மையா யொழுகுவர்; பொல்லாவேடம் - என்றது முழுமு தல்வன் வேடத்தின். வேறா யெண்ணப் படுதலிற் பொல்லாமை புகுந்து என்க.
அல்லார்....ஆள் - "எவனெப் பொருட்டு மாதார மாகி யெவருந் தொழுப்படு பவன்" (காஞ்சிப் புராணம் மேற்படி 15) என்ற உபநிடதக் கருத்தும் காண்க.
வல்லார் இவர் - சாக்கியர்களுள் - அறியாதார் பொல்லா வேடப்புல்லராகுவர்; ஆனால் இவரோ ஆள் என்ன வல்லாராயினராதலின் அதுவே நல்ல வேடமாக அவ்வேடத்தினின்றவாறே அன்பரானார்.
இப்பாட்டுத் திருவாவடுதுறைப் பிரதிகளிலும் சிதம்பரப் பிரதியிலுமில்லை; முன்பின் தொடர்ந்து செல்லும் கொச்சகக் கலிப்பா யாப்பினுடன் தனிப்புகுந்து நிற்றலானும், முன்பாட்டின் பொருளும் கருத்துமே கொள்வதனாலும், இஃதன்றியே சரிதம் செல்லலானும், பிறவாற்றானும் சிலர் இதனை ஐயங்கொள்வர்.

7

3643. (வி-ரை) காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் - சிவலிங்கம் இறைவரது அருவுருவத் திருமேனி எனப்படும்; சதாசிவத் திருமேனி என்பர். "உருமேனி தரித்துக் கொண்ட தென்றலு முருவிறந்த, அருமேனி யதுவுங்கண்டோ, மருவுரு வானபோது திருமேனி யுபயம் பெற்றோம்" (சித்தி) என்று இக்கருத்தை ஆசாரியர் விளக்குதல் காண்க. காரணம் - மூலம்; ஒன்றும் புலப்படாத அருவினின்றும் புலப்படும் ஒரு அண்டவடிவான பிழம்புருவமானது பற்றி உருவமும், கைகால் முகம் முதலிய அங்கம் எவையும் புலப்படாமை பற்றி அருவமும் ஒரு சேரக் காணப்படுதலின் இதனை அருவுருவம் என்பர்; காணாத அரு - என்றது அருவுருவம்; காண்பதற்கு முன்னையின் நிலை; அருவினின்று அருவுருத் தோன்ற அம் முறையே அருவுருவினின்று உருவம் தோன்றும். ஆதலின் இடையே நின்ற அருவுருவம் மேலுள்ள அருவநிலையினையும், கீழ்உள்ள உருவநிலையினையும் காட்டி நிற்குமாதலின் காரணமாய் என்றார்; "அருவுரு வான போது திருமேனி யுபயம் பெற்றோம்" என்றது இக்கருத்து: காணாத அருஎன்றதனாற் காணும் உரு என்று கொள்க; இதனை உருமேனி தரித்த தென்ற லால் உருவிறந்த அருமேனியுள்ள தெனப்பெற்றாம் என்றனர்.
இறைவர்க்குத் தடத்தம் சொரூபம் என இரண்டு நிலைகள் உண்டு: சொரூபம் தன்னியல்பு; தடத்தம் சிறப்பு. தடத்தம் அரு - அருவுரு - உரு என மூன்று திருமேனிகளாய் வரும். இவற்றினியல்புகள் "உலகெலாம்" என்ற முதற்பாட்டின் உரையில் உரைக்கப்பட்டன. கடைப்பிடிக்க.
நாகமணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம் - குணங் குறி கடந்த பேரொளியாகிய இறைவரை ஒரு குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்டு நிகழ்வது சிவலிங்கமாம். சிவக்குறி எனப்படும். "குறித்த பூசை" (1241) "அண்ணல் பாதங், கொண்டவன் குறிப்பி னாலே கூப்பினான் றாப ரத்தை" (அரசு. நேரிசை - ஆப்பாடி 4). லிங்கம் - லிம் (லயம்): கம் - ஒடுக்கமும் தோற்றமும் குறிப்பது.
நாணாது...தோன்றியது - நாணாது - காண என்க. நாணுதலாவது மேலோராக எண்ணியிருந்த தம் அறிவுக்கு எட்டமாட்டாமை பற்றி நாணம் கொள்ளுதல்: நடு - இகலிநின்ற அவ் விருவரிடையே. தழற்பிழம்பாய்த் தோன்றியது - இலிங்க புரா

எனது சேக்கிழார் - பக்கம் - 219 - 220 பார்க்க.