[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்59

மறையவன் என்றெடுத்துச் சிறப்பித்துச் சாத்தினார் - என்று இப்பதிகம் இன்னதென விளங்க வைத்தது. பின்னரும் நம்பிகள் இப்பகுதியில் வந்து அருளிய "யாறெனக்குற வமார்களேறே" என்பது முதலிய பதிகங்களினின்றும் பிரித்துணர்த்தும் பொருட்டு ஆசிரியர் காட்டிய பேரருட்டிறமாகும். சொல்லாலும் பொருளாலும் கண்டுகொள்ளும் வண்ணம் சுட்டிக்காட்டிய நயமும் காண்க.
ஏத்துவார் - வினைப் பெயர். ஏத்துவார் - சாத்தினார் என்க.
புடை - பக்கமாகச் சூழ்ந்து; புடையின்கண்.

63

திருவாவடுதுறை
திருச்சிற்றம்பலம்

பண் - தக்கேசி

மறைய வனொரு மாணிவந் தடைய வார மாயவ னாருயிர் நிறுத்தக்
கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் கடந்த காரணங் கண்டுகண் டடியேன்
இறைவ னெம்பெரு மானென்றெப் போது மேத்தி யேத்திநின்றஞ்சலிசெய்துன்
அறைகொள் சேவடிக் கன்பொடு மடைந்தே னாவ டுதுறை யாதியெம் மானே.

(1)

தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி சித்திரப் பந்தர் சிக்கென வியற்றச்
சுருண்ட செஞ்சடை யாயது தன்னைச் சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்போற்றிபோற்றியென் றன்பொடுபுலம்பி
அருண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தே னாவ டுதுறை யாதியெம் மானே.

(12)

திருச்சிற்றம்பலம்.

பதிகக் குறிப்பு : - திருவாவடுதுறை எம்மானே! தேவரீரது அருளிப்பாடுகள் பலவற்றையும் கண்ணால் கண்டு வல்வினைக் கஞ்சி வந்தடைந்தேன்; காத்தருள்வாயாக. இப்பதிகத்தில் 5 பாட்டுக்களே கிடைத்துள்ளன! ஏனையவை சிதலரித்தொழிந்தன போலும்!
பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) மறையவன் - மார்க்கண்டேயர்; மாணி - பிரமசாரி; வாரம் - அன்பு; ஆருயிர் நிறுத்த - அப்போது இறவாமற் காத்ததன்றி என்றும் அழியாமல் நின்று இருக்கவும் அருள; அறைகொள் - சிலம்பு சத்திக்கும்; அறை - அடியவர்கள் வந்தடைந்து அறை கூவும் ஒலி என்று கொண்டு அவ்வொலியை ஏற்றுக்கொள்ளும் என்றலுமாம்; நறைகொள் என்று பிரித்தோதுவாருமுண்டு. அது பிழை;-(2) தெருண்ட - தெளிந்த; சித்திரம் - அழகும் அமைதியும் குறித்தது; சிக்கென - விரைவாக; யானையினாற் சிதைவுண்ட அவ்வப் போதே இடைவிடாது; சோழனாக்கிய - சோழர் மரபில் அரசிளங் குமாரனாக வரவும், அரசாளவும் செய்த; தொடர்ச்சி - முற்பிறவியின் காரணமாகி அந்தப் பதியிலே வந்த பிறவியின் தொடர்பும், முன்னைநிலை யறிவுடன் பிறந்த அறிவின் தொடர்ச்சியும், அன்பின் தொடர்ச்சியுமாம். புரண்டு வீழ்தல் - புலம்புதல் அன்பின் முதிர்வினாலாவன; அருண்டு - விதிர் விதிர்த்து; நடுங்கி. இத்திருப்பாட்டின் கருத்தின் மேம்பாட்டினை ஆசிரியர் மேல் (3217) எடுத்துக் காட்டியருளினர்; - (3) வழிபட்டார்க்கருள்பவன் சிவன் என்ற உண்மை திருமால் கண்ணிடந்து அருச்சித்து ஆழி பெற்ற வரலாற்றினாலறியப்படும் நிலை பற்றி அச்சரிதம் கண்டு அடியேனும் வந்து அடைந்தேன் என்றபடி; புகழினால் - தாமரைக் கண்ணன் என்ற புகழ் பற்றி; புரிந்து - அவனது அன்பை எண்ணி; தேவதேவ - பெருந்தேவனாகிய அரிக்கும் தேவனாதல் குறிப்பு; அகழும் - அகழ்ந்து என்னை ஆழத்தில் ஆழ்த்தும்; ஒன்றன்மேலொன்றாய் மூண்டு வந்து பிறவிக்குழியில் மீளாதபடி அமுக்குதலால் அகழும் வல்வினை என்